Friday, January 15, 2021

பள்ளிவாசல்

 

பள்ளிவாசல் 

Yembal  Thajammul Mohammad

ஏம்பல் தஜம்முல் முஹம்மது

 

எங்கெங்கு தேடினும் காணாத நிம்மதி

இருக்கும் இடமன்றோ அல்லாஹ்வின் சந்நிதி

பங்கம் இல்லாமலே பல்கும் பெருநிதி

படைத்தவன் கொடுக்கின்ற சாந்தியே வெகுமதி!’’

 

 சந்நிதி என்பது இறைவனின்திருமுன்’. எனினும் அதற்கு உகந்த இடமாக நம் மனதில் முதலில் தோன்றுவது பள்ளிவாசல் எனும் இறையில்லமே.

 

மனித குல வரலாற்றை யார் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளட்டும்.இறைநம்பிக்கையாளர்களுக்கு முதல் மனிதரும் முதல் இறைத் தூதரும் ஆன ஆதம்-அலைஹிஸ்ஸலாம்- அவர்களில் இருந்தே தொடங்குகிறது. ஆதம்-அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அன்னை ஹவ்வா(அலை) அவர்களும் உலகில் சந்தித்துக் கொள்ளும் வரையில் மட்டுமல்ல,அதற்குப் பின்னரும் கூட அவர்கள் தமக்கென்று ஓர் இல்லத்தை முதலில் கட்டிக் கொள்ளவில்லை. இறைவனின் ஆணைப்படி மக்காவில் இருந்த ஒரு மணல்மேட்டில் ஆதம்-(அலை) அவர்களால்- முதல் மனிதரால் உலகில் முதன்முதலாக எழுப்பப்பட்ட கட்டிடமே இறை இல்லமான கஃபாதான்!உலக வரலாற்றில் முதலில் கட்டப்பட்டது கஃபாதான்

 

கஃபா < கஃபதுல்லாஹ்அல்லாஹ்வின் இல்லமான இந்த இடம் உலகிலேயே ஆதம்-ஹவ்வா இணையருக்கு உவப்பான இடமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு இடையிலான காதலன்பு சிந்தாமல்,சிதறாமல் எப்படி முழுமையானதாக இருந்திருக்குமோ அதுபோல அவர்களுக்குக் கஃபதுல்லாஹ், பரிபூரணமான நிம்மதியை- மன இன்னமைதி (சாந்தி)யைத் தந்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை.

 

கஃபாவிற்கு அல்லாஹ்வின் இல்லம்(பைத்துல்லாஹ்), மாண்புமிகுந்த இல்லம்(பைத்துல் ஹரம்), ஆதிப் பழமை மிக்க இல்லம்(பைத்துல் அதீக்),இரத்தம் சிந்துதல் தடுக்கப்பட்ட-இறைவணக்கத்துக்காகவே ஏற்படுத்தப்பட்ட இல்லம், அநியாயக்காரர்களால் வெற்றி கொள்ளப்படாத இல்லம்

 

உலகத்தில் ஒரே ஓர் இணையர்,அவர்களுக்கு இறைவன் ஒருவன் என்று யாரும் சொல்லித்தரும் தேவை இருக்கவில்லை.அந்த இறைவனைத் தொழ ஒரே ஓர் இறையில்லம்! அதிலே அவர்கள் எவ்வளவு அமைதியாக,இனிமையாக, நிம்மதியாகத் தொழுது ஆன்மீக இன்பம் அடைந்திருப்பார்கள்!

 

ஒவ்வொரு பள்ளிவாசலும் பேரின்பம்தரும் கஃபாவின் பிரதிபலிப்புதான், ஒவ்வொரு மனிதரும் ஆதத்தின் மக்கள்தாம்! அந்தப் பிரதிபலிப்பும் பேரின்பமும் நமக்கு கிடைக்கின்றன,


நன்றி

பாடல் பாடியது அண்ணன் நாகூர் ஹனிபா அவர்கள்

 

No comments: