Tuesday, March 14, 2017

ஆஹா ஓஹோ... என்று வாட்ஸ்அப்பிலும் பேஸ்புக்கிலும் ஒரு பெரிய கூட்டமே சேர்ந்து கும்மியடிக்கப்போகிறது.

Shahjahan R
கீழே தரப்பட்டிருக்கும் படம் சில நாட்களுக்கு ஓடும். ஆஹா ஓஹோ... என்று வாட்ஸ்அப்பிலும் பேஸ்புக்கிலும் ஒரு பெரிய கூட்டமே சேர்ந்து கும்மியடிக்கப்போகிறது.
படத்தைப் பாத்ததும், ஏதோ இந்தியாவில் ஹைப்பர் டிரெயின் திட்டம் வந்துவிட்டது போலத் தோன்றும். சுருக்கமாக எழுதி விடுகிறேன்.
இது குழாய்க்குள் ஓடுகிற ரயில். படத்தில் இருப்பது சும்மானாச்சிக்கி மாடல்தான். இன்னும் ரயில் உருவாகவில்லை. :)
காற்றின் அழுத்தமும், காந்த சக்தியும் தேவை. மணிக்கு சுமார் 1000 கிமீ வேகம். சொல்லப்போனால், விமானத்தைவிட வேகம். ஆனால் ரயிலின் கட்டணம் (என்று கருதப்படுகிறது).
இந்தத் திட்டத்துக்கான கருத்தை முதலில் சொன்னவர் Elon Musk- என்பவர், அவர் 2013 தன் கான்சப்டை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு விட்டார். அப்போதே பெருத்த கவனம் பெற்றது.
ஒரு பயணத்தில் அவரை சந்தித்த Shervin Pishevar அந்தத் திட்டத்தை அடிப்படையாக வைத்து
ஹைப்பர்லூப் என்ற பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கிறார். முதலீடு திரட்டுகிறார். ஏகப்பட்ட நிதி கிடைத்துவிட்டது.
2016 மேமாதம் (டியூபுக்குள் இல்லாவிட்டாலும்) ஒரு மாதிரி ரயிலை இயக்கிக் காட்டுகிறது ஹைப்பர்லூப். 2 விநாடிக்குள் சுமார் 200 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கிறது அந்த வாகனம். முழுமையான பரிசோதனை 2017இல் நடத்தப்படும் என்று கூறுகிறது அந்த நிறுவனம்.
இதற்கிடையில், எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும் உடனே அதை தனதாக்க விரும்பும் துபாய், ஹைப்பர்லூப் கம்பெனியுடன் ஓர் ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

இந்திய அரசின் அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது.
ஹைப்பர்லூப் தன் பேஸ்புக் பக்கத்தில் மக்கள் கருத்தைக் கேட்கிறது. இந்தியாவில் நான்கு வழித்தடங்களில் எந்த வழித்தடத்தை விரும்புவீர்கள் என்று வாக்கெடுப்பு நடத்துகிறது. சுமார் 2600 பேர் இதில் கருத்தளித்தார்கள். வாக்களித்தவர்கள் உங்களையும் என்னையும் போன்றவர்கள்தான் என்று சொல்லத் தேவையில்லை.
அந்த வாக்களிப்பில் கேட்கப்பட்ட வழித்தடங்கள்தான் இவை. இன்னும் சோதனையே முடிவடையாத தொழில்நுட்பம். 2021க்குள் இந்தியாவுக்கு வந்து விடும் என்று கதை கட்டத் தொடங்கி விட்டார்கள்.
பி.கு. - இது அறிவியலை கேள்விகேட்கும் பதிவல்ல.

Shahjahan R
--------------------------------------------------------------------
Dubai to Abu Dhabi in just 12 minutes... WOW/ துபாயிலிருந்து அபுதாபிக்கு 12 நிமிடத்தில்  The new transportation in Dubai will soon be built in the UAE and will take you from Dubai to Abu Dhabi in just 12 minutes, at a speed of 1200kms per hour.Take a look at how it works


No comments: