Allahu Akbar, Allahu Akbar,
(God is the greatest, God is the greatest)
Allahu Akbar, Allahu Akbar
(God is the greatest, God is the greatest)
ஓசை ஒலிக்கிறது அது பாங்காய் காதில் கேட்கிறது.
===================
”அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன் இறைவன் மிகப் பெரியவன்
Muskan name meanings is Smile, Happy.
புன்னகை, மகிழ்ச்சி.
கர்நாடக மாணவி முஸ்கான்
---------------------
வார்த்தைகள் ஏதுமின்றி புன்னகையாக வந்தது
வீரமாக வார்த்தையை ஓங்கி ஒலித்தது
அல்லாஹு அக்பர்
”தெளிவுற அறிக, திண்ணமாக இறைநேசர்களுக்கு யாதொரு அச்சமும் இல்லை, அவர்கள் கவல்வதும் இல்லை” (10:62)
”நிச்சயமாக நாம் உமக்குத் தெளிவான வெற்றியாக வெற்றியளித்தோம்” (இன்னா ஃபதஹ்னா லக ஃபத்ஹம் முபீனா – 48:1)
உலகமே உற்று நோக்குகிறது உனது வீரச் செயலைப் பார்த்து.
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் மார்கத்திலுள்ள ஈடுபாட்டினைக் காண.
----------------------------
Rk Rudhran
அவளை வணங்குகிறேன்.
சின்னப் பெண், சுற்றி வெறிமிகுந்த கூட்டம். அவள் எதிர்க்குரல் எழுப்புகிறாள். பொறுக்கித்தனத்தைக் கண்டிக்காமல் அவள் எழுப்பிய கோஷத்தை விமர்சிக்கும் கூட்டம் வாய் திறந்து இப்படி வாந்தி எடுக்கும் அளவு ஒரு சமூக நோயை வளர விட்டிருக்கிறோம்.
ஒரு சமூகம் கீழ்மைக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறது. கலவரம் வரலாம் எனும்போது கடையடைப்பு நடக்கும். ஆனால் பள்ளிகள் கல்லூரிகள் மதக்கலவரம் வரும் என்று மூடுவது அரசின் கேவலம். அங்கே சரியில்லை என்று இங்கிருந்து கூவலாம், இங்கேயும் அது நிகழும் என்பது நிஜம்.
முப்பதாண்டுகள் வெட்டிப்பேச்சு, வாய்ச்சவடால் என்று கண்முன்னே ஒரு சிறு கீறல் சீழ் பெருகும் புண்ணாகும் அளவு காலத்தை வீணடித்திருக்கிறோம்.
அந்தப் பொறுக்கிகள் அந்தச் சின்னப் பெண்ணிடம் செய்த கேவலமான கொடூரமான செயலுக்கு அவள் பின் வாங்காமல், பயமில்லாமல் திரும்பி அவர்களுக்கு எதிர் கோஷம் போட்ட அறச்சினம், தைரியம் நமக்கும் இருந்தால் இன்னொரு இத்தகைய நிகழ்வு வராத அளவு எதிர்ப்போம்.
அவள் குழந்தை, அவளுக்கிருக்கும் அறச்சினம், தைரியம் நமக்கும் இருந்தால் முகநூல் விருப்பக்குறி எதிர்பார்க்காமல் எதிர்ப்போம்.
இப்படி வெறி மிருகங்கள் என்னைச் சூழும் போது, அனிச்சையாக நான் என் தேவியை அழைப்பேன், அப்போது அவள் பெருமையை அந்தக் குழந்தை கூவியதைப் போல் அல்லாஹூ அக்பர் என்றும் உரக்க அழைப்பேன்.
Rk Rudhran
No comments:
Post a Comment