கருகமணி கட்டிவிட்டு காத தூரம் போனவரே
கருகமணிகளை எண்ணியபடி கண்கலங்கி நிற்கிறேன்
மாதமொன்றை எனக்காகவும்
மீதமானதை பணத்துக்காகவும்
வாழ்பவரே
தவிக்க விட்டுவிட்டு போனீரே
என் தலைவனே
உன் வாசம் இன்னும் போகலையே
நித்தம் உன்னை
தொலைபேசி வழியே
நான் சுவாசிக்கிறேன்
நீ பேசாதவேளை
உன் அழைப்பின் சத்தத்தைக்கூட
நேசிக்கிறேன்
நீ வரும் நாளை சொல்லிவிடு
வந்து
அன்பை கொஞ்சம் கிள்ளிக்கொடு
ஆவலோடு காத்திருக்கும்
என்னையும் மெல்ல அள்ளிக்கிடு
இப்படிக்கு
உன் கருகமணிக்கு சொந்தக்காரி!
Sadhiq Prince

No comments:
Post a Comment