முதுமை
""""""""""""""""""""
முதுமை
சாபமல்ல
அது வரம்
முதுமை
முடிவு அல்ல
அது முதிர்ச்சி
முதுமை
தளர்வு அல்ல
அது ஓய்வு
முதுமை மெளனம் அல்ல
அது அமைதி
முதுமை
தளும்புவதில்லை
அது நிறை குடம்
முதுமையில்
குழப்பமில்லை
அது அனுபவ ஆசான்
முதுமையில்
தலைக்கணமில்லை
அது பணிவு
முதுமையில்
ஏமாற்றமில்லை
அங்கு எதிர்பார்ப்பு இல்லை
முதுமையில்
மன நிறைவு
அது இறைவனை நெருங்கும் நேரம்
முதுமை
பலருக்கு கிடைக்காத வாய்ப்பு
அதை அனுபவிப்போம்
ஆனந்தமடைவோம்
No comments:
Post a Comment