Saturday, February 25, 2012

அத்தா

அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்
  அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது. அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்.
பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம். அத்தா அச்சன் முத்தன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்.
"அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம்.
"அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம்.




எனது அன்புள்ள அத்தா சி .ஈ .அப்துல் காதர் சாஹிப்.

படத்தில் உள்ளவர் நீடூர். ஹாஜி சி .ஈ .அப்துல் காதர் சாஹிப் அவர்கள்



       தனது சகோதரர்   ஹாஜி சி .ஈ .அப்துல் ரஹ்மான் சாஹிப் அவர்களுடன்


    அப்துல் காதர் மயிலாடுதுறையில் பாத்திரக்கடை வைத்திருந்தார்.  நல்ல வியாபாரம்.  திருமணச் சீர் செய்கிறவர்கள் பட்டியலைக் கொண்டு வந்து கடையில் கொடுத்து விட்டுப் போய் விடுவார்கள்.  பாத்திரங்கள் மாட்டு வண்டியில் போய்த் திருமண வீட்டில் இறங்கிவிடும்.  அவ்வளவு நம்பிக்கை. ஊரில் நல்ல செல்வாக்குடன் இருந்தார். “அவர் கடை வீதியில் வரும் போது மற்றக் கடைக்காரர்கள் எழுந்து நின்று கைகூப்புவார்கள்” என்று, நீடூர் பெரியார் அப்துல் மஜீது தெரிவித்தார்.  அவ்வளவு மதிப்பு, மரியாதை!
ஊரில் என்ன பிரச்சினை என்றாலும், இவரிடம் வந்து முறையிடுவார்கள்.  இவர் விசாரித்துத் தீர்ப்புக் கூறுவார்.  இரு தரப்பாரும் ஏற்றுக் கொள்ளுவார்கள்.  அவ்வளவு நியமயமாக இருக்கும்.  நடுநிலை தவறாத ஒரு நீதிபதிகயாக ஊரில் அவர் விளங்கினார்.


மணிக்கூண்டு
மயிலாடுதுறை கடை வீதியில் நடு நாயகமாக விளங்கும் மணிக்கூண்டு இன்றுமு; அப்துல் காதரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்த மணிக்கூண்டு அவர் நிறுவியது.  இதன் திறப்பு விழா 1943 நவம்பர் 23ந் தேதி நடந்தது.  அப்போதைய சென்னை மாநில (தமிழ்நாடு) ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரர் வந்து, மணிக்கூண்டை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் ஆளுநரை வரவேற்று மாலை சூட அப்துல் காதர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
1943லேயே இந்த மணிக்கூண்டு கட்ட ரூ. 8 ஆயிரம் செலவு ஆயிற்று “நீடூர் மாயவரம் பாத்திரக் கடை ஹாஜி சி.ஈ. அப்துல்காதர் சாகிப் அவர்களால் டூனிஷ்யா வெற்றிக்காகக் கட்டிய மணிக்கூண்டு” என்று மணிக்கூண்டில் பொறிக்கப்பட்ட வாசகம் இன்றும் இருக்கிறது.
. “உலகப் போரில் இங்கிலாந்து தொடரந்து தோல்வி அடைந்தது.  போர் நடந்த எல்லா இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது ; இங்கிலாந்துக்குத் தோல்வி முதன் முறையாக டுநீசியாவில் நடந்த போரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் நினைவுச் சின்னமாக இந்த மணிக்கூண்டை அப்துல் காதர் கட்டினார்  (வட ஆப்பிரிக்காவில் டுனீசியா இருக்கிறது).

ரெயில் நிலையம்

நீடூர் மக்கள் ரெயில் ஏற 3 கி.மீ. தொலைவிலுள்ள மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்குப் போக வேண்டியிருந்தது இறங்குகிறவர்களும் அங்கு இறங்கித்தான் நீடூருக்கு வரவேண்டும்.
நீடூர் மக்களின் வசதிக்காக நீடூரில் ஒரு ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்துல் காதர் அரசுக்கு மனு அனுப்பினார்.  நீடூரில் ரெயில் நிலையம் கட்ட ரெயில்வேயிடம் நிலமில்லை என்று பதில் வந்தது.  உடனே, “எனது நிலத்தைத் தருகிறேன்” என்று அப்துல் காதர் அரசுக்கு எழுதினார்.  அரசு அதை ஏற்றுக் கொண்டது.
ரெயில் பாதையை ஒட்டியிருந்த தனது நிலத்தை அப்துல் காதர் அரசுக்கு இனமாகக் கொடுத்தார்.  அந்த இடத்தில் ரெயில் நிலையம் கட்டப்பட்டது.  அங்கு ரெயில்கள் நின்று சென்றன. நீடூரிலேயே ரெயில் ஏற, இறங்க மக்களுக்கு வசதி கிடைத்தது.
வீடு கட்ட நிலம்
நீடூர் பெயருக்கு ஏற்ப நீண்டு விரிந்து கொண்டே போயிற்று.  புதிய வீடுகள் கட்ட நிலமில்லை.  அப்துல் காதர் தனக்குச் சொந்தமான நிலத்தில் வீட்டு மனைகள் போட்டு மக்களுக்குக் குறைந்த விலையில் கொடுத்தார்.
நீடூரை அடுத்த திருவாளப்புதூரில் வீடு இல்லாமல் மரத்தடிகளில் பல குடும்பத்தினர் வசித்தார்கள்.  அப்துல் காதர் மாவட்டக் கழகம் (ஜில்லா போர்டு) மூலமாக அவர்களுக்கு 24 வீடுகள் கட்டிக்கொடுத்தார்.  அப்போது அவர் மாவட்டக்கழக உறுப்பினராக இருந்தார்.
தஞ்சை மாவட்டக் கழக உறுப்பினராக இருமுறை அப்துல் காதர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கை இது காட்டுகிறது.

பள்ளிவாசல்
கொள்ளிடத்தை அடுத்து துளசேந்திரபுரத்தில் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வசிக்கிறார்கள்.  அவர்கள் தங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும்படி அப்துல் காதரிடம் முறையிட்டார்கள்.  அவர் அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்ததுடன், அவர்கள் தொழுகை நடத்த ஒரு பள்ளி வாசலும் கட்டிக் கொடுத்தார்.  அவர்களின் பிள்ளைகள்  படிக்க ஒரு ‘மதரசா’வும் (அரபிப் பள்ளிக்கூடம்) நிறுவினார்.
மயிலாடுதுறைக் கடை வீதியில் ஏராளமான முஸ்லிம்கள் கடை வைத்திருந்தார்கள்.  அவர்கள் தொழுவதற்கு அருகில் ஒரு பள்ளிவாசல் இல்லை.  அப்துல் காதர் கடை வீதியை அடுத்து ஒரு பள்ளிவாசல் கட்டிக் கொடுத்தார்.


அரபிக் கல்லூரி
நீடூரில் உள்ள அரபிப் பள்ளிக் கூடத்தின் நிர்வாகத் தலைவராகவும் அப்துல் காதர் இருந்தார்.  அப்போது 5 அறைகள் புதிதாகக் கட்டிக் கொடுத்து, அதைக் கல்லூரியகாவும் ஆக்கினார்.  1948இல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவையும் சிறப்பாக நடத்தினார்.  1953இல் நடத்த பட்டமளிப்பு விழாவுக்கு அவர் தலைமை தாங்கவும் செய்தார்.
நீடூரில் பெண்களுக்கான தொடக்கப் பள்ளி ஒன்றையும், மாணவர்களுக்கு உயர் தொடக்கப்பள்ளி ஒன்றையும் தொடங்கினார்.
நீடூரில் இஸ்லாமிய நூல் நிலையம் (அஞ்சுமன்) ஒன்றையும் அமைத்தார்.
அது இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
“நீங்கள் சம்பாதித்த பணத்திலிருந்து நற்செலவு செய்யுங்கள்” என்று திருக்குரான் சொல்லுகிறது.  குரான் வழியில் வாழ்ந்த அப்துல் காதர் தான் சம்பாதித்த பணத்திலிருந்து ஊர்ப்பணிகள் செய்தார்.  அதன் காரணமாக வாழும் போதே வரலாற்றில் இடம் பெற்றார்.  ஏம்.ஆர்.எம். அப்துல் ரகீமின் அரிய படைப்பான “இஸ்லாமியக் கலைக்களஞ்சிய”த்தில் அப்துல் காதரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. அவரது வாழ்வும் பணியும் சொல்லப்பட்டுள்ளன.


அப்துல் காதர் தம்பதிகளுக்கு மொத்தம் 9 குழ்ந்தைகள் பிறந்தார்கள் 7 ஆண்கள், 2 பெண்கள்.
                                                            

                                                             ஹாஜி சபீர் அகமது,

                                                         
                                                           அப்துல் லத்தீப்,

                                                           

                                                              அப்துல் ஹக்கீம்,


                                                           முகம்மது சயீது

                                                 முகம்மது அலிஜின்னா.


அப்துல் காதர் சாஹிப் மகள்கள்   ரஹமத்துன்னிஷா , பாத்திமாஜின்னா.

முகம்மது சயீது “சிந்தனைக் களஞ்சியம்” என்ற தனது முதல் நூலை, தந்தை அப்துல் ஹாஜியார், தாய் உம்மு சல்மா பீவி இருவருக்கும் சயீது சமர்ப்பணம் செய்தார்.

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள். ''(ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும். (அவை)
நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா)
பயனளிக்கக் கூடிய அறிவு
தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை'' (ஆதாரம் : முஸ்லிம்)
தாய்  தந்தைக்கு இறைவனிடம் துவா செய்வோம் . : ஒரு மனிதன் இறந்தபின் அவனைஅவரை  தொடரும் மூன்று விஷயங்களில் அவருக்காக  துஆ கேட்கும் ஸாலிஹான பிள்ளைகள். தனக்காக பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளைகள்  அவர் செய்யும் துஆவின் பலாபலன்கள் அவரைச் சென்றடையும், அதாவது துஆவின் மூலம் நன்மைகள் கிடைக்கும், தீமைகள் அழிக்கப்படும்


“தாய் தந்தையருக்கு நன்றி செய்யுங்கள்” என்று திருக்குரான் கூறுகிறது.


 திருவள்ளுவர் படம் வரைந்த சர்மா அவர்கள் மயிலாடுதுறை மதீனா லாட்கில் தங்கி இருந்தார். .அவர் எங்கள் சகோதரர் அப்துல் ஹகீம் அவர்களுக்கு நண்பர். நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க  சர்மா அவர்கள் வரைந்து கொடுத்த எங்கள் தந்தை




ஹாஜி சி .ஈ .அப்துல் காதர் சாஹிப் அவர்கள் 
படம் .
சில காலம் கடந்துதான் திரு . சர்மா அவர்கள் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்.  அந்த வள்ளுவர் படம் பல தலைவர்கள் முன்பு பெரிய விழாவில் அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. நான் அப்பொழுது சென்னை லயோலா கல்லூயில்  படித்துக் கொண்டிருந்தபோது அந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கும்  கிடைத்தது

ஊருக்குப் பெருமை

12 comments:

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு அப்பா,

மாஷா அல்லாஹ். எங்களின் கொள்ளு தாத்தாவின் வரலாற்றை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

இதனை பார்க்கும் போது, இறைவனின் பாதையில் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலும் ஊக்கம் பெறுகின்றது. இறைவன் போதுமானவன்.

அப்பா, சிகரெட் குடிப்பது போன்று ஒரு படம் உள்ளது. அதனை நீக்கிவிடுங்கள். சங்கடமாக இருக்கின்றது. வேறு படம் இல்லை என்பது புரிகின்றது. இருப்பினும், பலரையும் இந்த படம் சங்கடத்தில் ஆழ்த்தும் என்பதால் அதனை நீக்கி விடுங்கள். இன்ஷா அல்லாஹ்..

வஸ்ஸலாம்,

உங்கள் பேரன்,
ஆஷிக் அஹமத் அ

mohamedali jinnah said...

அன்புள்ள பேரன் ஆஷிக் அஹமத் அவர்களுக்கு இன்ஷால்லாஹ் வேறு படம் கிடைக்கும்போது மாற்றிவிடுகின்றேன். மூத்த அன்பு அண்ணன் படமில்லாமல் நன்றாக இருக்காது ,மனம் இடம் தராது . இதனை எழுதும் போது கண்ணில் நீர் வழிகின்றது

asma said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உங்கள் தந்தை செய்த நற்காரியங்களுக்கு இறைவன் மறுமையின் நல்வாழ்வையும், நற்கூலிகளையும் வழங்குவானாக!

உங்கள் சகோதரர் 'முகம்மது சயீது' வக்கீல்தானே? மயிலாடுதுறை 'லயன்ஸ் க்ளப்' பில் முக்கிய உறுப்பினர் என்றும் நினைக்கிறேன். அப்படியானால் இவர்களின் மருமகனாருடையதுதானே மன்சூர் கைலி சென்டர்?

இப்னு ஹம்துன் said...

தங்களின் தகப்பனாரைப் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி.
செயற்கரிய செய்த பெரியவர் என்பது புலனாகிறது. அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த நன்மையை வழங்கட்டும்.
நம் சமுதாயத்திற்கு இத்தகையவர்களின் தேவையும் சேவையும் இன்னும் இருந்துகொண்டுதானிருக்கிறது.
தங்களின் அன்பைப் பெற்றமைக்கு மகிழ்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

VANJOOR said...

மாமனிதரான தங்களின் தகப்பனாரைப் பற்றி படிக்கும்பொழுதெல்லாம் மகிழ்வுறும் கணங்களில்

என் "அத்தா" வைப்பற்றிய‌ என் சதா சிந்தனைஅதிர்வுகள் என் இரத்த அணுக்களெல்லாவற்றிலும் புத்துயிர் பெறுகின்றன என்றால் மிகையாகாது.

என் அத்தா இளையாங்குடி DR.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர். அல்ஹாஜ் மர்ஹூம் வாஞ்ஜூர் பீர் முஹம்மது. அவர்களைப் பற்றியும் இவ்விடம் பதிய தாங்கள் அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன், முன்கூட்டிய நன்றியுடன்…


சொடுக்கி >>> இளையான்குடியின் முக்கியஸ்தர்கள்.-- அல்ஹாஜ் மர்ஹூம் வாஞ்ஜூர் பீர் முஹம்மது. <<< படிக்கவும்

சொடுக்கி >>> இளையாங்குடி DR.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர். அல்ஹாஜ் மர்ஹூம் வாஞ்ஜூர் பீர் முஹம்மது. <<<< படிக்கவும்

.

mohamedali jinnah said...

DR.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர். அல்ஹாஜ் மர்ஹூம் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் உங்களுக்கு தந்தை மக்களுக்கு கல்வி மற்றும் மற்ற சேவையின் வழியே பொதுவான உயர்ந்த மனிதர் .அவர்களுக்கு நாங்கள் இறைவனிடம் துவா செய்கின்றோம்

MARECAN said...

Aasalamu Alaikum

great explanation about "atha", and moreover its very interesting to know about your family.
Hats-off to nidur seaons


Hassan Marican

MARECAN said...

Aasalamu Alaikum

great explanation about 'atha' moreover its interesting to know about your family.

Hats-Off to Nidur Seasons Blog

mohamedali jinnah said...

மிக்க நன்றி ஹுசைனி மறைகான் அவர்களே
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
“Allâh will reward you [with] goodness.”

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

படத்தை மாற்றியதற்கு ஜசாக்கல்லாஹ் அப்பா...

ப.கந்தசாமி said...

தங்கள் தந்தையாருக்கு எனது அஞ்சலிகள். தோன்றில் புகழொடு தோன்றுக என்ற இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டா வாழ்ந்துள்ளார். வாழ்க அவர் புகழ்.

vadakaraithariq said...

மாஷாஅல்லாஹ்..,
தகவலுக்கு நன்றி அண்ணா