Tuesday, January 5, 2021

அரசுக்கு ஒரு வேண்டுகோள்

 Vavar F Habibullah

கொரோனா தொற்று இன்று வரை

தமிழகத்தை அல்ல உலகை விட்டு

விலகவில்லை. மாறி வரும் வைரஸ்

தனது வீரியத்தை காட்ட மீண்டும்

விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இங்கிலாந்து பிரதமர் தனது

முக்கிய இந்திய வருகையை

தவிர்க்க இந்த கொரோனா

வைரஸ் மிக முக்கிய காரணம்.

இந்த நிலையில் தமிழக அரசு

தியேட்டர்களில் நூறு சதவீத

சீட்டுகளை தாராளமாக நிரப்ப

அரசாணை வெளியிட்டிருப்பது

மிகவும் அதிர்ச்சி தருகிறது. ஒரு

சாதாரண பொழுது போக்கு

நிகழ்வுக்கு தமிழகத்தின் எல்லா

சினிமா தியேட்டர்களையும்

அரசு திறந்து விட சம்மதம் தந்து

இருப்பது, மருத்துவ சமூகத்தை

பேரதிர்ச்சி கொள்ள வைத்து

விட்டது.

கொரோனாவோடு போராடி

டாக்டர்களாகிய நாங்கள்

தளர்ந்து விட்டோம். மிகவும்

சோர்ந்து விட்டோம். நீண்ட

காலம் நோயை எதிர்த்து

போராடும் நிலையில்

இப்போது நாங்கள் இல்லை.

சுத்தமாக மூடி அடைக்கப்பட்ட

ஏசி ஹாலில் மூச்சு முட்ட மக்களை

அடைத்து வைத்து சமூக இடைவெளி

பேணும் சூழலில், அரசே அதை

உடைத்து நாசம் செய்யலாமா!

கொரோனா அச்சுறுத்தல் இல்லை

என அடிமட்ட சாதாரண மக்களை

நம்ப வைத்து அவர்களை தியேட்டர்

பக்கம் வரவழைக்க முயலலாமா!

அரசுக்கு இப்போது மக்கள் நலம்

முக்கியமா அல்லது சினிமா நலம்

முக்கியமா என்பதே கேள்வி!

மாணவர்களுக்காக பள்ளிகளை

திறக்க யோசிக்கும் அரசு காற்று

புகாத சினிமா ஹாலில் மட்டும்

பொது மக்களை மூன்று மணி

நேரம் அடைத்து வைக்க

முன் வரலாமா!

தியேட்டர்களில் விலையில்லா

வைரஸை இலகுவாக பெற்றுக்

கொள்ளும் இளைஞர்கள்

குழந்தைகள் அதை வீட்டில்

உள்ள முதியவர்களுக்கும்

பரப்பிட உதவுவர் என்ற

அடிப்படை உண்மையை

சுகாதாரத்துறை அதிகாரிகள்

கண்டு கொள்ளாமல் போனது

மிகுந்த அச்சம் தருகிறது.

கொரோனா இதன் மூலம்

மேலும் விஸ்வரூபம் எடுக்கும்

என்பதே என் போன்ற சீனியர்

டாக்டர்கள் கருத்து.

அரசு இதை தடுத்து நிறுத்த

வேண்டும். எம்ஜிஆரும் 

ஜெயலலிதாவும் கூட

இது போன்ற தவறு நடக்க

அநுமதி தர மாட்டார்கள்.

வருமுன் காப்பதே இந்த

நேரத்தில் அரசின் கொள்கை

யாக இருக்க வேண்டும்.

இது கொரோனா நோய்

தடுப்பு சிகிச்சையில் முழு

மூச்சாய் உழைத்த எம் போன்ற

மூத்த மருத்துவர்களுக்கு அரசு

தரும் பேரதிர்ச்சி. இது வரை

கட்டி காத்த நோய் கட்டுப்பாடு

இனி சிதைந்த விடும். நேற்று

தான் கொரோனா அச்சுறுத்தல்

காரணமாக ஐந்து நட்சத்திர

ஹோட்டல்களை மூடி விட

அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில்

சினிமா தியேட்டர்களில்

100%  occupancy என்பது

நோய் தடுக்க உதவுமா

நோய் பரவ உதவுமா

தமிழக மக்களே நீங்களே

முடிவு செய்து கொள்ளுங்கள்...!

dr habibullah

Senior Consultant Paediatrician

Former Honorary Secretary

Indian Medical Association

Kanyakumari district branch



Vavar F Habibullah

No comments: