·
உகாசேவா
மருத்துவமனை
சுருக்கமான
கண்ணோட்டம் ....
அன்பிற்குரிய
நட்புகளே
ஐந்தாறு
நிமிடங்கள்
உங்களோடு
அமர்ந்திட
அனுமதி
கோருகிறேன் ....
கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்ட்டின் அன்றைய நிர்வாகம் மக்களின் நலத்தை கருத்தில் கொண்டு 2008 ஆண்டு இறுதியில் எமக்கு அளித்த நிலத்தை சீர்படுத்தி நேர்படுத்தி பணிகளை துவங்கினோம் ....
உகாசேவா
அமைப்புக்கு முதுகெலும்பாக திகழும் உறுப்பினர்கள் மற்றும்
உலக தேசங்களில் வாழுகிற நமது சமுதாயங்களின்
மக்களிடமும் உகாண்டா நிறுவனங்களிலும் கோரிக்கைகள்
வாயிலாக நிதிகள் திரட்டி மருத்துவமனை
கட்டிட அஸ்திவாரமெனும் வேர் வைத்த இறைவனின்
நாட்டத்தோடு நாமும் வேர்வை சிந்தி
உழைத்து கட்டி முடித்து இனிதாக
திறந்தோம் ....
அறுவை சிகிட்சைகள் மற்றும் உடற் பரிசோதனைகளுக்காக
அவ்வப்போது நவீன கருவிகள் உபகரணங்கள்
பொருத்தியும் பொருத்தப்பட்டும் வருகிறோம் ....
நிறைகளையும்
குறைகளையும் தாங்கி நின்று கடந்த
பதினொரு ஆண்டுகளாக உகாசேவா மருத்துவமனை சேவையாற்றுவதை
இறைவன் எமக்களித்த பாக்கியம் என்றே நாம் கருதுகிறோம் ....
உடல் நிலைகளை பரிசோதனை செய்ய
வருகிற சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் குறைந்த கட்டணத்திலும் பணம்
செலுத்திட வசதியற்ற ஏழைகளுக்கு பாதி இலவசமாகவும் வறுமையில்
வாழுவோருக்கு முற்றிலும் இலவசமாகவும் சேவையாற்றி வருகிறோம் ....
டாக்டர்கள்
நோயாளிகளுக்கு
உடனடியாக
சிகிட்சைகள் அளிப்பதும்
மருந்தளித்து
குணப்படுத்துவதும்
செவிலியர்கள்
பணிவிடைகள் செய்வதும்
ஒரு வகையான சேவையே என்பதை
நாம்
மக்களுக்கு
உணர்த்த விரும்புகிறோம் ....
பல மருத்துவமனைகளில்
பணியாற்றும்
மருத்துவர்கள்
பலவிதமான
சிந்தனைகள்
வெவ்வேறு
யோசனைகள்
வேலைப்
பளுக்கள்
நோயாளிகளை
கவனித்தல்
எந்த நோய்க்கு என்ன மருந்துகள்
கொடுக்கணும்
என்கிற நினைவாற்றல்கள்
போன்ற பற்பல விஷயங்களை தங்களது
மண்டைக்குள் ஏற்றி வைத்திருப்பார்கள்
....
டாக்டர்களின்
உள்ளார்ந்த மனசையும் உணர்வுகளையும் இறைவனை தவிற மனிதர்களாகிய
நாம் அறிந்திட இயலாது ....
சில டாக்டர்கள் சில தருணங்களில்
நோய்களின்
வீரியத்துக்கு ஏற்றவாறு
டென்ஷனோடு
பேசுவார்கள்
ஆனால் எல்லாம் நமக்காகவே என்பதை
நாம் புரிந்து கொள்ள வேண்டும்
....
சமுதாயத்தின்
மத்தியில்
உகாசேவா
மருத்துவமனை
சிறப்பாக
செயல்படுவதையும்
நம்முடைய
தொடர்ச்சியான வளர்ச்சியினையும் பரவியிருக்கும் நற்பெயர்களையும் பிடிக்காத
சில நல்ல உள்ளம் கொண்ட
அன்பர்கள்
குறைகளுக்காக
மட்டுமே காத்திருந்து எம்மை வசைபாடுவதை நாங்களும்
காணுகிறோம் அதை பற்றி எல்லாம்
எந்த கவலையும் எங்களுக்கு
எள்ளவும்
இல்லை
ஆயினும்
நாங்கள் அறிந்திடும்
குறைகளையும்
நிவர்த்தி செய்கிறோம் ....
ஆனால் அதே வேளையில் எமது
வளர்ச்சியில் அக்கரை கொண்டு சமுதாயத்தின்
பெரும்பாலான சகோதரர்கள் சமூக வலை தளங்களிலும்
நேரிலும் அலைபேசியிலும் பொதுவான சந்திப்புகளிலும் நிகழ்ச்சிகளிலும்
பாராட்டுரைப்பதும் வாழ்த்துரைப்பதும் எமக்கு மகிழ்வளிக்கிறது
....
உகாசேவா
மருத்துவமனை
முன்னேறவும்
வளர்ச்சியுறவும்
ஆதரவாளர்களின்
அன்பும்
எதிராளிகளின்
அம்பும்
எமக்கு
தேவை என்பதை நான்
உற்சாகமாக
சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்
....
என்றென்றும்
சமுதாயங்களின்
மக்களுக்காக
உழைத்துக் கொண்டே
இந்த மருத்துவமனை வளர்ச்சியுற
சளைக்காமல்
பாடுபட்டு சேவை புரிவோம்
....
நாம் நல்ல மனசோடு மக்களுக்கு
செயலாற்றுவதை இறைவன் அறிந்தவனாக இருக்கிறான்
அதுவே நமக்கு போதுமானது
....
கழிந்த
கொரோனா ஆண்டு முழுவதும் நமது
இஸ்லாமிய மக்களை நாகர்கோயில் மாநகரில்
பல ஆஸ்பத்தரிகளினுள் செல்ல அனுமதிக்காத நிலையில்
உகாசேவா மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு தலைமை மருத்துவர் 'டாக்டர்
முகம்மது ஜஹபர்' மற்றும் சிப்பந்திகள்
நிர்வாகிகள் ஆகியோரின் தடையற்ற அளப்பரிய அர்ப்பணிப்புகளோடு
சிகிட்சைகள் அளித்தோம் ....
இன்னமும்
அழிந்திடாத கொரோனா வைரஸ் நடப்பு
ஆண்டும் நீடிக்கும் என்று செய்திகள் சொல்லுகிறது
என்றாலும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக ....
கோட்டாறு
இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்ட் நிர்வாகம்
நமக்கு முன்பு போல் இப்போதும்
கூடுதலாக இடம் தந்தால் மருத்துவமனை
விரிவாக்கம் பெற்றிட மென்மேலும் பற்பல
திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு சமுதாயங்களின் மக்களுக்காகவும் நாளைய தலைமுறைகள் பயனடையவும்
ஜாதி மத பேதமின்றி செயலாற்ற
நாம் காத்திருக்கிறோம்
இன் ஷா அல்லாஹ்
....
நம் அனைவருக்கும்
நோயற்ற
வாழ்வையும்
நல்ல ஆரோக்கியத்தையும்
நீண்ட ஆயுளையும்
கருணையாளன்
அல்லாஹ் தந்தருள்வானாக ....
புகழனைத்தும்
இறைவனுக்கே ....
அப்துல்
கபூர்
31.03.2021 ....
முகவரி
குமரி மாவட்டம் நாகர்கோயில்
கோட்டாறு
இளங்கடை
கச்சேரி ரோடு சந்திப்பு ....
உகாசேவா
மருத்துவமனை
நாகர்கோவில்
நகரில்
கோட்டாறு
பகுதியில்
பனிரண்டு
வருடங்களாக
செயல் பட்டு வரும் ஒரு
சிறப்பு
மருத்துவமனை.
ஏழை எளிய மக்களின்
ஹெல்த்
தேவையை
முற்றிலும்
இலவசமாக
இந்த மருத்துவமனை
கையாளும்
விதம் மிகவும்
பாராட்டுக்குரியது.
முற்றிலும்
நன்கொடையாளர்
உதவி மூலம் நடத்தப்படும்
இந்த மருத்துவமனை
சேவை ,அர்ப்பணிப்பு
உண்மை,
நேர்மை என்ற
தூண்களால்
கட்டி எழுப்பப்
பட்டுள்ளது
கண்டு என் போன்ற
மருத்துவர்களால்
வியக்காமல்
இருக்க
முடியவில்லை.
இந்த சீரிய சிறப்பு மருத்துவ
மனையின்
தூய பணிகள்
சிறப்புடன்
நடக்க நிலத்தை
வழங்கிய
ஊர் நிர்வாகத்தை
நான் பாராட்டுகிறேன்.
மகளிருக்கான
மெடர்னிடி
டிவிசன்
ஒன்றை நிறுவி
ஏழை எளியோருக்கு முற்றிலும்
இலவசமாக
பிரசவம் போன்ற
அத்தியாவசிய
மருத்துவ சேவை
களை மேலும் விரிவாக்க இருக்கும்
இவர்களின்
உயர் நோக்கம்
பாராட்டுக்குரியது.
சமீபத்தில்
கோட்டாறை சார்ந்த
சகோதரர்
சாகுல் அமீது என்ற
நபர் பத்து லட்சம் செலவில்
நவீன வெண்டிலேட்டர் ஒன்றை
இந்த மருத்துவமனைக்கு
நன்கொடையாக
தந்துள்ளார்.
சமீபத்தில்
நிகழ்ந்த அந்த
நிகழ்ச்சியில்
கலந்து
கொண்டதை
நான் மிகவும்
பெருமையாக
கருதுகிறேன்.
மருத்துவமனை
மேலும்
சிறப்புடன்
வளர வாழ்த்து
கிறேன்.மருத்துவமனை
நிர்வாகிகளை
மனமாற
பாராட்டுகிறேன்.
--------------------------------
உகாண்டாவில் உழைப்பு; உள்ளூரில் சேவை!- முகமது கபூரின் மனிதநேயம்
-------------------------------------------------------
அஸ்ஸலாமு
அலைக்கும்
எல்லாபுகழும்
இறைவனுக்கே..
உகாசேவாவில்
எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன்
பகிர்கின்றேன்..
கிட்டதட்ட
ஒரு ஆறுமாதகாலமாகவே என் உடல்நிலையில் ஒருமாற்றம்
சோர்வு தளர்ச்சி உண்ணும் உணவு ருசிஇல்லாமை
இது போன்ற காரணங்களால் என்
உடல் எடையும் கிட்டதட்ட 15 கிலோ
குறைந்துவிட்டேன் நண்பர்கள் கூறியபடி மிகுந்த மனசோர்வுடன் உகாசேவா
மருத்துவமனை டாக்டர் ரியாசிடம் காண்பித்தேன்
அவர்சில பரிசோதனைகளை செய்து ரிசல்டை பார்த்துவிட்டு
இதற்கு சிகிட்ச்சை ஆசாரிபள்ளமலதான் பெஸ்ட்
அங்கே நெஞ்சகம் என்று ஒரு பிரிவு
இருக்கிறது அங்கே செல்லுங்கள் என்று
சொன்னார் நானும் பெட்டி படுக்கையோடு
சென்றேன் அந்த நேரத்தில் கொரோனாபாதிப்பு
உச்சகட்டத்தில் இருந்த தால் அவர்களுக்கு
என்னை சிகிட்ச்சை அளிக்க இயலாது என்று
சொல்லிவிட்டார்கள்
இப்படி
இருக்க நோயின் தாக்கத்தால் என்னுடைய
பேச்சும் குளறுபடியாக நாக்கு பேச முடியாத
சூழ்நிலை ஆகிவிட்டது
கனத்த இதயத்துடன் இறைவன் விட்ட வழி
என்று உகாசேவா மருத்துவமனை தலைமை
மருத்துவர்
டாக்டர்
ஜஹபர் விபரம் முழுவதும் கேட்டறிந்து
இனியும் தாமதித்தால் உங்கள் சூழ்நிலை வேறுமாதிரி
ஆகிவிடும் என்று சொல்லி என்னுடைய
பரிசோதனை ரிப்போர்ட்டை எல்லாம் சரிபார்த்து நான்
உங்களுக்கு நம் மருத்துவமனையில் வைத்து
சிகிட்ச்சை தருகுறேன் ஆனால் பத்து நாட்கள்
பொருமையாக இருந்து மருந்து மாத்திரை
டிரிப் போன்றவை போட வேண்டும்
என்று சொன்னார் நானும் தங்கி அந்த
சிகிட்ச்சையை மேற்கொண்டேன் என் நோயின் தாக்கமும்
குறைந்து இன்று இறை அருளால்
என் உடல் எடை ஐந்து
கிலோகூடிவிட்டது
Shaik Mohaideen
No comments:
Post a Comment