Sunday, December 29, 2019

உங்களை வெற்றி பெறச்செய்தது எதற்கு தெரியுமா?


தமிழ் நாடு முழுவதிலும் பஞ்சாயத்து, வார்டு உறுப்பினர், கவுன்சிலர் பொறுப்புகளில் வெற்றி பெறப் போகும் என் அன்பான இஸ்லாமிய தோழனே! சகோதரியே உங்களை வெற்றி பெறச்செய்தது எதற்கு தெரியுமா?

தெரு விளக்கு போடவும் குடி தண்ணீர் தடை இல்லாமல் கிடைக்கவும்
சாலைகள் சரியாக அமைக்கவும்தான்!

இதைத் தவற உங்களிடம்
பெரிதாக ஒன்றும் நம் மக்கள் எதிர் பார்க்கமாட்டார்கள்!

என் அருமை இஸ்லாமிய தோழனே! தோழியரே!

#துன்யாவின் அற்ப பணத்திற்காக
மற்றவர்களிடம் நீங்கள் விலை போய்விடாதீர்கள்!


அல்லாஹ்விற்காக உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமையை சரியாக செய்து விடுங்கள்!

#அல்லாஹ் சொர்க்கத்தில் சிறந்த பதவியை உங்களுக்கு தருவான்!

500-க்கும் 1000-க்கும் நீங்கள் விலை போய்விடாதீர்கள்!

#உங்களால் முடிந்தவரை
உன் ஊர் மக்களுக்கு நல்லது செய்ய {சேவை} முயற்சி செய்யுங்கள்!! அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் #மறுமையிலும் மகத்தான கூலி தருவான்!!

உங்களுக்கு மேல் இருப்பவர்கள் தவறு செய்தால் முடிந்தவரை தட்டிக்கேளுங்கள். ஒரு காலமும் அவர்கள் தவறுக்கு துணை போகாதீர்கள் !

அனைத்து ஊர்களுக்கும் நல்ல சாலைகளும் தெரு விளக்குகளும் குடி தண்ணீரும் மிகவும் அவசியத் தேவையாகும்.

இதை செய்வதற்கு
எந்த வகையிலும் கமிசன் {லஞ்சம்} வாங்கி விடாதீர்கள்!
உங்களுக்கு அல்லாஹ்விடம் மகத்தான கூலி இருக்கிறது!!

என் இனத்தவன் தவறு செய்யத்தூண்டினாலும் அதற்கு நீங்கள் துணை போகாதீர்கள்!
முடிந்தவரை நேர்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள் என் தோழர்களே!

#கமிசன், லஞ்சம் வாங்கித்தான் நாம் சாப்பிட வேண்டுமா?
வேண்டாம் அந்த பணம்!!
அல்லாஹ் இதை விட சிறந்ததை தருவான்!!

மரணம் யாருக்கு, எப்போ, எங்கே என்று தெரியாது.

முடிந்த வரை அல்லாஹ்விற்கு
நன்றியோடு நடந்து கொள்ளமுயற்சியுங்கள்.

#அல்லாஹ் போதுமானவன்!
_உங்களின் தோழன்,
நீடூர் அபு அய்மன்.

No comments: