Monday, September 11, 2017

மியான்மரில் தொடரும் இனப்படுகொலையைக் கண்டித்தும் ஹாங்காங்கில் வாழும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்

மியான்மரில் அரக்கான் என்னும் பகுதியில் வாழும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் அங்கு வாழும் புத்தத் துறவிகளாலும், இராணுவம், காவல்துறை போன்ற அரசுப் படைகளாலும் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறார்கள். ரோஹிங்கிய முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருந்து மியான்மர் நாட்டுக்கு ஊடுறுவியர்கள் அல்லர். பல நூறாண்டுகளாய் அந்நாட்டில் வாழும் மண்ணின் மைந்தர்களே.
மியான்மரில் தொடரும் இனப்படுகொலையைக் கண்டித்தும், அதை ஐக்கிய நாடுகள் அவை தடுத்து நிறித்தக் கோரியும் ஹாங்காங்கில் வாழும் முஸ்லிம்கள் தமார் பூங்காவில் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு கண்டண முழக்கங்களை எழுப்பினர். மார்க்க அறிஞர்களும், இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களும் ஊடகங்களுக்கு தங்கள் உணர்வை வெளிப்படுத்தி பேட்டியளித்தனர். இந்த போராட்டம் ஹாங்காங் காவல் துறையில் முறையாக அனுமதி பெற்று நடத்தப் பட்டது. 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூட்டத்தை நெறிப்படுத்தும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு பதாகைகளை வழங்கினர். போராட்டக் காரர்களுக்கு குடிநீர் குடுவைகள் வழங்கப் பட்டன ஹாங்காங் நாடாளுமன்ற உறுப்பினர் லுங் கோக் ஹங் இப்போராட்டத்தில் கலந்து கொண்டார். .
போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி திருக்குர் ஆன் வசனத்துடன் தொடங்கி ஒரு பாகிஸ்தான் இளைஞர் எளிமையான ஆங்கிலத்தில் உரையாற்றினார். தயாரிக்கப் பட்ட உரையென்றாலும் உணர்ச்சிகரமாக இருந்தது. பின்னர் ஒரு பெண்மணி அதனை சீனத்திலும் எடுத்துரைத்தார். போராட்டம் என்றால் அது இளைஞர்கள் தலைமையில் தான் நடைபெற வேண்டும் என்று நான் புரிந்து கொண்டேன். இந்தப் போராட்டத்தில் என் மகன் ரிஜ்வானுடன் கலந்து கொண்டேன்.
ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு மறுவாழ்வு வழங்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம்.
Abdul Rahman

No comments: