Wednesday, December 14, 2011

வெறும் அழகினால் மட்டும் சாதித்து விட முடியாது !


ஒவ்வொரு வெற்றிகரமான மனிதன் பின்னால் எப்போதும் ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறப்படுகிறது.  அதனால் பெண்களை குறைத்து மதிப்பிடக் கூடாது. பெண்ணே தாயாகவும், பேணிக் காப்பவளாகவும் , துணையாக நின்று ஊக்குவிப்பவளாகவும், இனிய வாழ்வில் இன்பம் தரும் மங்கையாகவும் இருப்பது உண்மை . அறிவுத் திறனால் குடும்ப ஆட்சியோடு மட்டுமில்லாமல், நாட்டினேயே ஆட்சி செய்வதற்கு தகுதி  வாய்ந்தவர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள்.
  பெண்ணின் பணிவு உயர்வானது. பொறுப்பு  அவர்களிடம் கிடைத்து விட்டால் தனக்கு நிகராக அடுத்தவர் வருவதை அவர்கள் விரும்புவதில்லை. அதிலும் ஆட்சி செ
ய்யும்  அளவுக்கு வந்து விட்டால் அவர்கள் எடுப்பதே முடிவு. அனைத்திலும் அவர்கள் மிகைத்தே நிற்பார்கள். ஆனால் அறிவின் ஆற்றலில்லாமல் வெறும் அழகினால் மட்டும் அதற்கு தகுதியானவர்களாக ஆகிவிட  முடியாது .
 
 

கிளியோபாட்ரா எகிப்து நாட்டின் ஆட்சியாளராக இருந்தது கிளியோபாட்ராவின் அழகு மட்டும் காரணமல்ல  . கிளியோபாட்ரா ஒன்பது மொழிகளில் சரளமாக பேசக் கூடியவளாகவும்   கணித, தொழில் வல்லமை பெற்றவளாகவும்,  சிறந்த அரசியல்வாதியாகவும் இருந்ததாக சரித்திரம் சொல்கிறது.  கிளியோபாட்ரா பண்டைய எகிப்தில் மிகவும் பிரபலமான ராணியாக இருந்தாள். அவள் அலெக்ஸாண்ட்ரியாவில் 69 கிமு பிறந்தார். அவரது சகோதரிகள் இறந்த பிறகு, அவர் அரியணை அடைந்தாள். மற்றும் தனது ஆட்சியின் போது, தனது ஆட்சி  வேகமாக விரிவடைந்த ரோமானிய பேரரசாக  எகிப்து இருக்க வேண்டுமென வெகுவாக விரும்பினாள் . கிளியோபாட்ராவின் தோற்றத்தை மட்டும் வைத்து அதனை சாதிக்கவில்லை ஆனால்  எகிப்து பேரரசை பாதுகாக்க கிளியோபாட்ராவின் அறிவின் ஆற்றலால்  ஜூலியஸ் சீசர் மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய  ரோமன் படைத்தலைவர்கள் மயங்கியதாக சொல்லப்படுகிறது. பெண்ணிற்கு தோல்வியை தாங்க முடியாது.இந்த நிலைக்கு  கிளியோபாட்ராவும் விதி விலக்கல்ல.

1 comment:

Anonymous said...

பதிவுக்கு நன்றி... தெரிந்தவற்றை பரப்புவது நல்லோரின் பணி...

///////தனது ஆட்சி வேகமாக விரிவடைந்த ரோமானிய பேரரசாக எகிப்து இருக்க வேண்டுமென வெகுவாக விரும்பினாள் .//////