Showing posts with label தொழுகை. யோகா. Show all posts
Showing posts with label தொழுகை. யோகா. Show all posts

Wednesday, June 17, 2015

இஸ்லாம் - தொழுகை - யோகா...


யோகா...
உடல் பயிற்சியை ஒத்த இன்னொரு கலை!
இந்திய மண்ணின் பூர்வீக கலையில்
இதுவும் ஒன்று!

ஆனால் பாருங்கள்,
இக்கலைக்கு
ஓர் மதசாயமும் முத்திரையும் குத்த
சூரிய வழிப்பாடென -
அதற்கு முக்கியத்தும் தந்து குதிக்கிறார்கள்!

யோகாவை..,
அரசியலாக்கி
அதம்பண்ணுகிறார்கள்!

நிஜத்தில்...
யோக மீது இவர்களுக்கு மதிப்பெல்லாம் இல்லை.
எப்படியாவது
முஸ்லிமை வம்பிற்கு இழுக்க வேண்டும்
அந்தச் சச்சரவு சப்தத்தில்
தங்களது அரசியல் ஓட்டைகளை மறைக்க வேண்டும்...
பெரிய திறமைதான்!