பயணங்கள்
அன்னையின்
மடியில் ஆரம்பப் பயணம்
தந்தையின்
கரம்பிடித்து தளிர்நடைப் பயணம்
மூன்று
வயதில் துவங்கும் கல்விப் பயணம்
.
ஆசிரியர்
துணையுடன் அறிவுப் பயணம் .
பள்ளிப்பருவம்
முடிந்து கல்லூரிப் பயணம்
எதிர்காலத்தை
அதுவே நிர்ணயிக்கும்
பயணம்
அடுத்து
துவங்கிடும் அலுவல் பயணம் .
பணம் சம்பாதிக்கும் சாகசப் பயணம்
.
இருபத்தைந்திற்கு
மேல் இல்லறப் பயணம்
.
துணையுடன்
துவங்கிடும் நல்லறப் பயணம்.
.
வருங்காலத்திற்கு வசதிகள்
சேர்க்கவும் ,
அறுபது
கடந்ததும் அமைதியாய் வாழவும்
வியர்வை
சிந்தியும், விவேகமாய் சிந்தித்தும்
உழைப்பை
நல்கி உயர்ந்திடும் பயணம் .
சந்ததி
பெருக்கிடும் சந்தோஷப பயணம் .
அவர்களை
வளர்க்கும் ஆனந்தப்
பயணம்.
பிள்ளைகளுக்கு
இல்லறம் அமைத்திடும்
பயணம் .
பேரக்குழந்தைகளுடன்
பேரின்பப் பயணம் .
பெற்றோர்
, உற்றோர் என
உறவுகளுடன் பயணம்
நண்பர்கள்
துணையுடன் நல்லதோர்
பயணம் .
பணி ஓய்வு பெறும்வரை உழைத்திடும்
பயணம் .
இனிமையாய்
ஓய்வினை கழித்திடும் பயணம்.
பிறந்தவர் பயணம்
இறப்பினில் முடியும் .
பாதையில்
ஆயிரம் பயணியர் வருவார்
பாதியில்
பலரும் பாதை
மாறுவார் .
இறுதிவரையில்
உடன் வருவார் எவருளர் .
முதலும்
தெரியாது , முடிவும் தெரியாது
.
இடையினில்
சிலகால வாழ்க்கைப்
பயணத்தில்
இனியது
பேசி, இனியன செய்து
இயன்ற வரையில் உதவிகள் செய்து
இந்தப்
பயணம் முடிவுற்றாலும் ,
இறந்தும்
வாழ்வோம் பலரது
மனதில்
அன்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்
Muduvai Hidayath
Dubai - UAE
+971 50 51 96 433
muduvaihidayath@gmail.com
www.mudukulathur.com
No comments:
Post a Comment