Tuesday, June 27, 2017

நண்பருக்காக தனது மடி வழக்கத்தை துறக்கத் தயாராக இருந்த ஐயர்.

அப்பாவுக்கு புதுக்கோட்டையில் எலக்ட்ரிக் கடை. நான் குட்டி பையனா இருந்தப்ப கணேஷ் ஃபேன்னு ஒரு ஃபேன் வந்துச்சு. அதை தமிழ்நாடு முழுக்க சூப்பர் ஸ்டாகிஸ்ட் எடுத்து இருந்தாரு ஒரு ஐயரு. ரொம்ப ஆச்சாரமானவரு. அந்த ஐயரு புதுக்கோட்டை மாவட்டத்துக்கு எங்க அப்பாவை டீலராக்கி இருந்தாரு. இப்ப வரைக்கும் அவரு பேரு எனக்குத் தெரியாது. காரணம் அப்பா அவரை கணேஷ் ஃபேன் சாமினு தான் சொல்லுவாரு கூப்பிடுவாரு. ரெண்டு பேரும் அண்ணன் தம்பி மாதிரி பழகுவாங்க.

மாசம் ஒருக்கா வருவாரு. அவரு வர்றப்ப எங்க அப்பா அவரை அப்ப கீழராஜவீதில இருந்த அம்பீஸ் கஃபேக்கு சாப்பிட கூட்டி போவாரு. போய்ட்டு வீட்டுக்கு வருவாங்க. அவரு எங்க அம்மாகிட்ட " ஏம்மா உன் சாப்பாடே நான் சாப்பிட்டுகிறேன்னு சொல்றேன். உங்க ஆத்துக்காரர்தான் ஐயரு ஹோட்டலுக்கு கூட்டி போறாருன்னு" கம்ப்ளைண்ட் வாசிப்பாரு. "சாமி, உங்களுக்கு சாங்கியம் சடங்கு இருக்கும். என்னால அது கெடக்கூடாதுல்ல" என்று பதில் சொல்வார் அப்பா. " நண்பருக்காக தனது மடி வழக்கத்தை துறக்கத் தயாராக இருந்த ஐயர்.. தன் பொருட்டு அவர் வழக்கம் மாறிவிடக் கூடாது என்று அவரோடு வெஜ்டேரியன் சாப்பிடப் போகும் பாய்" என இருவரும் ஒருவருக்கு ஒருவர் நட்பில் சளைக்கவில்லை. ஒருமுறை அப்பா தொழிலில் நொடித்த சமயத்தில் பணம் எப்ப வேணும்னா குடு பாய்னு தொடர்ந்து சப்போர்ட் செய்தார்.
பின்னர் அவரது மகன் வளர்ந்து அப்பாவுக்கு பதிலாக வர ஆரமித்தார். நான் பார்த்த காலத்தில் பழக்கத்திலும் குணத்திலும் எங்க சாமிக்கு பிள்ளை தப்பாமல்தான் இருந்தார். இப்ப அவரை டிவில பார்க்கும் போதுதான் அதிர்ச்சியா இருக்கு!! அந்தப் பிள்ளை பிஜேபி ஸ்போக்ஸ் பர்சன் அண்ணன் நாராயணன்!!

M.m. Abdulla

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails