சகோதர சண்டை! இது நடக்கும் குடும்பமும் உண்டு !
இதற்கு என்ன காரணம்? - புரியாத புதிர் அல்ல.
வளர்ந்த விதம் ,வளர்க்கப்பட சூழ்நிலை , ஐந்துவரை அண்ணன் தம்பி, அதற்கு மேல் பங்காளி"என்ற பழமொழி உண்மையாகிவிட வந்த மனைவியின் தவறான வழி காட்டுதல், "அவசர மான உலகத்தில் அண்ணன் ஏதடா! தம்பி ஏதடா!" எனறு எண்ணுவதும், என்று பல இருப்பினும் இது சமயங்களில் குழந்தை பருவத்தில் இருந்தும் ஆரம்பிக்கும்.
இந்த சண்டைக்கு ஒரு காரணம் , வளர்ந்த தன் மீது தன் பெற்றோரின் கவணம் திரும்பவேண்டும்; தன்னை மதிக்காமல் பெற்றோரின் அன்பு, பாசம் சமமாய் கொடுக்கப்படவில்லை எனறு எண்ணுவதும் . இது குழந்தை பருவத்தில் இருந்தும் ஆரம்பிக்கும். பொதுவாக நாம் பார்க்கலாம் அடுத்து உள்ள சகோதரருக்குள்தான் இது இருக்கும் , தாய் தனது இளம் குழந்தை மீது கவணம் காட்ட வேண்டிய நிலை.அதனை கண்டு குழந்தையின் நேர் மூத்த குழந்தை தனது தாய் இவனால்தானே தன் மீது தன் அம்மா பாசமாக இல்லை எனறு எண்ணத் துவங்கி அது தனது உடன் பிறந்த குழந்தை சகோதரன் மீது வெருப்பினை காட்ட துவங்கி அது அவன் மனத்தில் ஆழமாக பதிந்து இப்படி இளம்வயதில் நடக்கும் சண்டைகள்தான், பின்னால் இது பெரியவன் ஆன பின்பும் தொடர்கின்றது ,இது கால இடைவெளி அதிகமாக பிறக்கும் குழந்தைகளுக்குள் ஏற்பட வாய்ப்பு குறைவு .அதில் பாசம் உயர்ந்து நிற்கும். இதற்கு இடம் வராமல் பெற்றோர் கவணமாக இருப்பது நல்லது . இதற்கான முழுப்பொறுப்பையும் பெற்றோர் மீதும் சுமத்துவதும் சரி அல்ல .
No comments:
Post a Comment