Wednesday, December 25, 2019

தமிழ் முஸ்லிம் கழகம் என்ற புதிய கழகம் உதயம்

‎Vavar F Habibullah‎  

தமிழ் முஸ்லிம் கழகம்

1.தமிழ் நாட்டில் பிறந்து,
வளர்ந்து முஸ்லிம்களாக
வாழும் தமிழ் இன
மக்களின் வாழ்வுரிமையை காப்பது

2.தமிழ் முஸ்லிம்கள், தற்போது
சந்தித்து வரும் நெருக்கடி மிக்க
சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு
அவர் தம் பிரச்னைகளை இலகுவாக
அணுக, தேர்ந்த நிபுணர்களைக்
கொண்டு சிறந்த பயிற்ச்சி அளிப்பது
மேலும், அவர்களது இயல்பான
பயம் களைய கவுன்சலிங்
அளிப்பது.


3.தமிழக முஸ்லிம்களின்
சமூக பொருளாதார நிலை
உயர, ஆக்கபூர்வமான நல்ல
செயல் திட்டங்களை அறிமுகம்
செய்வது.. மேலும் நடைமுறை
படுத்துவது.

4.முஸ்லிம் மகளிர் கல்வி
முன்னேற்றம் பெறவும்,குடும்பத்தில்
உள்ள எல்லா பெண் குழந்தைகளும்
ஏதாவது ஒரு துறையில் பட்டதாரிகளாக
திகழ தேவையான சூழலை
சமூகத்தில் ஏற்படுத்தவும்
முயற்சிகள் மேற்கொள்வது.

5.தமிழ் முஸ்லிம் இளைய தலைமுறை
தங்கள் பொறுப்புணர்ந்து வாழ
திறன் மேம்பாடு மற்றும் மனநல
பயிற்ச்சி அளிப்பது,மேலும் போதை
வஸ்துக்கள் பிடியில் நின்றும்
அவர்களை காப்பது,சிறந்த வேலை
வாய்ப்பினை அவர்களுக்கு ஏற்படுத்தி
தருவது.

6.தமிழ் மாநிலம் முழுமையும்
தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கான
கருத்தரங்கம், மற்றும் பயிற்ச்சி
பட்டறைகளை தேர்ச்சி பெற்ற
நிபுணர்களை கொண்டு நடத்துவது

7.கல்வி,பொருளாதாரத்தில்
மேம்பட்ட சமுதாயமாக தமிழ்
முஸ்லிம் இன மக்களை மாற்றி
அமைப்பது,அதற்கான வழி
முறைகளை ஆய்வு செய்வது

8.துடிப்பான பொதுநல சிந்தை
யுள்ள நல்ல இளைஞர்களை
இந்த தூய பணிக்கு தேர்வு
செய்து,பயிற்சி அளித்து
அவர்களிடம் பொறுப்புகளை
ஒப்புவிப்பது.இதற்காக
மாவட்டம் தோறும் சமூக நல
ஆர்வலர்களை தேர்வு செய்வது

9.தற்போது இந்த இயக்கம் ஒரு
அரசியல் கட்சி அல்ல.தமிழ்
முஸ்லிம் மக்கள் நலனுக்காக
கட்சி பாகுபாடு இன்றி
மனப்பூர்வமாக உழைக்கும் ஒரு
மகத்தான தொண்டு நிறுவனமாகவே
தமிழ் முஸ்லிம் கழகம் (த.மு.க)
இப்போது தமிழ் முஸ்லிம்
சமூகத்தின் மத்தியில் தன்னை
அறிமுகம் செய்து கொள்ள
விரும்புகிறது.

டாக்டர்.ஹபீபுல்லா
நிறுவனர்.தமிழ் முஸ்லிம் கழகம்

முன்னாள் உறுப்பினர்
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு.
முன்னாள் உறுப்பினர்
வக்பு வாரிய விசாரணைக்குழு
வக்பு வாரியம்,சென்னை.
முன்னாள் உறுப்பினர்
உயர் நிலைக் குழு
முதலமைச்சர் குழந்தைகள்
சத்துணவு திட்டம்,தமிழ்நாடு அரசு.
முன்னாள் உறுப்பினர்
ஜனாதிபதி விருது தேர்வுக் குழு
சமூக நலத்துறை அமைச்சகம்

‎Vavar F Habibullah‎  



No comments: