Tuesday, December 17, 2019

கீரைகளின் பயன்கள் / ஆரோய்கியமான அழகிய பழங்கள்

அனைத்துவகை கீரைகளின் பயன்கள் நாம் அன்றாடம் பல வகையான கீரைகளை பயன்படுத்துகிறோம். அவற்றின் பயன்களை இங்கு விரிவாக காணலாம்.

கீரைகளும், அதன் பயன்களும்
அகத்திக் கீரை:

பித்தம் தீரும்; வெப்பத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். ஜீரண சக்தியை பெருக்கும். இதை, 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி வர, உடல் ஆரோக்கியமாகும்.

அரைக் கீரை:

சளி, இருமல், தொண்டைப் புண் மற்றும் காய்ச்சல் நீக்கும். உடல் சூட்டை சமப்படுத்தும், ஆண்மை பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். வாத நோய்களை கட்டுப்படுத்தும்; இதயம், மூளை வலுப்பெறும்.


காசினிக் கீரை:

இது, நீரிழிவு, வாதம், உடல் சூடு, ரத்த சுத்தி, மூட்டு வீக்கம் போன்றவை நீங்க உதவுகிறது.

சிறு கீரை:

சிறுநீரகத்தில் உண்டாகும் நோய்கள், பித்தம், கண் மற்றும் காச நோய்களை குணப்படுத்தும்; முகப்பொலிவு, உடல் வலு உண்டாகும்.

சுக்காங் கீரை:

எல்லாவித பித்தங்கள், குடல் கோளாறுகள், நெஞ்செரிவு, வாய்வு, குன்ம வலி, வாந்தி இவற்றை நீக்கி. பசி உண்டாக்கும். மதுவின் பாதிப்பை போக்கும், ஈரல் வலுவடையும், ரத்தத்தை சுத்தி செய்யும்.

பசலைக் கீரை:

கண் எரிச்சல், நீர்க்கடுப்பு, வெள்ளைப் போக்கு, வாந்தியை போக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், நீர் அடைப்புக்கு இது சிறந்த நிவாரணம் தாய்ப்பால் சுரக்கும். சீழ் பிடித்து வேதனை தரும் கட்டிகளின் மீது இதன் இலைகளை வதக்கி கட்டினால், கட்டி உடைந்து, சரியாகும்.

பருப்பு கீரை:

ரத்த சுத்திக்கு சிறந்தது; எல்லா வாத, சரும நோய்கள், மேக ரோகங்கள், பித்த கோளாறுகள், கல்லீரல் நோய்கள், சிறுநீரக கோளாறுகள், சீதபேதி இவற்றை நீக்கும்.

புளிச்ச கீரை: சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்கள் விலகும். விந்து பலப்படும், மந்தம் விலகும், காச நோய் கட்டுப்படும், தேக பலம், அழகு கூடும்.

பிரண்டை இலை:

சுளுக்கு குணமாகும்; நன்றாக பசி எடுக்கும். மலக்கட்டு நீங்கும், ஜுரம் குறையும்.

பொன்னாங்கண்ணிக் கீரை:

இது, தங்க சத்துடையது. கண் மற்றும் மூலநோய், மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணி. ஈரல் வலுப்படும்; நெஞ்செரிச்சல் தணியும், காமாலை நோய்க்கு சிறந்தது.

வெந்தயக் கீரை:

இரும்புச் சத்து நிறைந்தது. நீரிழிவு நோய்க்கு சிறந்த நிவாரணி. ஊளைச் சதை மற்றும் உடல் சூட்டை குறைக்கும், வாய் நாற்றம், புளிச்ச ஏப்பம் விலகும். உடல் வலிமை பெறும், சொறி, சிரங்கு தீரும்.

மணத்தக்காளி கீரை:

வாய்ப்புண், குடல் புண் குணமாகும். மூலச்சூடு, உடல் சூடு, ஆசனக் கடுப்பு, நீர்க் கடுப்பு நீங்கும். மூலம், காமாலை நோய் நீங்கும்.

முருங்கைக் கீரை:

பித்தம், கண் நோய்கள், தலை சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் சூடு, அக்கினி மந்தம் தீரும். அடிக்கடி சாப்பிட்டால், நரம்புகள் வலிமையடையும்; ஆண்மை பெருகும்.

முளைக் கீரை:

குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு சிறந்தது. சிரங்கு மற்றும் சரும நோய்கள் குணமாகும். தலைமுடி கருமையுடன் இருக்கும். மூலச்சூடு, குடல் புண்கள், சிறுநீர் கோளாறுகள் தீரும்; நல்ல பசி உண்டாகும்.
நன்றி https://agriculturetrip.com



பழம்! கீரை மற்றும் காய்கறிகள்
பார்த்து மகிழுங்கள்.
ஆரோய்கியமான  அழகிய   பழங்கள் பார்பதர்கும் அழகு, மனதிற்கும் இனிமை.
பழம்புதிய பழமாக இருக்க வேண்டும். உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் நேரடியாக தரக்கூடியவை பழங்கள் மட்டுமே.
 சில பழங்கள் பனி வெண்மையாகவும், சில மஞ்சள் நிறமாகவும், சில சிவப்பாகவும் ... பழம் இனிப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
பொதுவாக இயற்கை பானங்களை விரும்புவோர் அனைவருமே பழச்சாறுகளை (ஜூஸ்) அதிகம் விரும்பி அருந்துவார்கள்.
பார்த்து மகிழுங்கள்.


No comments: