Wednesday, March 29, 2017

மனுஷ்யபுத்திரன் வீடு கிடைக்காததற்கு ....

M.m. Abdulla
மனுஷ்யபுத்திரன் வீடு கிடைக்காததற்கு வருந்தி எழுதிய கட்டுரையை பலரும் மிகைப்படுத்தி எழுதி இருப்பதாகக் கூறுகின்றனர். அவரை விடுங்கள். என் கதைக்கு வருகிறேன்.
கடந்த மூன்று வருடங்களாக நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் அயல் நாட்டில் இருந்து வரும் தனது மகனுக்கு வீடு தேவைப்படுவதாய் சொல்லி காலி செய்ய முடியுமா என்று இந்த மாதம் ஆரம்பத்தில் கேட்டார்.

ஹவ்வா, அஹூ, ஹூரா மற்றும் இன்ன பிற பெண்கள்

ஹவ்வா -    

 வழமையாக வீட்டினைச் சுற்றி வர உள்ள வெளியெங்கும் விளையாடச் செல்லும் சிறுமி ஹவ்வாவுக்கு அன்றைய தினம் ஒன்பது வயது பூர்த்தியாகப் போகிறது. அதனால் அவளுக்கு வெளியே விளையாடச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அவளது தாயும், பாட்டியும் அவளுக்கு ஒன்பது வயது பூர்த்தியாவதை முன்னிட்டு, முழுமையாக உடலைப் போர்த்தும் ஃபர்தாவை அணிய அவள் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். அவள் இனிமேல் வளர்ந்த பெண் எனவும், அவளை பிற ஆண்கள் பார்க்க நேர்ந்தால், அவள் நரகத்துக்கு இட்டுச் செல்லப்படுவாள் என்றும் பாட்டியால் போதிக்கப்படுகிறாள். சற்று நேரம் வெளியே சென்று விளையாடிவிட்டு வர அனுமதிகோரி சிறுமி ஹவ்வா கெஞ்சுகிறாள். ஒன்பது வருடங்களுக்கு முன்பு இதேநாளில் மத்தியானம்தான் அவள் பிறந்தாள் என பாட்டி கூறியதும், அப்படியானால் தனக்கு இன்னும் ஒன்பது வயது ஆகவில்லை அல்லவா? மத்தியானம் பன்னிரண்டு மணியாகும்போது விளையாடிவிட்டு வந்துவிடுவேன், ஃபர்தாவையும் அணிந்துகொள்கிறேன் எனக் கூறுகிறாள் சிறுமி. பன்னிரண்டு மணியானதை எப்படி அறிந்துகொள்வாய் எனக் கேட்ட பாட்டி ஒரு வழிமுறையை சொல்லிக் கொடுக்கிறாள். ஒரு குச்சியை செங்குத்தாக நட்டு, அதன் நிழல் இல்லாமல் போனால் அப்பொழுதுதான் சரியாக பன்னிரண்டு மணி. அதைத் தாண்டியும் நீ முக்காடு அணியாமல், பிற ஆண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தால் நீ நரகத்துக்குச் செல்லும் பாவி ஆகிவிடுவாய் எனக் கூறும் பாட்டி அவளை விளையாடச் செல்ல அனுமதிக்கிறாள்.

Tuesday, March 28, 2017

மீன் மழை


மூங்கில் கூடைகளின் மீன்கள்
கூவி விற்கும் சிறுவனின் குரலில்
இறந்தகாலத்தைப் பாடித் திமிறும்  


மீனவத் தெருவின் வாடையை
விருப்பத்தோடு நுகரும் காற்று
பனங்குருத்து வலைத் தொப்பிகளைக் காவும் காலை நேரம்
சூளைத் தொழிலாளியின் செங்கற்களைச் சுமந்த
கைவண்டியில் அவ்வப்போது
அம் மீன்கள் பயணிக்கும்


Saturday, March 25, 2017

பிரியாது ....

தாயின்
உள்ளத்திலிருந்து
பாசம் பிரியாது ....
மலரின்
இதழ்களிலிருந்து
வாசம் பிரியாது ....
வனத்தின்
பரப்பிலிருந்து
மரங்கள் பிரியாது ....
வானத்தின்
உடலிலிருந்து
நீலம் பிரியாது ....
தாவரத்தின்
வேரிலிருந்து
நிலம் பிரியாது ...

Wednesday, March 22, 2017

GLOBAL SPIRITUAL GARDEN (GSG) ஓர் அறிமுகம்

GLOBAL SPIRITUAL GARDEN (GSG) ஓர் அறிமுகம் 
எனக்கு 58 வயதாகிறது. இன்னும் எத்தனை காலம் இந்த உலகில் இந்த உடலோடு இருக்கப் போகிறேன் என்று தெரியாது. நான் இந்த உலகை விட்டுப் பிரிந்து போவதற்குள் என்னால் முடிந்த சேவையை சகமனிதர்களுக்குச் செய்ய வேண்டுமென்ற ஆசை எனக்கு. அதனால்தான் எனக்குத் தெரிந்த தியான முறைகளையும், உண்மையை அறிந்துகொள்ளவேண்டும் என்ற தேடல் கொண்டவர்களுக்கான உதவிகளையும் நான் என்னால் முடிந்தவரை இவ்வளவு காலமாகச் செய்து வருகிறேன்.

இப்போது அதை உலக அளவில், அல்லது குறைந்த பட்சமாக இந்திய அளவில் கொண்டுபோகவேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகிவிட்டது. அதன்காரணமாக, எனக்குத் தெரிந்த, ஆன்மிகப் பணியிலும் தேடலிலும் என்னோடு இருந்த சிலர், ஆன்மிகத்தில் ஏற்கனவே ஆர்வமும் முயற்சியும் பயிற்சியும் பெற்ற இன்னும் சிலரின் உதவியோடு GSG தொடங்க இருக்கிறது.

Monday, March 20, 2017

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்

Published on 17 Mar 2017
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

*வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை. இராணுவ நடவடிக்கை குறித்தும் ஆராயப்படும் என்று அமெரிக்க அரசுத்துறை செயலர் கூறுகிறார்.

*சீனாவின் தூரமேற்கே சிஞ்சாங் மாகாணத்தில் இருந்து சிறப்பு தகவல்.சீனா அங்கு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடத்துவதாக கூறுகிறது.

*நூலிழையில் உயிர் தப்பிய பிபிசி குழு. இத்தாலியின் எட்னா எரிமலை வெடித்தபோது அகப்பட்டுக்கொண்டனர்.

எனக்குத் தெரிந்து ....! நாணயத்தின் விலை.

எனக்குத் தெரிந்து, பல வருடங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து திரவியம் தேடி உகாண்டாவுக்கு வந்தனர் இரு சகோதரர்கள். இருவரில் ஒருவர் பணிசெய்துவந்தார் மற்றொருவர் வியாபாரம் செய்யவேண்டுமென முனைப்பாக இருந்து முட்டிமோதி எப்படியோ ஒரு சிறு வியாபாரத்தை ஒரு சிறு நகரத்தில் தொடங்கி மிகவும் கண்ணும் கருத்துமாக நடத்தி முன்னேற்றமும் கண்டுவந்த தருணத்தில் இடிபோல ஒரு சம்பவம் அவர் தலைமேல் விழுந்தது.

Sunday, March 19, 2017

Wax removal from apple. Cleaning apples.

• ஒரு படைப்பின் காப்புரிமை முதன்மையாக யாருக்குச் சொந்தமானது?

• ஒரு படைப்பின் காப்புரிமை முதன்மையாக யாருக்குச் சொந்தமானது?
— அதன் ஆக்கியோன் யாரோ அவரே முதன்மை உரிமையாளர்.
• ஆக்கியோன் என்பவர் யார்?
— இலக்கிய அல்லது நாடகப் படைப்பு என்றால், ஆக்கியோன் – அதாவது, அதை உருவாக்கியவர்.
— இசைப்படைப்பு என்றால், இசையமைத்தவர்.
— திரைப்படம் என்றால், தயாரிப்பாளர்
— ஒலிப்பதிவு என்றால், தயாரிப்பாளர்
— புகைப்படம் என்றால், புகைப்படம் எடுத்தவர்.
— கணினியில் உருவாக்கியது என்றால், அதை உருவாக்க வைத்த காரணியாக இருந்தவர்.
• இசை ஒலிப்பதிவில் யாருக்கெல்லாம் காப்புரிமை உண்டு?

Saturday, March 18, 2017

ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தந்த பேட்டி ....


ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தந்த பேட்டி தன்னுடைய வாழ்க்கையை தலைகீழாக திருப்பிப்போடும் என்று லிஸி வெலாஸ்குவெஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பிரபல விடியோ வளையமான யூட்யூப் இணையத்தளத்தில் ”உலகின் குரூரமான பெண்” என்ற தலைப்பின் கீழ் அவருடைய பேட்டி வெளியிடப்பட்டிருந்தது மட்டுமல்லாமல், மிருகம் போன்ற அவதூறான வார்த்தைகள் கொண்டு லிஸியை வர்ணித்தும் இருந்தனர். கிட்டத்தட்ட 4 கோடி மக்களால் பார்க்கப்பட்டிருந்த வீடியோவின் கீழ் சிலர், ”உலகத்திற்கு நீ செய்யக்கூடிய ஒரே உதவி இது தான், ஒரு துப்பாக்கியை கொண்டு உன்னை நீயே சுட்டுக்கொள்.” என்றும் கமெண்ட்களை தெளித்திருந்தனர்.

மனிதன் என்பவன்

மனிதன் என்பவன் தசையாலான உடலால் மட்டும் செய்யப்பட்டவனல்ல. அவனுக்கு இன்னொரு பகுதி உள்ளது. அது ‘நான்’ என்றும் ’சுயம்’ என்றும் அறியப்படுகிறது. (சூஃபிகள் அதை ‘நஃப்ஸ்’ என்று குறிப்பிடுவர்). மறைஞான அனுபவமானது அந்த ‘நான்’ என்பதைத் தூண்டிவிடுகிறது. மின்சார ஓட்டத்தைப்போல, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அது ஓடுகிறது. அதுவரை பயன்படுத்தப்படாத ஆற்றல்களை அது வெளிக்கொண்டு வருகிறது. சுயம் தூண்டப்படும்போது குறிப்பிட்ட அளவு விழிப்புணர்வும் அகப்பார்வையும் வந்துவிடுகின்றன. தன்னுடைய ‘நான்’ இன்னொரு மிக உயர்ந்த ‘நான்’  என்பதைப் பிரதிபலிக்கிறது என்பதை மெல்ல அம்மனிதன் உணர்ந்துகொள்ளத் தொடங்குகிறான். படைப்புகளிலும், படைப்புகள் மூலமாகவும் இறைவனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை உணரத் தொடங்குகிறான். -- சூஃபி ஞானி ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்.

தகவல் :
Mohamed Rafee நாகூர் ரூமி
உறவாடும் உறவுகள் ...
உயிரினங்கள்
பூமியோடு உறவாடுது ...
பயிரினங்கள்
வயலோடு உறவாடுது ...
உழைப்பு
வேர்வையோடு உறவாடுது ...
மரங்கள்
வேர்களோடு உறவாடுது ...
எண்ணங்கள்
மனசோடு உறவாடுது ...
வண்ணங்கள்
கலையோடு உறவாடுது ...
கற்கள்
மலையோடு உறவாடுது ...
சொற்கள்

Thursday, March 16, 2017

போலீஸ் வாகனம்

dr.habibullaah
Vavar F Habibullah

நமது ஊர் அம்பானி - அதானிகளின் ஆடம்பர பகட்டு வாழ்க்கையை பிரதிபலிக்கும்,
கோடீஸ்வர ஸ்டேடஸ் சிம்பலாக விளங்கும்,
அதி நவீன லக்சுரி கார்கள் வரிசையில் முன்னோ டிகளாக திகழும்.....

லம்பார்கினி, ஆஸ்டன் மார்டின்,பென்ட்லே
பெராரி, ஆடி ஆர் 8, மெர்சிடீஸ் SL 63,
மேக்லாரன் MP4-12C போன்ற கோடிக்கணக் கான விலை மதிப்புள்ள பிரசித்தி பெற்ற இந்த கார்கள் தான் துபை போலீசாரால் ரோந்து பணிக்காக முழு அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Wednesday, March 15, 2017

எனக்குத் தெரிந்து ....! ஒரே வேலை ஒரே நிறுவனம்.

எனக்குத் தெரிந்து, ஒருவர் பலகாலமாக ஒரே நிறுவனத்தில் நிதி நிர்வாகத்தில் இரண்டாம் நிலையில் வேலைபார்த்தார்.
நல்ல நிலையில் இருப்பதாலும், நல்ல சம்பளமும் வசதிகளும் கிடைப்பதால்தான் யாரும் ஒரே நிறுவனத்தில் பல வருடங்களாக தொடர்ந்து வேலைபார்க்க முடியும் என்று எண்ணுவதே உலகவழக்கம். சிற்சில சமயங்களில் அது உண்மையாகவும் இருக்கலாம்.
ஆனால் நடப்பது என்னவென்று பார்ப்போமா?

Tuesday, March 14, 2017

அரசியலில் நெருடலைத் தரும் ஒரு நிகழ்வு

சமீபத்திய அரசியலில்
நெருடலைத் தரும் ஒரு நிகழ்வு ...
செய்தியாளர்களிடம் பேசும்போது
காங்கிரசில் ராகுலைத் தவிர
வேறு யாரும் பேசுவதில்லை.
ஒரு சில நேரங்களைத் தவிர.
திமுகவில் ஸ்டாலினைத் தவிர
வேறு யாரும் பேசுவதில்லை .
ஒரு சில நேரங்களைத் தவிர.

எனக்குத் தெரிந்து ....! வேலைக்கு தகுந்த ஊதியம்.

எனக்குத் தெரிந்து ....!
வேலைக்கு தகுந்த ஊதியம்.
எனக்குத் தெரிந்து, சிறிய ஒரு ஸ்தாபனத்தில் முழுபொறுப்போடு ஒருவர் இருந்துவந்தார். அவர் அந்த வேலையில் சேரும்போதே முதிர்ச்சி அடைந்த நடுத்தர வயதினராக இருந்தார். சொந்தவாழ்க்கையில் பொறுப்புகள் இருந்தாலும் மிகவும் பொறுமையானவராகவும் முதலாளிக்கு முழு நம்பிக்கைக்கு பாத்திரமானவராகவும் இருந்துவந்தார். அதிகாலையில் வேலைக்கு வந்தால் எல்லாமுமாக அலுவலகத்திலேயே இருந்து நடுஇரவில்தான் தங்குமிடத்திற்கு சற்று உறங்கி எழுவதற்காக சென்றுவருவார்.

ஆஹா ஓஹோ... என்று வாட்ஸ்அப்பிலும் பேஸ்புக்கிலும் ஒரு பெரிய கூட்டமே சேர்ந்து கும்மியடிக்கப்போகிறது.

Shahjahan R
கீழே தரப்பட்டிருக்கும் படம் சில நாட்களுக்கு ஓடும். ஆஹா ஓஹோ... என்று வாட்ஸ்அப்பிலும் பேஸ்புக்கிலும் ஒரு பெரிய கூட்டமே சேர்ந்து கும்மியடிக்கப்போகிறது.
படத்தைப் பாத்ததும், ஏதோ இந்தியாவில் ஹைப்பர் டிரெயின் திட்டம் வந்துவிட்டது போலத் தோன்றும். சுருக்கமாக எழுதி விடுகிறேன்.
இது குழாய்க்குள் ஓடுகிற ரயில். படத்தில் இருப்பது சும்மானாச்சிக்கி மாடல்தான். இன்னும் ரயில் உருவாகவில்லை. :)
காற்றின் அழுத்தமும், காந்த சக்தியும் தேவை. மணிக்கு சுமார் 1000 கிமீ வேகம். சொல்லப்போனால், விமானத்தைவிட வேகம். ஆனால் ரயிலின் கட்டணம் (என்று கருதப்படுகிறது).
இந்தத் திட்டத்துக்கான கருத்தை முதலில் சொன்னவர் Elon Musk- என்பவர், அவர் 2013 தன் கான்சப்டை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு விட்டார். அப்போதே பெருத்த கவனம் பெற்றது.
ஒரு பயணத்தில் அவரை சந்தித்த Shervin Pishevar அந்தத் திட்டத்தை அடிப்படையாக வைத்து
ஹைப்பர்லூப் என்ற பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கிறார். முதலீடு திரட்டுகிறார். ஏகப்பட்ட நிதி கிடைத்துவிட்டது.
2016 மேமாதம் (டியூபுக்குள் இல்லாவிட்டாலும்) ஒரு மாதிரி ரயிலை இயக்கிக் காட்டுகிறது ஹைப்பர்லூப். 2 விநாடிக்குள் சுமார் 200 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கிறது அந்த வாகனம். முழுமையான பரிசோதனை 2017இல் நடத்தப்படும் என்று கூறுகிறது அந்த நிறுவனம்.
இதற்கிடையில், எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும் உடனே அதை தனதாக்க விரும்பும் துபாய், ஹைப்பர்லூப் கம்பெனியுடன் ஓர் ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

தியானத்தின் நான்கு வகைகள் உண்டாம்.

தியானத்தின் நான்கு வகைகள் உண்டாம்.
ஆர்த்த தியானம்: தியானத்தில் உள்ள பொழுது மனம் தூய்மையாக இல்லாமல் துயரமான எண்ணவோட்டத்தில் இருத்தல்
ரௌத்திர தியானம்: தியான நேரத்தில் தீய எண்ணங்களாலும் கோபம், ஆசை, காமம் போன்றவைகளாலும் சிந்தனை நிரம்பி இருத்தல்.
தர்ம தியானம்: சமுதாயத்திற்கும் நன்மைதரும் நற்காட்சி, நல்ஞானம் நல்லொழுக்கம் ஆகியவற்றை மனதில் இருத்தி புரியும் தியானம் .

மருத்துவமனைகள் பரப்பும் நோய்கள்! பேராசிரியர் கே. ராஜு

அறிவியல் கதிர்
மருத்துவமனைகள் பரப்பும் நோய்கள்!
பேராசிரியர் கே. ராஜு
   
உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவமனைக்குச் சென்று டாக்டரைச் சந்திக்கிறோம். மிக மோசமான உடல்நிலையெனில் மருத்துவனையிலேயே உள்நோயாளியாக சேர்க்கப்படுகிறோம். அங்கு நாம் எந்த நோயின் சிகிச்சைக்காகச் சேர்ந்தோமோ அந்த நோய் குணமாவது இருக்கட்டும்.. புதிதாக வேறு ஏதாவது நோயுடன் திரும்ப வேண்டியிருந்தால் எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்? இது என்ன கொடுமையாக இருக்கிறதே என்று அதிர்ச்சியடைய வேண்டாம்! மருத்துவமனைக்குச் செல்பவர்களில் பலர் மேலும் ஆபத்தான சில நோய்களுடன் திரும்புகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை அளிக்கிறது உலக சுகாதார நிறுவனம். எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் உலகில் 14 லட்சம் மக்கள் மருத்துவமனையிலிருந்து சீதனமாகப் பெற்ற தொற்றுநோயால் அவதிப்படுகிறார்கள் என்கிறது அந்த நிறுவனம். இத்தகைய நோய்களுக்கு எச்ஏஐ (hospital-acquired infections) என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. ஓராண்டில் எச்ஏஐ காரணமாக 2 லட்சம் பேர்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். 80,000 பேர் இறந்தும் போகிறார்கள்.
 

Monday, March 13, 2017

விடைபெறுதல் #நிஷாமன்சூர்

என் வலிகள் வீர்யமிக்கவை;
எனினும் இந்த வாழ்க்கை இனிமையானது.
என் காயங்களின் தழும்புகள் மறைக்கமுடியாதவை;
எனினும் இந்த வாழ்க்கை இனிமையானது.
என் வழித்தடம் கரடுமுரடானது;
எனினும் இந்த வாழ்க்கை இனிமையானது.
உங்கள் இரக்கப்பார்வை பொறாமைப்பார்வையாக
மாற்றம்கொள்ளும் தருணம் கொடுமையானது;
எனினும் இந்த வாழ்க்கை இனிமையானது.

நீர்ப் பூக்குழி

தொலைவிலெங்கோ
புகையிரதம் நகர்ந்தபடி ஊளையிடும் ஓசை
ஒரு பட்சியெனச் சிறகடித்துப் பறக்கும்
மலைமுகடுகளிடையே அமைந்திருந்தது
அந்த ஆதி மனிதர்களின்
நதிப்புறத்துக் குச்சு வீடு


ஊற்று
ஓடையாகிப் பின்
நீர்த்தாரையாய் வீழ்ந்து
பெருகிப் பாய்ந்து
பரந்து விரிந்த பள்ளங்களில்
தரித்திராது ஓடும் ஆறு
கற்பாறைகளைத் தேய்த்துத் தேய்த்து
உண்டாக்கும் பூக்குழிகள்
நதியின் புராண தடங்களை
நினைவுறுத்தி வரலாறாக்கும்

Sunday, March 12, 2017

நவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு

முதன் முதலில் மனிதன் அண்ணாந்து பார்த்தபோதே வானியல் பிறந்துவிட்டது. வானியலை, "புரதானமான இயற்கை விஞ்ஞானம்" என்பார்கள்.  இரவில் நட்சத்திரங்கள் ஓடுவதையும் நிலவையும் பார்த்துப் புனையப்பட்ட கதைகள் உலகின் பழைய நாகரிகங்கள் அனைத்திலும் உண்டு.
முறையாக வானியலைப் படிப்பதற்கு முன்பே இவ்வகைக் கதைகள் எங்கும் பரவின. நிலவில் பாட்டி உட்கார்ந்திருந்த கதை,  நிலவைப் பாம்பு விழுங்கிய கதை எல்லாம்   நாமும்  கேட்டுத்தானே வளர்ந்தோம்.  பழங்காலக் கட்டடக் கலைகளிலும் கதைகளிலும் வானியலின் தாக்கம் இருந்திருக்கிறது.
வானியல் கண்டுபிடிப்புகளின் உச்சம் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு ஓராயிரம் வருடங்கள் முன்னதாகவே வேறோர் இடத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது என்பது ஆச்சரியமான உண்மை!

உணவும் உயிரும்.

உணவு சார்ந்த எண்ண ஓட்டத்தில் மனிதர்களை இரண்டு சாராராக பிரிக்கலாம்.
1) உண்பதற்காக உயிர் வாழ்பவர்கள்.
2) உயிர் வாழ்வதற்காக உண்பவர்கள்.
உயிர்கள் உலகில் உயிர்வாழ்வதற்காகவே வகை வகையான உணவுகளை அந்தந்த தட்பவெட்ப நிலைக்கும் அங்கு வாழும் மனிதர்களின் தொழில் மற்றும் பழக்க வழக்கங்களின் தேவைக்கு ஈடுகொடுத்து ஆரோக்யமாக உயிர்வாழ வேண்டியற்றை பயிராகும்படியாக இயற்கையாகவே இறைவன் படைத்துள்ளான்.

Wednesday, March 8, 2017

இம்மையும் மறுமையும்

Nagore Rumi
நீங்கள் ஒரு பத்திரிக்கையில் அல்லது டிவியில் செய்தி சேகரிப்பவராக இருந்து, உங்களுக்கு செய்தி எதுவும் கிடைக்காவிட்டாலும் தினமும் ஒரு விஷயத்தை செய்தியாக அனுப்பிக்கொண்டிருக்கலாம். கொஞ்சம் மாற்றி மாற்றி. அது உண்மையாகவே இருக்கும். அது என்ன?
இலங்கைக் கடற்படையினரால் --- தமிழக மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதான் செய்தி. எத்தனை பேர் என்ற கட்டத்தில் மட்டும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு எண்ணைப் போட்டுக்கொள்ளலாம்.
சிந்துபாத் கதை படித்திருக்கிறேன். இப்படி ஒரு கதை தொடருமா என்று வளர்ந்தபிறகே யோசிக்க முடிந்தது. ஆனால் அந்த வயதில் ஒவ்வொரு நாளும் படிக்கும்போது அடுத்த நாள் என்னவாக இருக்கும் என்ற ஆர்வம்தான் இருந்தது.

குறுஞ்செய்தி, வாட்ஸ் ஆப் பரிமாற்றங்கள்..

குறுஞ்செய்திகளை
துல்லியமாக அழித்தேன்
வாட்ஸ் ஆப் பரிமாற்றங்களை
துடைத்தெறிந்து ப்ளாக் செய்தேன்
டெலிகிராம் உரையாடல்களை
நேர்த்தியாக அகற்றி
ஆசுவாசம் கொண்டேன்
மெசெஞ்சர் சாட்களை க்ளியர் செய்து
நிம்மதிப் பெருமூச்சு விட்டு
ட்ரூகாலர் உபயத்தால்
கால் ப்ளாக் செய்து நிமிர்கையில்
மூளையடுக்குகளில் பொதிந்திருக்கும் நினைவலைகள் எள்ளி நகைத்து நடனமாடின, தொழில் நுட்பத்தின் போதாமையை இகழ்ந்தவாறே.

நிஷாமன்சூர்

வாட்ஸப் வேடிக்கை / பெரிய ஊழல்

நாம  போட்ட மேட்டர்
வாட்சப்ல போயி
பழையபடியும்
பேஸ்புக்ல வருது ...
எழுதினவன் பெயரில்லாம !
இதைவிட பெரிய ஊழல்
என்ன இருக்கு ?
-Abu Haashima

நீங்க வாட்ஸப்புலே போட்டது முகநூல்லெ வந்துச்சு. நான் முகநூல்லே போட்டது வாட்ஸப்புலே எனக்கே திரும்பி வந்துச்சே . அது எப்படி ? அப்ப உலகம் உருண்டைன்னு கலீலியோ சொன்னது உண்மைதானா?

அப்துல் கையூம்

நான் பேஸ்புக்லதான் போட்டேன்.
அது வாட்ஸ்ல போயி 
மீண்டும் 
எனக்கே வந்திருக்கு

இல்லறம் மெய்யறம் ....!

நல்லறமே வழிபாடாய்
---- இல்லறத்தில் வழிநடக்க
இன்பமே எந்நாளும்
---- எம்வாழ்வில் வந்திடுமே
இணைகளின் பார்வையிலே
---- தண்ணொளி வீசிடுமே
உள்ளங்கள் சேர்ந்திருக்க
---- உதடுகள் உணர்வுகளால்
இன்பமொழி பேசிடுமே

Tuesday, March 7, 2017

எங்களை இந்த கலாச்சாரத்திலிருந்து பிரித்து விட நினைக்காதீர்கள்.

முகனூலில் முதன்முதலில் அங்கீகாரம் தேடித்தந்த பதிவு. 2014 இதே நாள்.
சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் வாடகைக்கு வீடு தேடி அலைந்தேன். சராசரியாக தேடல் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்தது. அனைத்து ஏரியா புரோக்கர்களும் எனக்கு அத்துப்பிடி ஆகி விட்டது.
கழுத்தை நெரிக்கும் வேலை இருந்தாலும், "நீங்க கேட்ட மாதிரி 2,3 வீடு வந்திருக்குது,இப்போ வந்தா பார்க்கலாம் சார்" னு புரோக்கர் குரல் போனில் ஒலித்த உடன், அரை மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்பே அவர் சொன்ன இடத்தில் நிற்பேன்.

Monday, March 6, 2017

பாருங்கள் அல்லது பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் !

