Wednesday, February 12, 2014

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் திண்டுக்கல் தனபாலன்.


திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி  கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்

நாம் திண்டுக்கல் தனபாலன் பற்றி ஆய்வு செய்து அவர் தரும் ஊக்கத்தைப் பெறுவோம்


திண்டுக்கல் தனபாலன் சேவை மனம் கொண்டவர் . அவர் சிறந்த பொறியாளர் மற்றும் தனக்கு கிடைத்த அறிவை மற்றவருக்கும் பகிர்ந்தளிப்பதில் மகிழ்வடைபவர்
அதற்க்கு அவர் நடத்தும் திண்டுக்கல் தனபாலன் ஒரு சான்றாக உள்ளது
Website   http://dindiguldhanabalan.blogspot.com/

திண்டுக்கல் தனபாலன் கொள்கை

தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக்கொள், இதுவும் கடந்து போகும்.

யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யக் கூடாது என்பது எனது வழி --> தீதும் நன்றும் பிறர் தர வாரா, ACCEPT THE PAIN, இதுவும் கடந்து போகும்.

உறவுகளின் வாழ்க்கை உட்பட பதவி ஒன்றே ஆசை என்றிருந்தால், வெற்றிப்படிகள் கார்மேகத்தில் மறைந்து விடும் அல்லவா...?

அதனால் "நானே தலைவன்" என்று சொல்வது யார்...?

 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்...

அன்பில் ஊறும் மெய்க் காதல் போலே பாரிலே...
இன்பம் எதும் வேறில்லையே ஆருயிரே...
கன்னல் சாறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ? - என்னைக்
கண்டும் உன்தன் வண்டு விழி நாணுமோ..

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே...
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே...
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே...
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே...
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே...

திண்டுக்கல் தனபாலன் செய்வது தலை கீழாய் ஒரு தவம்...!

"ஹே ! வாழு! வாழ விடு"

ஒவ்வொருத்தரின் வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள், தோல்விகள், வலிகள், அவமானங்கள், துரோகங்கள் - இவைகளின் மொத்த உருவம் துன்பம்... இதற்கான தீர்வு தான் என்ன...?

 கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவைகளை நடத்தி மற்றவர்களின்  அறிவை வெளிப் படுத்தச் செய்வது .



 பதிவர்-திருவிழா நடத்துவது .
மற்றவர்களின் பதிவுகளைப்  படித்து கருத்துரை தந்து அவர்களை உந்துவிப்பது .இவைகள் இவரது உயர்ந்த நோக்கமாக உள்ளது

வணக்கம் நண்பர்களே... என்று ஆரம்பித்து
// நிலவும் மலரும் பாடுது... என் நினைவில் தென்றல் வீசுது...
நிலை மயங்கி மயங்கி மற்றவர்கள் வலைத்தளம் மற்றும் வலைப்பூ  காண காதலினால் ஜாடை பேசுது... //
அதற்க்கு கருத்துரை வழங்க மனம் நாடுது// என்பதே.

பசிக்கும் போது உணவை நாடும் வயிறு
காலத்தை நோக்கி ஓடும் அறிவு
தேவையை அறிந்து கொடுக்கும் உயர் மனது
நல்லவர் நல்லவை நாடி நிற்பர்

பொருத்தமான கட்டுரை பொருத்தமான நேரத்தில் கொடுப்பதில் திண்டுக்கல் தனபாலனின் திறமை மகிழ்விக்கும்

திண்டுக்கல் ஹல்வாவைப் போன்று இவரது கட்டுரைகள் இனிப்பு தரும்


3 comments:

”தளிர் சுரேஷ்” said...

அருமை நண்பரை பற்றிய அழகான கட்டுரைப்பதிவு! கட்டுரை சொல்லும் செய்திகள் நிதர்சனமானவை! கட்டுரையாளருக்கும் எனதினிய நண்பருக்கும் வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயா... நன்றியைத் தவிர என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

தங்களின் வாழ்த்தை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்... மிக்க மிக்க நன்றி ஐயா...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அருமை நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் சிறப்புக்களை தொகுத்த பதிவு. படித்து மிக்க மகிழ்ச்சி!