Abdul Gafoor is in Kampala, Uganda.
உக்ரைன்
வரலாறு ....
நெருக்கமாகவும்
சுருக்கமாகவும் தருகிறேன்
கொஞ்சம்
உள்ளே நுழையுங்கள் ....
ஐரோப்பிய
நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகிற பணக்கார நாடுகளுக்கு மத்தியில்
மிகவும் ஏழ்மையான தேசம் உக்ரைன்
....
பனியும்
குளிரும் கைகள் குலுக்குகிற
இந்த தேசத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே
ஏராளம்
மக்கள் வசிக்கின்றனர் ....
ஐரோப்பா
கண்டத்தில் அதிகமான விவசாய நிலங்களை
தன்னகத்தே கொண்டிருக்கும் தேசமும் இதுவே என்பதும்
நமக்கு ஆச்சரியமளிக்கிறது ....
முன்னாள்
சோவியத் யூனியனான
ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நாடு உக்ரைன் ....
நான்கு
கோடியை தாண்டுகிற எண்ணிக்கையில் மக்கள் அமைதியாக வசிக்கிற
இந்த பெரிய தேசத்தை வல்லரசான
ரஷ்யா கையகப்படுத்த துவங்கிய போர் உலக தேசங்களில்
இன்றைய தலைப்புச் செய்திகள் ....
உக்ரைன்
என்பது முன்னர் ரஷ்யாவின் ஒரு
பகுதியாக இயங்கிய பிரதேசம் என்பதும்
பின்னர் தனி நாடாக பிரிந்து
சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது ....
ரஷ்யப்
படைகள் உக்ரைன் நாட்டுக்குள் நுழைவது
என்பது படையெடுப்பல்ல எங்கள் நிலப்பரப்புக்குள் நாங்கள்
செல்கிறோம் அவ்வளவுதான் என்று ரஷ்ய அதிபர்
'விளாடிமிர் புதின்' தம்மை நியாயப்படுத்தி
அறிக்கை விடுகிறார் ....
தற்போதைய
உக்ரைன் நீண்ட நெடிய வரலாறுகளையும்
இன்னல்களையும் சந்திந்த தேசம் ....
பெலாரஸ்
நாடு போலந்து நாடு
மற்றும்
ரஷ்யாவின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக
உக்ரைன் ஒரு காலத்தில் வளமாக
இருந்தது ....
நம்முடைய
தமிழகத்தை
'ராஜராஜ
சோழன்' ஆட்சி செய்த
அதே கால கட்டத்தில்
'கிவியன்ரஸ்'
என்கிற பேரரசு உக்ரைனை வலிமையாக
ஆட்சி செய்ததாக வரலாறுகள் சொல்லுகிறது ....
பின்னர்
காலப் போக்கில்
போலந்து
லிதுவேனியா ஆஸ்திரியா ரஷ்யா
ஆகிய நாடுகளின் மன்னர்கள் உக்ரைன் நாட்டை பங்கு
போட்டு தங்கள் இஷ்டம் போல்
பிரித்து எடுத்துக் கொண்டனர் ....
அன்றைய
உக்ரைன் நாட்டின் பெரும்பகுதியை போலந்து நாடு தமது
வசப்படுத்தியது ....
அதற்கு
எதிராக உக்ரைன் மக்கள் கிளர்ச்சி
செய்ததால் 'கொசாக் கிளர்ச்சி' என்று
வரலாற்று ஆசிரியர்களால் அன்று அழைக்கப்பட்டது ....
இத்தகைய
உரிமைப் போரில் பல்லாயிரம் மக்கள்
இறந்தனர் என்று சரித்திரம் கூறுகிறது ....
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி உக்ரைன்
நாட்டின் பெரும் பகுதிகளை ரஷ்ய
மன்னர்கள் ஆக்கிரமித்து வசப்படுத்தினர் ....
இப்போதைய
உக்ரைன் நாட்டின் தலைநகரம் 'கீவ்' என்றே அழைக்கப்படுகிறது
....
பல ஐரோப்பிய நாடுகளின்
தீவிரமான
படையெடுப்பு ஆக்கிரமிப்பால் உக்ரைன் தேசம் தனது
தாய்மொழியை இழந்தது மட்டுமல்லாமல் தனது
பெரும்பான்மை நிலங்களையும் இழந்து தவித்தது
....
இரும்புத்
தாது நிலக்கரி மற்றும் கனிம வளங்கள்
அதிகம் கிடைப்பதால் வேகமான தொழில் வளர்ச்சி
காணப்பட்டு வேலை வாய்ப்பு பெருகி
ஐரோப்பாவிலேயே பெரிய தொழில் மையமாக
உக்ரைன் தேசம் உருவெடுத்தது ....
அன்றைய
நாட்களில்
ரஷ்யாவோடு
இணைந்திருந்த உக்ரைனுக்குள் தமக்கு தேவைப்படுகிற ஆயுதங்கள்
மற்றும் அணு ஆயுத முயற்சிகள்
இவைகளை ரஷ்யா நடாத்தியது ....
சோவியத்தின்
புகழ்பெற்ற விஞ்ஞானிகள் விளையாட்டு வீரர்கள் கலைஞர்கள் பெரும்பாலோர் உக்ரைனில் உருவானார்கள் ....
உக்ரைன்
நாட்டின் எல்லைகளாக
வடகிழக்கு
பகுதியில்
உருசியா
நாடு
வடக்கு
பகுதியில்
பெலருஸ்
நாடு
மேற்கு
பகுதியில்
போலந்து
சிலோவாக்கியா
ஹங்கேரி
நாடுகள்
தெற்கு
பகுதியில்
உருமேனியா
மல்தோவா நாடுகள்
கருங்கடல்
ஆகியன அமையப் பெற்றுள்ளது
....
இன்று துவங்கிய போரில்
உக்ரைனின்
சில மாநிலங்களையும் எல்லைப் பகுதிகளையும் ரஷ்ய
நாடு ஆக்கிரமித்ததாக செய்திகள் கிடைக்கிறது ....
உக்ரைனுக்கு
அமெரிக்கா ஆதரவளிக்கலாம்
போர் பரவுகிற ஆபத்தை வலுவான
நாடுகள் தடுக்காவிட்டால் பக்கத்து நாடுகள் பாதிப்புக்குள்ளாகி பெரிய
போராக வலுவெடுக்கும் சூழல்கள் உருவாகலாம் ....
உக்ரைனையும்
அங்கே வாழுகிற மக்களையும்
வல்லோன்
இறைவன் காப்பாற்றுவானாக ....
அப்துல்
கபூர்
24.02.2022 ....
அழகிய குறிப்பு ....
நட்புகளுக்காக
ஆர்வமாக பதிவிட
உக்ரைன்
பற்றி இணைய தளத்தில்
வரலாறுகளை
தேடுகையில்
கம்பாலாவில் ரைன் ....
No comments:
Post a Comment