பாருங்கள் அல்லது க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் 



View Download




 Shiver2.ppsView Download 


1

 sunnah_authority3.ppsView Download 


1

 sunnah_authority2.ppsView Download 


1

 sunnah_authority1.ppsView Download 


1

 stayingpositive.ppsView Download 


1

 theProphetsWives.ppsView Download 


1

 StandardBearersofTruth.ppsView Download 


1

 Tears.ppsView Download 


1

 tipsforcomputerusers.PPSView Download 


1

 WhatisCholesterol.ppsView Download 


2

 wheredowestand.ppsView Download 


1

 WalletNeuropathy.ppsView Download 


1

 walking.ppsView Download 


1

 ZamZam.ppsView Download 


1

 Say_Thank_God_Tamil.pptView Download 


1

 rsi.ppsView Download 


1

 QuranHealing.ppsView Download 


1

 ProtectYourBack-ENG.ppsView Download 


1

 Prostration.ppsView Download 


1

 pmmankind.ppsView Download 


1


 pigeon.ppsView Download 


1  

 parentswish.ppsView Download 


1  

 Mother.ppsView Download 


1  

 missionoandourlives.ppsView Download 


1  

 masjid-al-aqsa.ppsView Download 


1  

 MakkahAl-Mukaramah2010.ppsView Download 


1  

 LoveYourLiver.ppsView Download 


1  

 funnyorsad.ppsView Download 


2  

 KnowyourKidney.ppsView Download 


1  

 Islamishere-poem.ppsView Download 


1  

 islamicmanners.ppsView Download 


1  

 How2Pray.ppsView Download 


1  

 honey&cinnamon.ppsView Download 


1  

 HolyQuran.ppsView Download 


1  

 Heartattack-O.ppsView Download 


1  

 haj.ppsView Download 


1  

 GreenTea.ppsView Download 


1  

 Fruits.ppsView Download 


1  

 friendsrlikeflowers.ppsView Download 


1  

 food1.ppsView Download 


1 
 ENGLSIHCourse.pps View Download  /
1  

education.ppsView Download /

1  

DoYouLike2invest.ppsView Download /

1  

decisionmaking.ppsView Download /

1  

clock.ppsView Download /

1  

butterflynflower.ppsView Download /

1  

AYATHUL KURSI.docView Download /

1  

attitude.ppsView Download /

1  

ArriveAlive.ppsView Download /

1  

ArabicRace.ppsView Download /

1  

healingbyquran_Eng.ppsView Download /

1  

lailahaillallah.jpgView Download /

1  

25220_385951619495_80816334495_3705871_2304899_n.jpgView Download /

1  

Assalamuallikum.jpgView Download /

1  

357px-FirstSurahKoran.jpgView Download /

1  

bimillah assalamuallikum.jpgView Download /

1  

Bismillah_2.JPGView Download /




Download 





Download 





Download 





View Download 





View Download 





View Download 





View Download 





View 












Download 





View Download 





View Download 





View Download 





View Download 





View Download 





View Download /




View Download


  islam_art_slideshow.ppt

Prayers%20of%20the%20Final%20Prophet.pdf

holy%20month%20of%20rabi%20ul%20awwal.pdf 

  greatwomenofislam-120125153114-phpapp01.pdf

  1Gnanathin Thiravukol.mp3

  1Yella Pugazhum Iraivanukku.mp3

  Assalamu..mp3

  2Annal Nabikalin.mp3

  NIDURALI1.jpg



0Yelaiyaha Vaalndhadheno.mp3 

  heart.pdf

  Islam-Presentation.zip

google517bb583066171bc.html

google517bb583066171bc.html

  Islam-Presentation.zip

  prophet muhamed(pbuh).doc

  names of ALLAH.doc

4Nabi Peruman Nallurai.mp3

1La Ilaaha Illallah Hoo.mp3

  2Dheen Kula Kannu.mp3

4Baanghin Osai.mp3

  1Yella Pugazhum Iraivanukku.mp3

  2Annal Nabikalin.mp3

  1Yella Pugazhum Iraivanukku.mp3

2Fathima Valndha Murai Unakku.mp3

!Iraivanidam Kaiyenthungal.mp3

  4MangaiyarKarasi Annai Fathima.mp3

NIDURALI1.jpg

  Assalamu..mp3

  Al-H'ejaab.mp3


1Gnanathin Thiravukol.mp3

  2Annal Nabikalin.mp3

NIDURALI.ppt

   NIDURALI.ppt

  1Gnanathin Thiravukol.mp3

1Bismillah Yendru.mp3

1Allahvai Naam Thozhuthaal.mp3

1Allahu Allah Alhamdhullillah.mp3

1A_Nee Koduthatharke Nandri.mp3
lowerthywingtoth....pdf  
996037104_8c4c3eb5a3.jpg
(69k)421144_4750725282979_1146938733_n.jpg
View Download


35  பயனுள்ள பவர்பாய்ண்ட் கோப்புகள் நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்வதற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Please visit to more  View or Download : https://sites.google.com/site/seasonsnidur/home/seasons-nidur

https://sites.google.com/site/seasonsnidursite/seasonsnidursite

https://sites.google.com/site/thehttpseasonsaliblogspotcom/system/app/pages/recentChanges
https://sites.google.com/site/thehttpnidurseasonsblogspotcom/system/app/pages/recentChanges