Friday, July 16, 2021

💞இறைசிந்தனை ........ 🌹﷽🌹 ..... ஒளியாய் சூழ்ந்தவனே!

 Noor Saffiya



💞இறைசிந்தனை

........ 🌹﷽🌹 .....

ஒளியாய் சூழ்ந்தவனே!

மையிருட்டான நேரம்

மன்னர் முஹம்மதே!

பையிருட்டான நேரம்

படைத்தோன் காத்தானே!

மையிருட்டினிலே

மணி விளக்காய்!

மண்ணறையிருட்டினிலே

சிராஜொளி தாங்களே!

ஒளியேற்றிட நிலாவின்

ப்ரகாசமே!

ஒளிச்சுடர் முத்துக்களான

பிம்பமாய்!

சித்தரிக்க இயலாத படியே

சாட்சியாளனில்

சங்கமிக்கும் நேரம்!

ஜோதி மா மணியாய்!

ஜொலித்து அருளுடனே!

ஜீவனில் ஆசி மழையாய்!

ஜீவிக்கும் என் காமில் ஷெய்கே!

மேல் நோக்கும் திசை எல்லாம்

மேலோன் ஜோதியாய்!

கீழ் நோக்கும் திசை எல்லாம்

கண்மணி ப்ரகாசமாய்!

வலப் பக்கம் நோக்கின்

வல்லோன் விழுஞாயிறு

வெங்கதிரொலியாய்!

இடப் பக்கம் நோக்கின்

இதய துண்டு இரசூலின்

இராக் கதிரொளியாய் 🌙!

முன் பக்கம் நோக்கின்

முன்னோனின் அழகு

விண்மணி 🌟 ஒளியும்!

பின் பக்கம் நோக்கின்

பாச நபியின் 🌙 பேரழகு

நிறை நிலா ஒளியும்!

கல்பினை நோக்கின்

கருத்த இருள் அகல

கண்மணி ஒளியானது

காப்பவன் _தாத்_ தான்!

நிறைந்த மனதுடனே

நிறைவாய் பார்க்க

நானில்லை அங்கே!

நாற்றமும் இல்லை!

தூர் வார ஒளி கீற்று!

துருவி துருவி ஆராய!

தீது 🔥தீயில் கருகியதே!

தாத்தும், ஷிஃபாத்தும்

தரிசனமானதே!

நீ அதில் குடியிருக்க!

அவன் வசிக்கும் தலமாய்!

அரங்கேற்றமானதே!

அங்கசுத்தி அகசுத்தி

அலங்கார குடிலானதே!

ப்ரபஞ்ச சக்தியின்!

பேரின்ப தென்றலும்!

பேசும் மூங்கிலாய்!

பெருமிதம் ஆனதே!

பற்றற்ற பரிசுத்த நிலை

பற்றிடவே பற்றியதும்!

பெற்றது புனித பலன்!

பற்றியதில் படைத்தோன்!

பற்றியதன் ப்ரதியே!

உயிர் நிலை உயர்ந்திட!

உயிரின் உணர்வலை!

உயிரற்ற உயிருள்ள

உடையோன் தன்மை!

ஊடுருவலின் அழகிய

உண்மை ஒளிச்சேர்க்கை திருவிளையாடலானதே!

ஃபனா_வின் பக்குவம்

ஃபனா_வாகினாலே!

ஃபனா ஃபில்ஷெய்க்!

ஃபனாவாகி மலர்ந்ததே!

சுபுஹானல்லாஹ்!

ஒளியால் சூழ,  சூழ  يارب!

ஒளியின் அலைகள் يا نور!

ஒலியும் தொணிக்கும்!

ஒளியில் ஜொலிக்கும்!

ஒளியின் வர்ணஜாலம்!

ஒவ்வொரு கருத்தினை!

உன்னுள் வர்ணிக்கும்!

உன்னுள் சக்தி பிறக்கும்!

                   🌹الحمد لله شكرا لله🌹         

                           يا رب!   يا لله!    

                           يا رسول الله

             🤲🤲🤲🤲🤲🤲

     அஹ்மதரின் ஸலவாத்

          துதித்து நாவினில்

                நனைவோம்!

                     آمــين.آَمِيـٍـِنْ آَمِيـٍـِنْ  

                     يَآ رَبَّ آلٌعَآ لَمِِيِنْ  !🌹

                    يارحمة اللعالمين !🌹

                 🤲🤲🤲🤲🤲

                   💞 يامُحَمَّدٍ 💞

🖋நூர்ஷஃபியா காதிரியா

No comments: