Sunday, January 17, 2021

மனமே மனமே ஏ ஏ

மனமே மனமே பாவம் செய்வதேன்!

பாடியவர்: அதிரை ஜஃபருல்லாஹ்

வரிகள்: கவிஞர் மலிக்கா ஃபாரூக்

படத்தொகுப்பு: முஃப்தி இனாயத்

மனமே மனமே பாவம் செய்வதேன்

மரணத்தை மறந்தே மமதைகொள்வதேன்

மரணசிந்தனை நினைவில் வரலையா!

இல்லை "மனிதா

மரணமென்பதே உனக்கு இல்லையா!

பூமியில் இறைவன் படைத்த அனைத்துமே

புனிதமனிதனே உனக்காகவே!

அட உனக்காகவே

இங்கு

சிறிதுகாலம் நீ இளைப்பாறவே!-இதில்

பொழுதுபோக்குகள் நிறைந்து கிடக்குது

புண்ணியங்களும் குவிந்து இருக்குது

நிறைய குவிந்து இருக்குது

புண்ணிய வழியைப் புறந்தள்ளிவிட்டு

பாவத்தின் பக்கம் மனது போவதேன்

பாதை மாறியே பயணம் செய்வதேன்

உலகவாழ்க்கையில் உன்னைத்தொலைத்ததேன்

உண்மையை உதறி உள்ளம் அலைவதேன்.,

மனமே மனமே

உனைத்தான் சொல் மனமே

கூடிக்கூடியே கோள்சொல்கிறாய்

குடும்பத்தைப்பிரிக்க புறஞ்சொல்கிறாய்

கூத்து கும்மாளம் தேடிப்போகிறாய்

கூட்டுக்கொள்ளையில் பங்குகொள்கிறாய்

மண்ணிலும் பொன்னிலும் மயக்கங்கொள்கிறாய்

(மண்ணிலும்)

மதுவிலும் மாதுவிலும் மனதைத்தொலைகிறாய்

மதப்போர்வையில் தன்னை ஒளித்துகொண்டு

மனிதனைக்கொன்று

மனிதம் கொல்கிறாய்

மனமே மனமே

நிலையற்ற மனித மனமே

ஃபேஷன் ஃபேஷனென

வேசமிடுகிறாய்

பெருமைப்பேசியே

பொழுதைக்கழிக்கிறாய்

வர தட்சணையை வாங்கிக் கொண்டு நீ

வறுமையுடையோரை வதைசெய்கிறாய்

வட்டிக்கு வட்டி வாங்கிகுவிக்கிறாய்

வரம்புமீறியே வாழநினைக்கிறாய்

இப்படி,,,,,,,,,,

பாவத்தின் பக்கம் மனதுபோவதேன்

புண்ணிய வழியை மறந்துபோனதேன்

மரணசிந்தனை மனதில் வரலையா

இல்லை மனிதா

மரணமென்பதே உன் நினைவில் இல்லையா.

இம்மையில் வாழ்வே சிலகாலம்தான்

உண்மையில் வாழ்க்கை

மறுமையில்தான் -

(இம்மையில்)

இதை

மனதில் கொண்டுயிங்கு வாழ்க்கை நடத்திடு

மரணித்தப் பிறகுமறுமையில் ஜெயித்திடு....

மனமே மனமே

இறையை நேசித்தே

இன்பம் பெறுவாய் தினமே..


No comments: