Thursday, June 29, 2017

பலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி -2

Saif Saif
பலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி -2
------------------------------------------------------------
அன்றைய அரேபிய தீபகற்பம் அறியாமையில் மூழ்கி கிடந்த கடுமையான காலம்...
ஒருத்தியோடு பலபேர் சேர்ந்திருக்கும் நிலையும்,திருமணம் செய்யாமலேயே பலபேரோடு சேர்ந்து வாழும் போக்கும் நிறைந்த அறியாமை காலம்.
இந்த நேரத்தில் இறைத்தூதரின் வருகை..அவரை பிறரிடம் இருந்து அவர்களை உயர்வுபடுத்திக் காட்டியது..
நபி(ஸல்) அவர்கள் இளமை பருவத்திலேயே உயர் பண்புடையவராகவும்,மென்மை குணமுடையவராகவும்,அமானிதம் பேணி வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவர்களாகவும்,
பிறர் சிரமங்களை தானே தாங்கிக் கொள்பவர்களாகவும் ,அவர்களுக்கு உதவுபவர்களாகவும் இருந்ததால் அல்அமீன் நம்பிக்கையாளர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்கள்...
(ஸஹீஹுல் புகாரி)

அவர்களுடைய வாலிப பருவத்தில் அல் மக்ஜூமி என்பவருடன் வணிகத்தில் ஈடுபட்டு அவருக்கு நம்பிக்கைக்குரியவராய் திகழ்ந்தார்கள்..(அபூதாவூது)
25 ம் வயதில் நபியின் நேர்மை,நம்பகத்தன்மை அறிந்த கதீஜா (ரலி) அவரை தன் வியாபரத்திற்காக அழைத்து ஒரு பங்கு லாபம் தருவதாகவும் வாக்குக் கொடுத்தார்கள்..
அதுபோலவே கதீஜா அவர்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டிய நபி(ஸல்) அவர்களின் நன்நடத்தை உயர் சிந்தனை பேச்சில் உண்மை இவற்றை அறிந்த கதீஜா(ரலி) அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள்..
இது சமயம் கதீஜா அவர்களுக்கு இருமுறை திருமணம் நடந்து கணவனை இழந்த விதவை
அவர்கள்..வயது 40.
நபியின் வயது 25.
கதீஜா(ரலி) அவர்களோடு வாழ்ந்த 25 வருடங்கள் நபிகள் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை...இது தான் நபி(ஸல்) அவர்களின் முதல் திருமணம்..
கதீஜா அவர்களின் மறைவுக்கு பின்னால் தன்னுடைய பிள்ளைகளுக்காக ஸவ்தா(ரலி) அவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்..இவரும் விதவை தான்..
நபிகள் செய்த திருமணங்கள்
அனைத்துமே விதவைகள் தான்..ஆயிஷா(ரலி) மட்டுமே கன்னிப்பெண்..
இது பற்றி இறை நாடினால் பிரிதொரு பதிவில் தனியாக விரிவாகப் பார்க்கலாம்..
நபியின் சில திருமணங்கள் அடிமைகளை விடுதலை செய்ய வைத்தது..சில எதிரிகளோடு
இணைய வைத்தது..
சில நெருங்கியவர்களை கூட இன்னும் நேசமாக்கியது..
அபூ ஸுஃப்யான் மகள் உம்மு ஹபீபா(ரலி) அவர்களை நபிகள் திருமணம் செய்ததால் அபூஸுஃப்யான் இஸ்லாத்திற்கு எதிரான தன் தீய செயல்களை குறைத்துக் கொண்டார்..இவர் இஸ்லாத்திற்கு விரோதியாக இருந்தவர்..
ஜுவைரியா(ரலி) அவர்களை நபிகள் மணந்ததால் நபியின் மனைவியின் சொந்தங்களை எப்படி அடிமைகளாக வைத்துக் கொள்வது என போரில் பிடிபட்ட அடிமைகள் அனைவரையும் முஸ்லிம்கள் விடுவித்து விட்டார்கள்..
அந்த காலத்தில் அடிமைகளை வைத்துக் கொள்ளும் பழக்கம் பரவலாக இருந்தது..
இதை உடனடியாக விட முடியாத பழக்கமாக இருந்தது..காரணம் அடிமைகளை பலரும்
விலை கொடுத்து வாங்கியிருந்தார்கள்..
மேலும் அடிக்கடி போர் நடப்பதால் அதில் அடிமைகளை விடுவிக்க சொன்னால் அது எதிரிகளுக்கே சாதகமாக அமையும் என்பது தெரிந்தும்..
சத்தியம் செய்து யாராவது முறித்து விட்டால் அடிமைகளை விடுவிக்கலாம் எனவும்,
அடிமையை விடுதலை செய்தால் அவர் சம்பந்தபட்டவர்களுக்கு அவர் எஜமான் வாரிசாவார் எனவும்,
ஒப்பந்த முறையில் அடிமைகளை விடுவிக்கலாம் எனவும் நபிகள் அனுமதி வழங்கி அடிமைகளை விடுதலை செய்ய வைத்தார்கள்..
மேலும் அடிமை பெண்களை திருமணம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் இறைமறை வசனம் தெளிவு படுத்துகிறது..
ஆகவே முஃமினான அடிமைப் பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்.(4:25)
உமர்(ரலி) யின் மகள் ஹஃப்ஸா(ரலி) இவர் கணவர் இறந்த பிறகு உமர் அவர்கள் உஸ்மான்(ரலி),அபூபக்கர்(ரலி) இருவரிடமும் தன் மகளை திருமணம் முடிக்க சம்மதம் கேட்டு அவர்கள் மணமுடிக்க மறுத்த வேளையில் தான் நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா(ரலி)யை திருமணம் செய்துக் கொள்கிறார்கள்..
குர்ஆன் பிரதிகள் ஆரம்பத்தில் அபுபக்கர்,உமர் அவர்களிடம் பாதுகாக்கப்பட்டு அவர்கள் காலத்திற்கு பிறகு ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் பாதுகாக்கப்பட்டதாக
தெரிந்து கொள்கிறோம்..
நபி(ஸல்) அவர்கள் தன் இளமை பருவத்தில் 25 வயதில்
ஒரு திருமணம் தான் செய்திருந்தார்கள்.கதீஜா அவர்களின் மறைவுக்கு பிறகு தான் பல திருமணங்கள் செய்திருக்கிறார்கள்..
அதாவது தன் நபித்துவத்திற்கு முன்பு வரை ஒரு திருமணம் தான் செய்திருந்தார்கள்..நபித்
துவத்திற்கு பிறகு தான் பல திருமணங்கள்..
நபித்துவதற்கு முன்பு திருமணங்கள் செய்திருந்தால் அதை யாரும் விமர்ச்சிக்க மாட்டார்கள்..ஆனால் நபித்துவத்திற்கு பின்பு என்பதால் விமர்சனம் வருகிறது..ஆனால் நபித்துவற்கு
முன்பு நபிகள் அந்த மக்களோடு வாழ்ந்தவர்கள் தானே.?.
அவர்களின் ஆரம்ப காலம் எவ்வாறு இருந்தது என்பதை அம்மக்கள் அறிந்தவர்கள் தானே..?
அதை இறைமறை மூலமாகவே இறைவன் சொல்கிறான்..
"நிச்சயமாக நான் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?" என்று (நபியே!) நீர் கூறுவீராக(10:16)
நபித்துவத்திற்கு முன்பு கூட அப்பழுக்கற்ற தூய்மையான வாழ்க்கையும் யாரும்
எந்தக் குறையும் சொல்ல முடியாத சொக்கத் தங்கமாக வாழ்ந்தவர்கள் நபி(ஸல்) அவர்கள்..
ஒரு மனைவியை திருமணம் செய்தே குடும்பத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடும் போது பல திருமணங்கள் செய்து அனைவரையும் சமாளிப்பதென்பது எவ்வளவு சிரமமான காரியம்..
இப்படி ஒரு சிரமமான பணியை இறைதூதர் ஏன் ஏற்றெடுத்துச் செய்ய வேண்டும்..?
அவர்களின் வாழ்க்கை விதவைகள் மறுவாழ்வு,எதிரிகளை நேசமாக்குவது,அடிமைகளின் விடுதலை, இஸ்லாத்தை பரப்புதல் என பல வழிகளில் நீண்டு விரிந்தாலும்
நபியின் வாழ்வியல் வழிமுறைகளும் ஒரு சின்ன எல்லைக்குள் கட்டுப் பட்டு விடக்கூடாது..
பல வழிகளிலும் மக்களை சென்றடைய வேண்டும்..பயன் பட வேண்டும் களங்கம் இல்லா அவர் வாழ்க்கை உலக அளவில் மெய்ப்பிக்கப் பட வேண்டும்.என்ற இறை நாட்டமும் கூட இத்திருமணங்களுக்கு
முக்கிய காரணமாக இருக்கலாம்..
"உங்கள் மனைவியரில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர்.."உண்மையில் அதுபோலவே வாழ்ந்தவர்கள் நபிகள் பெருமான்..
நபியின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது..என்ற கேள்விக்கு குர்ஆனாகவே இருந்தது
என்ற பதிலை நபியின் மனைவிகளால் அதனால் தான் தர முடிந்தது..
ஒரு மனிதனின் வாழ்க்கையை அளந்து பார்க்கின்ற சரியான அளவுகோல் அவனது இல்லற வாழ்க்கை தான்.
வெளியில் ஒருவர் எவ்வளவு
நல்லவராக நடித்தாலும்
வீட்டில் மனைவியிடம் நடிக்க முடியாது..எல்லா மனைவிகளுக்கும் தன் கணவனை பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும்..
ஒருவரை பற்றி தவறாக
ஒரு மனைவி
சொல்வதாக இருந்தால் இன்னொருத்தியுடன் தொடர்பு வரும் போது தான் அது உடனே வெளிப்படும்..
ஆனால் இங்கு நபிகள் பல திருமணங்கள் செய்தாலும் நபியை பற்றி யாருமே
எந்த குறையும் சொல்லவில்லை.. அதிலும் இறைதூதரின் மனைவிமார்கள் என்பதால் பல கட்டுப்பாடுகள் இறை புறத்திலிருந்து விதிக்கப் பட்ட பிறகும் ,இப்படி ஒரு கணவரை பெற்றதற்காக அவரை வானளாவ புகழத்தான் செய்தார்கள்..அதன்
மூலம் நபியின் கண்ணியமும்,நேர்மையும் உயர்ந்து கொண்டே தான் சென்றது..
நபியின் இத்திருமணங்கள்
மூலம் தங்கள் நட்புகளையும்,சொந்தங்களை
யும்,விரோதிகளையும் அனைவரையுமே மிக நெருங்கியவர்களாக
ஆக்கிக் கொள்ள முடிந்தது..நபிகள் தங்கள் மனைகளின் பால் காட்டிய சரிவிகித அன்பு குறைஷிகளையும் ஈர்த்தது..இஸ்லாத்தின் வளர்ச்சியும் அதிகரித்தது...
மேலும் நபியவர்களின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்..அதில் எந்த ஒளிவு,மறைவு இருக்கக் கூடாது..எல்லாவற்றையும் வருங்கால மக்கள் அறிந்திருக்க வேண்டும்.. வாழ்க்கையில் நடந்த சிறுசிறு விஷயங்கள் கூட மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும்..என்ற இறை நாட்டம் மட்டுமல்லாது எந்த மனைவிமார்களுமே நபியை கண்ணிய குறைவாக சொல்லாததுமே நபியின் கண்ணியத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்..
நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அறிவிக்கும் பல ஹதீஸ்களில்
குடும்ப வாழ்வியல் வழிமுறைகள்,கணவன் மனைவி அன்பு,போதனைகள் என எல்லாமே ஏராளம் பொதிந்துக் கிடக்கிறது..
பல திருமணங்கள் செய்ய இறைவன் அவர்களுக்கு மட்டுமே அனுமதியளித்து அத்தனை பேரிடமும் நல்லவராகவும் நடக்கச் செய்து அவர்களிடம் இரண்டு வாழ்க்கை இருந்ததில்லை என்பதையும் உலகிற்கு நிரூபித்துக் காட்டினான்.
"அந்த நூறு மனிதர்கள்" (THE HUNDRED) நூலை எழுதிய கிருஸ்தவ ஆங்கில எழுத்தாளர் மைக்கல் ஹர்ட் என்பவர், சமயம்,உலகியல் இரண்டிலும் ஒரு சேர வெற்றி பெற்ற மாமனிதர் இறை தூதர் நபிகள் நாயகம் என்று எடுத்து
காட்டி முதல் இடத்தை
நபிகள் நாயகத்திற்கு கொடுத்துள்ளார் என்றால்
அது மிகை படுத்தபட்ட ஒன்றல்ல...
#இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் தொடரலாம்.

Saif Saif

No comments: