Monday, June 19, 2017

ஈமான் என்பதன் பொருள் நம்பிக்கை.

அல்லாஹ்வின் நாட்டமில்லாமல்
யாரும் யாரையும் அழிக்க முடியாது.
யாரையும் வாழ வைக்கவும் முடியாது.
இதுதான் நிஜம்.
இந்த நிஜத்தின் மற்றொரு பெயர் ஈமான்.
ஈமான் என்பதன் பொருள்
நம்பிக்கை.
இறை நம்பிக்கையுள்ளவர்கள்
இறைவனுக்கு மட்டுமே பயப்படுவார்கள்.
மற்ற எதற்கும் பயப்படமாட்டார்கள்.
இறை நம்பிக்கை பலஹீனமானவர்கள்
இறைவனைத் தவிற எல்லாவற்றுக்கும்
பயப்படுவார்கள்.

வாழ்வதோ
வீழ்வதோ
இறைவன் நாட்டப்படிதான் நடக்கும்.
யார் ஆட்சிக்கு வந்தாலும்
யார் அதிகாரத்திற்கு வந்தாலும்
இறையதிகாரத்தை
வெல்லும் அதிகாரம்
யாருக்குமில்லை !
* ஹஸ்புனல்லாஹ்வு வ நிஃமல் வகீல் ...

Abu Haashima

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails