Tuesday, September 26, 2017

அனுபவிப்போருக்கே தெரிந்த வலியிது

Iskandar Barak
ஏர்போர்டில் சந்தித்தேன்
சார் சென்னைக்கா போறிங்க
ஆமாங்க ..நீங்க?
நானும் தான் சார்
லீவுங்களா
ஆமாங்க ..உங்களுக்கு?
அதை ஏன் சார் கேக்குரிங்க என் நேரமே சரியில்லங்க
என்னங்க சொல்ரிங்க
என் பேரு கணேசன் விழுப்புரம் கூவாகம் பக்கம் கிராம்ம் நான் சார் ஊர்ல கஷ்டம்னு தெரிஞ்ச முஸ்லிம் ஒருத்தரோட உதவியில கத்தர் வந்தேன் வந்து ஏழுமாசமா நல்லா வேல பாத்து மாசம் 25 ஆயிரம் வீட்டுக்கு அனுப்பி பசியார சாப்டு கடனும் கொடுத்துட்டுயிருக்கும் போது இப்ப சவுதியோட சண்டையால கம்பெனியில வேலையில்லனு 90 பெற எடுத்தாங்க அதுல நானும் யுன்னொரு தமிழ் ஆளு மேலூரச்சேர்ந்தவரு பேரு சாகுலு அவரும் பாவம் என்னைமாதிரிதான் நாளைக்கி ப்ளைட்டு அவருக்கு
கெஞ்சி கெதரி பாத்தோம் வேற வழியேயில்லனு கணக்கு முடுச்சு அனுப்பிட்டாங்க விதியேனு போறேன் சார் ..னு அழுதார்
வேதனைதான்

கவலப்படாதிங்க கணேசன் நிலை மாறும் திரும்ப வருவீங்க கொஞ்சம் பொறுமைகாருங்க என்ன செய்ய நாம மனுசனாச்சே
உண்மைங்க சார் இருந்தாலும் நம்மூரோட விலைவாசி பயமாயிருக்கே சார் அதானே வேதனை..யென்றவரிடம்
முடிந்தவரை ஆறுதல் சொல்ல
ப்ளைட் நேரமாகியதால் அவரவர் வழியில் பிரிந்தோம்
பாவங்கள் ..கணேசன் சாகுல் போல பல்லாயிரம் பேர்
அனுபவிப்போருக்கே தெரிந்த வலியிது

Iskandar Barak

No comments: