Saturday, July 3, 2021

எழிலோவியம்!

 Sabeer Ahmed

எழிலோவியம்!

என்

பிம்பம் மிதக்கும் ஓடை

இள

மூங்கில் வளைத்து பாலம்

கொடுங்

கிருமி நுழையாக் காடு

கார்

மேகம் முகிழ்க்கும் வனம்

தூய

தென்றல் உலவும் கானகம்

தேன்

ஊறி மலர்ந்த பூக்கள்

இசை

பாடிப் பறக்கும் பூச்சிகள்

துளி

சாயம் நீங்கா பச்சையம்

என

சிலிர்க்க வைக்கிறது கலைநயம்!

சிறு

கூரை வேய்ந்த குடிலும்

சில

நினைவுகளோடு நானும்

என

இங்கு

வாழக் கிடைத்தால் பாக்கியம்!

-சபீர்



Painting: Dr Shahnaz Sabeer Ahmed



No comments: