Tuesday, June 23, 2015

புலம் பெயர்தல் ....!

தொன்று தொட்டே புலம்பெயர்ந்து புதிய ஊர்களுக்கு சென்று வாழுதல் மானுட வரலாற்றில் தொடர்ந்து நிகழும் ஒரு இயற்க்கை நிகழ்வு.

தொடர் பயணங்களே இடப்பெயர்வு களுக்கு அடித்தளம்.

களைத்து போன குழு ஒரு இடத்தில் தங்கியதும் புதிய ஒரு ஊர் உருவாகிறது.
புது இடத்திலும் மனிதன் தனது பூர் வீகத்தை மறக்காது தொடர்பிலேயே வைத்துக் கொள்கிறான்.
இது ஒரு பாதுகாப்பு சார்ந்த சமூக உளவியல் உணர்வு.

பண்டு பெரும்பாலும் புலம்பெயர்தல்கள் எதிரியிடம் இருந்து பாதுகாப்பான இடத்திற்கும் இயற்கை
சீற்றங்களில் இருந்து தப்பிக்கவும் முக்கியமாக விவசாயம் விருத்தி செய்வதற்காக வுமாக இருந்தது. கட்டுப்பாடுகள் இல்லாத சுகந்திர உலகமது.

இந்த காலகட்டத்தில் தான் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று உரக்கக் கூறினான் தமிழன்.

இப்போதைய புலம் பெயர்தல்கள் பெரும்பாலும் பொருளாதார தேவைகளை பூர்தி செய்வதற்காகவே ஆகிறது.
சென்று சேர்ந்த இடத்தில் உள்ளூர் காரனைவிட வந்தேறிகள் பெரும்பாலும் வசதிபடைத்தது விடுகிறார்கள்.

இதுபோல பல மாற்றங்களையும் தவிர்க்க முடியாது ஆனால் தழுவிக் கொள்ளலாம். ஆகையால் தான் இரட்டை குடியுரிமை என்பது பலநாடுகளும் பரிசீலித்து வருகின்றன. சில நாடுகள் நடைமுறைப் படுத்தி உள்ளன.
ராஜா வாவுபிள்ளை
 

No comments: