Nagore Rumi
கொஞ்ச காலத்துக்கு முன் ஒரு சகோதரர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சாஜன் படத்தில் வரும் பஹுத் ப்யார் கர்தே ஹை என்ற பாடல் மெட்டில் பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றி ஒரு பாடல் எழுதிக்கொடுத்தேன் ஏனோ அவரால் அதைப் பாட முடியாமல் போய்விட்டது. நேற்று சகோதரர் அப்துல் காதர் அவர்கள் தன் ‘இரும்புத்தேன்’ குரலால் அதைப் பாடி எங்களை மகிழ்வித்தார். அல்ஹம்துலில்லாஹ். அவருக்கும், ஏற்பாடு செய்த மாமா மகன் நாகூர் கவிக்கும் நன்றிகள். கேட்டுப் பாருங்கள்.