Tuesday, December 7, 2010

விக்கிலீக்ஸ் நிறுவனர் கைது!

விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அஸான்ஜி பிரிட்டன் காவல்துறையிடம் சரண் அடைந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் அமெரிக்க அரசுக்கு அனுப்பிய இரகசியத் தகவல்களைத் தனது இணையதளத்தில் வெளியிட்டது முதல் அஸான்ஜிக்கு பல்வேறு நெருக்கடிகள் தரப்பட்டு வருகின்றன.

கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளான விக்கிலீக்ஸின் சேவை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஏராளமான மிர்ரர் தளங்களை அவர் உருவாக்கினார். அவருக்கு உலகம் முழுவதும் நிதியுதவி அளிப்பதற்கு வசதியாக பேபால் என்ற இணைய பணப்பரிமாற்ற நிறுவனம் அவரது கணக்கை முடக்கியது. சுவிஸ் வங்கியில் இருந்த அவரது கணக்கும் முடக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அஸான்ஜி ஸ்வீடனில் இருந்தபோது இரண்டு பெண்களிடம் பாலியல் வன்முறை செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சுவிஸ் நீதிமன்றம் அவருக்கு கைதாணை பிறப்பித்தது.

39 வயதான அஸான்ஜி தற்போது இங்கிலாந்தில் வசித்து வருவதால் சுவிஸ் நாட்டின் கைதாணை பிரிட்டன் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எந்நேரமும் தாம் கைது செய்யப்படுவோம் என்பதை உணர்ந்த அவர், தன்னுடைய வழக்கறிஞர் மூலம் லண்டன் மாநகரக் காவல்துறையிடம் சரன் அடைந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, அஸான்ஜி கைது செய்யப்பட்டால் அமெரிக்க அரசிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் மிக முக்கியமான ஆவனங்கள் மற்றும் ஒளிக்காட்சிகள் வெளியிடப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தனர். இவற்றை அஸான்ஜி தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ஏற்கனவே அனுப்பிவிட்டதாகவும் அவை விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

குவாண்டனமோ பேயில் உள்ள சிறைச்சாலை, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதல்களின் போது பெருமளவில் பொதுமக்கள் பலியாவது போன்ற வானில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள், பேங்க் ஆஃப் அமெரிக்காவின் ஆவனங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான ஆவனங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Source: http://www.inneram.com/2010120712343/wikileaks-founder-julian-assange-arrested-in-uk

2 comments:

Admin said...

த்ரில்லர் படம் பார்ப்பது போல் அடுத்து என்ன நடக்க போகிறது? என்று அனைத்து மக்களும் காத்திருக்கின்றனர்.

FARHAN said...

அமெரிக்கா தனது முழு பலத்தினையும் உபயோகித்தாலும் அதன் முகத்திரை கிழியும் நேரம் மிக அருகில்