Sunday, December 5, 2010

விவசாயம்..


வளர்ந்துவிட்டக்
கணிணி உலகத்தில்;
சாயம் போகும்
விவசாயம்!

ஒடிந்துப்போன
முதுகெலும்பால்;
படுத்தப்படுக்கையாய்
வயல்கள்!

பெருகிவரும் ஆசையால்
சுருங்கிவரும் நிலங்கள்;
அடிக்கல்லை வைத்து
அடிக்கணக்கில் விலைப்பேசி;
மடிநிறையப் பணம் கட்டும்
புது வியாபாரம்!

வாய்க்காலுக்கு
வாய் பார்த்து;
நதி நீருக்கு
விதி நொந்து;
அறுவடைச் செய்தாலும்
அடிமாட்டு விலைக்கு!

வளர்ந்து வரும் வேகத்தில்;
பள்ளிப் பாடத்தில்
மட்டும் வரும்
பின்னொருக்காலத்தில்;
விவசாயம் என்றத் தொழில்...
-யாசர் அரஃபாத்
Source : http://itzyasa.blogspot.com/2010/12/blog-post_3930.html

1 comment:

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
விவசாயத்தில் நாம் அரசியலை புகுத்தினோம்
வெளி நாட்டினர்
நவீனத்தை புகுத்தினர்