Thursday, September 10, 2015

தோல்வி நிலையென நினைத்தால்...- Raheemullah Mohamed Vavar


தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா ?

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா ?

உலகில் எது நிலையானது, அப்படி எதுவுமே இல்லை என்பதே அறிவியல் உண்மை. என்றோ ஒருநாள் போகும் அந்த உயிரை, அதற்கு சாவே இல்லாமல் எந்நாளும் இப்புவியில் நிலைத்து நிறுத்தி விட, இறுதிவரை வாழ, உரிமைகளை மீட்கும் போராட்டத்திலோ இல்லை அப்படியான ஒரு முயற்ச்சியிலோ அதை இழப்பதில் கிடைத்து விடுகிறதே. அதன் பலனாய் எதிர்கால சந்ததிகளுக்கு கிடைத்து விடும் நன்மைகளினால் இந்த பூமி முடியுமட்டும் நீ விட்டுப்போன அந்த உன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்க முடியுமே !

Raheemullah Mohamed Vavartoஎண்ணமும் எழுத்தும்......

No comments: