Wednesday, June 17, 2015

இஸ்லாம் - தொழுகை - யோகா...


யோகா...
உடல் பயிற்சியை ஒத்த இன்னொரு கலை!
இந்திய மண்ணின் பூர்வீக கலையில்
இதுவும் ஒன்று!

ஆனால் பாருங்கள்,
இக்கலைக்கு
ஓர் மதசாயமும் முத்திரையும் குத்த
சூரிய வழிப்பாடென -
அதற்கு முக்கியத்தும் தந்து குதிக்கிறார்கள்!

யோகாவை..,
அரசியலாக்கி
அதம்பண்ணுகிறார்கள்!

நிஜத்தில்...
யோக மீது இவர்களுக்கு மதிப்பெல்லாம் இல்லை.
எப்படியாவது
முஸ்லிமை வம்பிற்கு இழுக்க வேண்டும்
அந்தச் சச்சரவு சப்தத்தில்
தங்களது அரசியல் ஓட்டைகளை மறைக்க வேண்டும்...
பெரிய திறமைதான்!

# இஸ்லாமியனின் இறைவணக்கமான தொழுகை...
யோகா அடையாளங்களை
தன்னகத்தே பெற்றதுவே!
உங்க யோகா விசயதாறிகளை கேட்டுப் பாருங்க.

உலகின் இரண்டாவது பெரிய மதமான இஸ்லாத்தின்
இறைவணக்கம் எப்படிப்பட்டதென
உங்களால் அறிய முடியாமல் போனதுதான் ஆச்சரியம்!

அல்லது...

இந்நாட்டின்
எங்கள் சகோதர இந்து மக்களின் கண்களை
திரைப் போட்டு மறைக்கும் வேலையை செய்கின்றீங்க!

# இஸ்லாமியன் ஐந்து வேளையும்
இறைவணக்கம் செய்ய
யோகா அவனை
1500 - வருஷமா பின் தொடரவே செய்கிறது.

நாளைக்கு ஐந்து வேளை
யோகா முத்திரைகளை
தட்டாது செய்துவரும் இஸ்லாமியனுக்கு
புத்தி சொல்ல பறக்காதீங்க..!

இன்னொரு விசயம்...
அவர்கள் வழிப்படும் திசை மேற்கு!
சரியா...
சூரியன் - கிழக்கு என்றெல்லாம் அவர்களை குழப்பாதீங்க...

மேலும் ஒரு விசயம்
சூரியனின் உதயத்திலேயே
அந்த முன் காலையிலேயே
இறைவனை பணிய ஆரபித்து விடுபவர்கள்
இஸ்லாமியர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தேவையற்று குழப்பாதீங்க பிளீஸ்....!

ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்று
புத்தி சொல்கிற வேலையையும்
அதற்காக கவலைப்படும் வேலையையும்
நாகரீகம் கருதியேனும்
விட்டு தொலைங்க.
யாருக்கும் புத்தி சொல்ல அலையாதீங்க..!

போங்க போயி...
அரசியலில் சூதும் வாதும் பண்ணுங்க...
கிரிமினல்களுக்கு அனுதாபப்படுங்கள்!
உங்களுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருப்பதை அறிவேன்.
இப்ப சுஸ்மாவை வேறு
நீங்க காபந்து பண்ணியாகனும்!
பாவம்தான்!
நீங்களும் ஒருவகையில்...!
தமிழ்ப் பூக்கள்
 
 - தாஜ் Taj Deen

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails