Tuesday, June 5, 2018

இறைவன் அருளால் இனிய நினைவுகளோடு....

' பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்"
"அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறேன்"

வாழ்க்கையை கொடுத்தவன் இறைவன்

இணை இணையாக படைத்தவனும் இறைவன்

(கணவர்களாகிய) நீ்ங்கள் (மனைவிகளாகிய) அவர்களுக்கு ஆடையாகவும், (மனைவிகளாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். -



திருக்குர்ஆன்: 2:187



"நீங்கள் அமைதிபெற உங்களில் இருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.



-திருக்குர்ஆன் 21:30



"நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? மேலும், உங்களை இணை இணையாக (ஜோடி ஜோடியாக)ப் படைத்தோம். உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்; அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்; மேலும், பகலை உங்கள் வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்ளும் காலம் ஆக்கினோம். உங்களுக்கு மேல், பலமான ஏழு வானங்களை உண்டாக்கினோம்; ஒளி வீசும் விளக்கை (சூரியனை)யும் அங்கு வைத்தோம். அன்றியும், கார் மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்; அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் வெளிப்படுத்துவதற்காகவும், கிளைகளுடன் அடர்ந்த சோலைகளை வெளிப்படுத்துவதற்காகவும்!' (அல்-குர்ஆன் 78: 6-16)
வாழ்க்கைக்கு துணையாக திருமணம் செய்துக் கொள்ள சொல்பவர் நாயகம்

திருமணம் செய்துக் கொள்ளாதவர் நபி வழியை பின்பற்றாதவராகி விடுகிறார்

குறள் 45:

சிறந்த பெண்

நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: ‘எந்தப் பெண் (மனைவி) அனைவரையும் விடச் சிறந்தவள்?’

அண்ணலார்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்’.

ஆதாரம்: நஸயீ



அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

விளக்கம் 1:

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

-----------------------------------------------------

உங்களோடு பகிர்வதில் மகிழ்வடைகின்றேன்

உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள் வேண்டி

கடந்த வாழ்க்கை நிறைவாய் இருக்க

நடக்க இருக்கும் வாழ்வும் சிறப்படைய


அன்புடன் ,
S.E.A.முகம்மது அலி ஜின்னா,

எனது *(S.E.A.முகம்மது அலி ஜின்னா)
பிறப்பு - திருமணம்‬ ‪- ‎வாழ்க்கை‬

 திருமணம்

 1380 துல்ஹஜ் பிறை 22-ல்(6-6-1961) செவ்வாயன்று புதனிரவு

ஹாஜி,S.E.அப்துல் காதர் சாஹிப் அவர்களின் புதல்வர்

முஹம்மது அலி அவர்களுக்கும்

ஹாஜி,A.அப்துல் ஹன்னான் அவர்களின் புதல்வி

நஸீம்பானுக்கும்

நிக்காஹ்(திருமணம்)

-------------------------




"1356 துல்காயிதா பிறை 24 காலை மணி 9-1/2 க்கு உம்முசல்மாவுக்கு வியாழக் கிழமை முஹம்மது ஜின்னா பிறந்தது

தை மாதம் 14 வியாழக் கிழமை

1938 ஜனவரி மாதம் 27 தேதியில் வியாழக் கிழமை"


இறைவன் அருளால் நிறைந்த வாழ்வு

ஏற்றமும் இறக்கமும் இறைவன் தந்ததவையாதளால்

மன நிறைவோடு ஏற்றுக் கொண்டு

மகிழ்வோடு வாழ்ந்த காலங்கள்

இன்ஷா அல்லாஹ் இனியும் தொடரும்

இனிய நினைவுகளோடு இறைவன் அருளால்

மனம் நிறைந்த மக்களின் துவாவுடன் (ஆசியுடன் ,வேண்டுதலுடன் )

எனது திருமணதிற்கு சிறப்பு வாழ்த்துரை இறையருட் கவிமணி கவிஞர் பேராசிரியர் (மர்ஹூம்) கா .அப்துல் கபூர் அவர்கள்


படத்தில் எனது நெருங்கிய நண்பர் முரசொலி செல்வம் எனது அருகில் அமர்ந்துள்ளார் .அவரும் மாப்பிள்ளை தோழர்களில் ஒருவர்


அன்புடன் ,

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

S.E.A.முகம்மது அலி ஜின்னா,

நீடூர்.

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً

"Allah will reward you [with] goodness."





No comments: