Sunday, December 15, 2019

குடியுரிமையும்... முஸ்லிம் ஜமாஅத்களின் நடை முறைகளும் / Dr.Vavar F Habibullah

குடியுரிமையும்...
முஸ்லிம் ஜமாஅத்களின்
நடை முறைகளும்
( a bit long post...
but very interesting
Takes at least 10 minutes)

முன்னுரை
இது எவரின் மனதையும்
புண்படுத்தும் நோக்கில்
வரையப்பட்ட கட்டுரையல்ல.
ஒரு மார்க் ரீதியான, சாதாரண
சர்டிபிகேட் பெறுவதற்கு கூட
ஜமாஅத் நிர்வாகம் கையாளும்
கெடுபிடிகள்...அப்பப்பா
அரசு அலுவலகங்களை விட
கரார் சட்டங்களை ஏழை
எளிய சாமானிய முஸ்லிம்கள்
மீது வீசி எறியும் முஸ்லிம்
ஜமாஅத் நிர்வாகிகள்....
நீண்ட தாடிகளின் அடர்த்தியில்
தொப்பிகள் மேக்கப்பில் ஈமானின்
பலத்தை நிரூபிக்க முயலும் இந்த
வேடதாரிகளையே முஸ்லிம்
சமூகம் மீண்டும் மீண்டும்
வாக்களித்து ஜமாஅத்
நிர்வாகிகளாக்கி
தங்களை தாங்களே
சீரழித்துக் கொள்கிறது.
யாம் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்
என்ற துவக்க கீர்த்தனையோடு...


வெளி நாடு பயணம் மேற்கொள்
வோருக்கு அடிப்படை தேவை
பாஸ்போர்ட்டும், விசாவும் தான்.
இமைக்ரேசனில், பாஸ்போர்ட்டை
காட்டினால் எல்லா தகவல்களும்
தெரிய வரும்.

பல நாடுகளில் பயணம்
மேற்கொள்ளும்போது,
சில நாடுகளில், டிரான்சிட்
விசா தேவைப்படும்.டிரான்சிட்
விசா இல்லாமல் ஏர்போர்ட்டை
விட்டு, ஒரு அடி கூட வெளியே
நகர முடியாது. ரெகுலர் இண்டர்
நேஷனல் டிராவலர்ஸ்
எல்லோருக்கும் தெரிந்த
விஷயம் தான் இது.
மனைவியோடு டிராவல் மேற்
கொண்டால் சில குறிப்பிட்ட
நாடுகள், சில நேரங்களில்
(very rarely) மேரியேஜ்
சர்டிபிகேட் கேட்பது வழக்கம்.

அந்த வகையில், எனக்கும்
பிரயாணத்தின் போது ஒரு
மேரியேஜ் சர்டிபிகேட்
சமீபத்தில் தேவைபட்டது.

நான் குமரி மாவட்டம்,
கோட்டாறு முஸ்லிம் ஜமாத்தை
சார்ந்தவன்.ஒரு சீனியர் சிடிஜன்
73 வயதாகிறது.எனது திருமணம்
நடந்து 47 வருடங்களுக்கு மேல்
ஆகி விட்டது.பழையதிருமண
சர்டிபிகேட் தொலந்து விட்டது.
எனவே எனக்கு just ஒரு திருமண
சர்டிபிகேட் (copy)தேவைப்பட்டது.

எனது மனைவி திருவிதாங்கோடு
முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்தவர்.
இந்த மாவட்ட முஸ்லிம் ஜமாத்
சட்ட திட்டத்தின் படி, பெண்
சார்ந்த ஜமாஅத், தான் திருமண
சர்டிபிகேட் வழங்குவது வழக்கம்.

ஆறு மாதங்களுக்கு முன்னர்...
குமரி மாவட்டம், திருவிதாங்கோடு
முஸ்லிம் ஜமாத் அலுவகத்தை
இது விசயமாக அநுகினேன்.
நேரில் வந்து பேசும்படி சொன்னார்கள்.
பல பிஸி அலுவல் மத்தியில், நான்
எனது மனைவியுடன் ஜமாத் அலுவலகம் சென்றேன்.மானேஜர் மிகவும்
பிஸியாக இருப்பதால்,
சிறிது நேரம் வெயிட்
பண்ண சொன்னார்கள்.

மானேஜரை சந்தித்து பேசினேன்
அவர் கண்டு கொள்ளவில்லை.
ஆபீஸில் இருந்த யாரோ ஒருவர்
ஒரு அப்ளிகேசன் தந்து ஃபில்
பண்ணி தரும்படி சொன்னார்.
அதற்கான பீஸ் கட்டணம் என்று
ஐநூரு ரூபாய் கேட்டார்கள்.
கொடுத்தேன். அதற்கான ரசீது
எதையும் அவர்கள் தரவில்லை.

மேட்டர் கொஞ்சம் அர்ஜண்ட்..
ஜமாத் செகரட்ரியை பார்க்க
முடியுமா? மானேஜர் சார்...
நான் கேட்டேன்.
அவர் இப்போ இங்கே இல்லை.
நாளைக்கு இந்த நேரம் வாங்க! இல்லே...,ரெம்பஅர்ஜண்ட்னா,
போனில் பேசி பாருங்க!
மானேஜர், மொபைல் நம்பர்
தந்தார்.

செகரட்ரியை மொபைலில்
தொடர்பு கொண்டேன். அவர்
எதையும் கேட்டு கொண்டதாக
தெரியவில்லை.சரி..சரி..
உங்கள் திருமண போட்டோ
வெல்லாம், என் மொபைலிலும்
மானேஜர் மொபைலிலும் அனுப்பி
வையுங்க...நாளை காலையில்
இந்த நேரம் என்னை ஆபீசில்
வந்து பாருங்க!...போனை கட்
பண்ணி விட்டார்.

அடுத்த நாள் காலை
பத்து மணி அளவில், நான்
என் மனைவியுடன் மீண்டும்
திருவிதாங்கோடு ஜமாத்
அலுவலகம் சென்றேன்.
சொன்னபடி செகரட்ரி
அங்கு இல்லை.மானேஜர்
தான் இருந்தார்.
சார்...
உங்களுக்கு திருமண
சான்றிதழ் தர இயலாது.
காரணம், எம்.ஆரில்
உங்கள் பெயர் இல்லை.
நீங்கள் சொல்லும் நாளில்
உங்கள் திருமணம் நிகழ்ந்த
தாக எவ்வித அத்தாட்சியும்
இல்லை.
வாட் இஸ்..எம்.ஆர்
மானேஜர் சார்...
நான் ஆவலாக கேட்டேன்.
இது கூட தெரியாதா
மேரியேஜ் ரிஜிஸ்டர்!
செகரட்ரி தரமாட்டேன்
என்று முடிவு பண்ணிட்டா
இந்த ஜமாஅத்லே யாரும்
கேள்வி கேட்க முடியாது
நீங்களே போன் பண்ணி
அவர் கிட்டே பேசுங்க!
அப்போது தான் மானேஜரிடம்
நான் எனது விசிட்டிங் கார்டை
கொடுத்தேன்.நான் ஒரு டாக்டர்
என்பதை தெரிந்து கொண்டார்.
சற்று மரியாதையுடன் பேசினார்.

சரி டாக்டர்...
உங்கள் திருமணத்தில் கலந்து
கொண்ட எங்கள் ஊர் ஆள்
யாரையேனும் உங்களுக்கு
தெரியுமா!

நான் பழைய காலத்து ஆளு
தம்பி,பலரை தெரியும்...இப்ப
யாரும் உயிரோடு இல்லை.
ஒரு வயதான ஆளைத் தெரியும்.
அவர் எனக்கு நல்ல நண்பர்.
அவர் பெயர் செய்யது இஸ்மாயில்
பெரிய அட்வகேட்,நோட்டரி
பப்ளிக்,வக்கீல் சங்க தலைவர்
பார் கவுன்சில் உறுப்பினர்.வக்ஃப்
வாரிய முன்னாள் உறுப்பினர்.
நான் அங்கிருந்த படியே
இஸ்மாயிலுக்கு போன் செய்து
விசயத்தை சொன்னேன்.அவர்
உடனே ஆபீஸுக்கு வருவதாக
சொன்னார்.நான் தடுத்து விட்டேன்.
மீண்டும் ஜமாஅத் செகரட்ரிக்கு
நான் போன் செய்தேன்.

மேரியேஜ் ரிஜிஸ்டரில் பெயர்
இல்லாததால் அவர் சர்டிபிகேட்
தர இயலாது என்று தீர்க்கமாக
சொல்லி விட்டார்.
வக்கீல் இஸ்மாயில்
சொன்னால்...
ஒண்ணும் தர முடியாது சார்.
அவர் ரிகமெண்ட் ஒண்ணும்
எங்கிட்டே எடுபடாது.
வேணும்னா ஒரு அட்வைஸ்
சொல்றேன் கேளுங்க!
தூத்துக்குடி பக்கம் ஒரு சின்ன
முஸ்லிம் ஜமாஅத் இருக்கு.
அங்கு ஒரு இமாம் இருக்கிறார்
நான் சொன்னா கேட்பார்.ஆனால்
கொஞ்சம் பணம் கேட்பார்...
நீங்கள் சரி என்று சொன்னால்
நான் ஏற்பாடு செய்து தருகிறேன்.

செகரட்ரி சார்....நான் சற்று
நிதானமாகத்தான் பேசினேன்.
என் பிறந்த ஊர் கன்னியாகுமரி
மாவட்டம்.எனது மனைவி உங்கள்
ஊரைச் சார்ந்தவர். இங்க்லீஸ்
மேன் குடும்பத்தை சார்ந்த
எஸ்ஏ.இப்ராகீமின் மூத்த மகள்.
நீங்கள் இருக்கும் உங்கள்
ஜமாஅத் அலுவலகம் அவர்
உங்களுக்கு தானமாக வழங்கியது.
என்பதாவது நினைவில் வந்து
போகிறதா! உங்கள் ஜமாஅத்
வளர்ச்சிக்காக அந்த குடும்பம்
வாரி வாரி வழங்கியது கூட
உங்களுக்கு நினைவில்லையா!
எஸ்.ஏ.இப்ராகீம் தான் முன்னாள்
ஜலால் மருத்துவமனை நிர்வாகி
என்பதாவது உங்களுக்கு
தெரியாதா!
டாக்டர்....நீங்க....அந்த...
டாக்டர் ஹபிபுல்லாவா!...

அது இருக்கட்டும்...
உங்கள் ஊரில் ஜமாஅத்தில்
பிறந்து வாழ்ந்து மணம்
முடித்தவனுக்கே, உங்கள்
ஊர் நிக்காஹ் ரிஜிஸ்டரில்
ஊரறிய, கையெழுத்து இடும்
எனது புகை படத்தை பார்த்த
பிறகுமா உங்களுக்கு என் மீது
நம்பிக்கை வரவில்லை.

டாக்டர் ஹபீபுல்லா...
வக்பு வாரிய விசாரணைக் குழு
உறுப்பினர், தமிழ் நாடு அரசு
முன்னாள் ஹஜ் கமிட்டி உறுப்பினர்
என்ற அறிமுகம் எதுவும் இல்லாமல்
சாதாரண பெயரோடு வந்தால்
நீங்கள் புறக்கணிப்பீர்கள்!
வசை பாடுவீர்கள்,டாக்டர்
என்றால் காசுக்கு பேரம்
பேசுவீர்கள்!!
பிறந்த ஊரை மறுத்து
தூத்துக்குடியில் திருமணம்
நடந்ததாக கூறி பொய்யான
திருமண சர்டிபிகேட்டை
பணம் கொடுத்து எனக்கு
வாங்கி தர முயல்வீர்கள்.
நான் பேச்சை முடித்துக்
கொண்டேன்.
கலக்டரிடம் அப்போதே
இது பற்றி பேச இருந்தேன்.
அமெரிக்கா பயணம் போகும்
அவசரத்தில் கலக்டரை நான்
சந்திக்கவில்லை.விரைவில்
சந்தித்து பேசுவேன்....

சாமானிய ஏழை முஸ்லிம்
சமுதாய மக்களை
இவர்களை போன்ற நச்சு
கிருமிகளிடம் ,போலிகளிடம்
இருந்து காப்பாற்ற அமித் ஷா
போன்றவர்கள் இந்த நாட்டிற்கு
இப்போது அவசியம் தேவை.

முடிவுரை.
திருமண சான்றிதழை
திரவிதாங்கோடு ஜமாஅத்
நிர்வாகம் தரவே இல்லை.
செலுத்திய பணத்தையும்
திருப்பித் தரவில்லை.
எனதூர், கோட்டாறு ஜமாஅத்
தலைவரிடம் இது பற்றி
கேட்டேன்.தம்பி பாவலர்
சித்தீக், சர்டிபிகேட்டை
பத்து நிமிடத்தில் எனது
வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
சென்னை தலைமை காஜியிடம்
கேட்டேன்.என்னை கேள்வி
எதுவும் கேட்காமல் உடன்
தந்து விட்டார்.

நான் தற்போது விசிட்
செய்த எந்த நாட்டிலும்
திருமண சர்டிபிகேட்
கேட்கவில்லை.
இந்தியன் என்றால்
சந்தோசம்கொள்கிறார்கள்.
சென்னை என்றால் கை
குலுக்கி மகிழ்ச்சி
தெரிவிக்கிறார்கள்.
நான் இந்தியன் என்பதில்
பெருமைக் கொள்கிறேன்.
இந்திய தாய் தந்தைக்கு
பிறந்த நான் இந்தியனே!

எனது தாத்தா காலத்தில்
விக்டோரியா மகாராணி
இந்தியாவை ஆட்சி செய்தார்.
தந்தை காலத்தில் மவுண்ட்
பேட்டன் தான் இந்தியாவின்
கவர்னர் ஜெனரல்.நான் பிறந்த
நேரம் நேரு தான் பிரதமர்.
எவன் இந்தியாவை ஆட்சி
செய்கிறான் என்பது எனக்கு
தேவை இல்லை.நான் ஒரு
இந்தியன் என்பதில் தான்
எனது பெருமை அடங்கி
இருக்கிறது.ஒரு முஸ்லிம்
என்பதற்காக அக்பர் மகாராஜா
வாழ்ந்த காலத்திற்கு எனது
பிறப்பை கொண்டு போக முடியாது.
பாபர்,அக்பர் எல்லாம் எனது
தலைவர்களும் இல்லை.
தனது பிறப்பையே தேர்வு செய்ய
முடியாத மனிதனால் எப்படி பிறக்கும்
நாட்டை தேர்வு செய்ய இயலும்.

எனது மாமா வித்வான் அபுபக்கர்
சொல்வார். அவர் காலத்தில்
பாகிஸ்தான்,பங்களா தேஷ்
நாடுகளே தோன்றவில்லையாம்.
இந்தியா என்றால் இந்த
நாடுகளும் சார்ந்தது தான்.
அப்போது அவர் சொன்னது
எதுவும் புரியவில்லை. அந்த
காலத்தில் பனாரஸ் பல்கலைக்
கழத்தில் அவர் தமிழ் ஆராய்ச்சி
மாணவர்.

ஆபகானிஸ்தான்,பாகிஸ்தான்
பங்களா தேஷ் முஸ்லிம்
பெரு முதலாளிகள் எல்லாம்
தொழில் நிமித்தமாக டெல்லியிலும்,
மும்பையிலும் கல்கத்தாவிலும்
மிகவும் வசதிகள் நிறைந்த
வாழ்க்கையை இன்றும்
அநுபவித்து வருகிறார்கள்.
உலக வல்லரசுகள் எல்லாம்
இவர்களை கவுர குடிமகன்
களாகவே அங்கீகாரம் வழங்கி
கவுரவிக்கின்றன.

இந்த தேசங்களின் மண்ணில்
இருந்து இந்திய மண்ணில்
நுழையும் முஸ்லிம் எல்லாம்
ஒன்று... எல்லாம் இழந்த
அகதியாகவோ அல்லது
ஏழையாகவோத் தான்
இருக்க முடியும்.ஏழையாக
இருந்தாலும் இவர்கள் இந்திய
மண்ணில் காலூன்றாமல் தங்கள்
நாட்டில் கெளரவ குடிமகன்களாக
வாழும் வாழ்க்கையே சிறப்பாகும்.

அப்படியே அகதிகளாக
அநாதைகளாக இந்திய
மண்ணில் குடியேறும் இந்த
வெளி நாட்டு முஸ்லிம்
ஏழைகள் சிலரை நமதூர்
முஸ்லிம் ஜமாஅத்கள்
தத்தெடுத்து...முஸ்லிம்கள்
என்பதால் அவர்களுக்கு
புணர் வாழ்வு அமைத்து
கொடுக்க முன் வருவார்களா!
குறிப்பாக நமதூர் ஜமாஅத்
நிரவாகிகள் இதை
மனிதாபிமானத்துடன்
ஏற்றுக் கொள்வார்களா!

ஒரு பாகிஸ்தானியை ஒரு
பங்களா தேஷ்காரனே சக
முஸ்லிமாக இன்றும் ஏற்றுக்
கொள்வதில்லை என்பது
உலக நாடுகளில் நாம்
காணும் காட்சியாகும்.ஏழை
பங்களா தேசிகள் ஒரு வேளை
அஸ்ஸாம் செல்லலாம்,இல்லை
யெனில் கல்கத்தாவிலும்
குடியேறலாம்.காரணம் அவன்
இந்தியாஒரு நட்பு நாடு என்று கருதுவதால்...மேற்கத்திய
நாடுகளில் வாழும் முஸ்லிம்
பங்களா தேசிகள் மிகவும்
செல்வந்தர்களாகவே உள்ளனர்.

பாகிஸ்தான் பிறந்த போது
அதன் தலைவர்களாக திகழ்ந்த
ஜின்னா உட்பட அனைவரும்
இந்திய குடிமகன்களே!இவர்கள்
எல்லாம் கோட்டு சூட்டு அணிந்த
பணக்கார முஸ்லிம்களே!
அது போலவே நமதூர்
பிரபலங்களான அத்வானி,
மன்மோகன் சிங்,ராம்ஜேத்
மலானி,நடிகர் ராஜ் கபூர்
எல்லாம் பாகிஸ்தானில்
பிறந்து சுதந்திரம் பெற்ற
பின் இந்திய மண்ணில்
வந்து குடியுரிமை பெற்ற
பாகிஸ்தானியர் என்பதே
நமது முந்தைய வரலாறு.
India Partition
an historical accident



Vavar F Habibullah

No comments: