Thursday, July 8, 2021

இறைசிந்தனை என் அன்னைக்கே! அர்ப்பணம்يا محمد ﷺ ! அமானிதமாய் காப்பாய் يا الله !

 Noor Saffiya


இறைசிந்தனை

        என் அன்னைக்கே!

         அர்ப்பணம்يا محمد !

              அமானிதமாய்

                காப்பாய் يا الله ! 

_  ம்மா எனும்

அரவணைப்பே!

அழகாய் ஆரம்பமாகும்

அல்லாஹ் தரும்

அருட் பெருங் கொடையே!

_  மீன் எனும் சொல்

ஆதரவாய் நீடித்து!

ஆக்கம் அளிக்கும்

ஆற்றல் வாய்ந்ததே!

_  றைவனின் தாத்தே!

இறுதிவரை சிஃபாத்தே!

இறுதியிலுமே!

இறையாய் செல்லுமே!

_  மானின் விதை

ஈந்த தாயினால்

ஈன்ற அன்னைக்கு

ஈருலகிலும் சோஃபனமே!

_  லகினில் ஆள வாழ

உத்தமரின் வாழ்வு

உன்னதமாய் சொல்லி

உலகலாவிய மொழி

உன்னுள்ளாக்கியே!

உயர்வாக்க இறையிலே!

உறவாகி காத்தவளே!

_  ஞ்சலாய் தென்றலிலே!

ஊராருக்கு கேட்கும்

ஊற்றாய் பாலூட்டி!

ஊர் உறங்கினாலும்!

ஊமையாய் மடியிலே!

ஊண் கொடுத்தவளே!

_  ட்டுத்திக்கும் நீயும்

எல்லா புகழும் பெறவே!

எல்லாம் வல்லிறைவனில்

எதிலும் வெற்றியாய்!

எடுத்துக்காட்டாய்!

எந்நேரமும் துஆ_வால்

எம்மானின் நிறைத்தே!

என் ஹபீப் நேசமானவளே!

_  ந்தலர் புகழாரமும்!

ஏகோனின் புகழ்பாடியும்!

ஏற்றமாய் தாலாட்டியும்!

ஏக்கமாய் உன்னிலே!

ஏக்கம் தீர்க்கவே!

ஏட்டிலும் எழுத்திலுமே!

ஏழு வானம் பூமியிலுமே!

ஏஞ்சலாய் வாழ நினைப்பவளே!

_  க்கியம் என்பதையும்!

ஐந்து கட்டளைகளையும்!

ஐந்து வக்த்_களையும்!

ஐம்புலன் அடக்கமும்!

ஐக்கியமாய் சிரமும்!

ஐந்து வக்தில் பணிந்தே!

ஐய்யமற வாழ்வாக்கினவளே!

_  ற்றுமையின் சின்னம்!

ஒன்று பட்ட வாழ்வும்!

ஒருவனில் நிலைத்தே!

ஒரே தூதர் நபி வழியாய்!

ஒரு மனதாய் வாழ்ந்தே!

ஒருமித்த கருத்தாய்!

ஒருங்கிணைந்தாலே!

ஒவ்வாது தீதுமே என்றவளே!

_  ங்கி உரக்க குரலினிலே!

ஒதுவோம் கலிமா ஷஹாதத்தே!

ஒசை கேட்கும் கல்பில்

ஹு ஹக்கே!

ஓர்மையாய் கேட்பவர்க்கே!

ஓயும் நாளதினிலே!

ஒருவனின் உதவியுடனே!

ஓர் அற்புத உம்மத்தாவாய்!

ஒடுங்குவாயென என்றவளே!

_  வியம் பேசேல் எனும்!

ஔலியா நற்குணமதை!

ஔதசியம் என்று உன்னிலானால்!

ஔடதம் என்பதில்

சந்தேகமில்லை!

ஔபசாரிகம் தன்மையே

நபிவழி ஏற்று இறைவழியானால்!

ஔசித்தியம் பெறும்

பலம் பெற்று மகிழுமே!

ஔரசனுக்கும் கிடைத்தே

பாக்யசாலியாய்!

ஔடதமாகி இறைரசூலில்

மேன்மை காண்பாய் என்பாயே!

_  முவ்வுலகினில் நிம்மதியாகவும்!

மூன்று கொள்கை

பசி,தனி,விழித்திரு என்றாயே!

முப்புள்ளி முடிவின்

ஆரம்பம் என்றாயே!

முப்புள்ளி என்பது

தாய்,கணவன்,பிள்ளை

காப்பு என்றாயே!

முப்புள்ளியில் முப்பரிமாண அளவுகோலாய்!

முழுவதுமாய் கதைபோல் கதைத்தாயே!

என்றால் அம்மா!

அன்னைக்கு நிகர்!

அன்னை மட்டுமே!

அன்னை போல் வருமா!

அன்னை காப்பாய் ரப்பே!

அமானிதத்துடனே!

அரவணைத்தே பேணி!

அன்பெனும் கோட்டையிலே!

ஆதரவளிப்பாயே!

😭😭😭😭😭😭😭

அன்னை செய்த அமல்!

அளப்பரியதே அதையே!

அதிகப்படுத்தியதையே!

அதன் பொருட்டு காப்பாயே!

அஸ்மாவுல் ஹுஸ்னா_வின்

அளவுகோலாய் எடுத்தே!

அதில் திழைப்பாயே!

அல்லாஹ்வே உன் திருமாமமே!

அஹ்மதரின் ஸலவாத்

          துதித்து நாவினில்

                நனைவோம்!

                     آمــين.آَمِيـٍـِنْ آَمِيـٍـِنْ  

                     يَآ رَبَّ آلٌعَآ لَمِِيِنْ  !🌹

                    يارحمة اللعالمين !🌹

                 🤲🤲🤲🤲🤲

                   💞 يامُحَمَّدٍ 💞

🖋நூர்ஷஃபியா காதிரியா

No comments: