Friday, March 3, 2017

"என்னை தவிர வேற யாரும் உங்க கூட குடும்பம் நடத்த முடியாது.."

"என்னை தவிர வேற யாரும் உங்க கூட குடும்பம் நடத்த முடியாது.."
"இன்னொரு கல்யாணம் பண்ண வேண்டியது தான் "
என்று ஆண்கள் விளையாட்டாக சொல்லும் போது மனைவிகள் சொல்லும் டயலாக் தான் மேலே சொன்னது...
அது அல்லாமலும் மனைவிகள் கணவர்களை பார்த்து அடிக்கடி உதிர்க்கும் முத்துக்கள் தான் இது...
இதனாலேயே பல ஆண்கள் திருமணம் செய்யாமலேயே பிரம்மசாரியாக காலத்தை ஓட்டுகிறார்கள்..
தம்பதிகளிடயே சந்தோஷத்தையும், மகிழ்வையும் தருவதில் உடல் ஆரோக்கியமும்,பொருளாதாரமும் முக்கிய பங்கு வகிக்கின்றது..
இன்றைய கால சூழலில் சம்பாதிக்கின்ற வருமானங்கள் செலவுக்கு போதாத நிலைமை..
இதனால் ஏற்படுகின்ற சிக்கல்கள் குடும்பத்தை சமாளிக்க போதுமானதாக இல்லை..

குடும்பத்தில் ஆண் மட்டுமே சம்பாதித்து குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலையில் பெண்களும் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது...
நம் சமுதாயத்தை பொறுத்த வரை பெண்கள் வேலைக்கு போவதை பெரும்பாலோர் விரும்புவதில்லை..படித்த பெண்கள் கூட அடுப்பூதும் நிலை தான்..
இதனால் குடும்ப நிர்வாகப் பொறுப்பு மொத்தமாக ஆண்கள் தலையில் விழுகிறது..சில இடங்கள் விதிவிலக்கு...
அப்படி அந்த குடும்ப தலைவன் நல்ல சம்பாத்தியத்தோடு ஆரோக்கியமாக இருக்கும் போது குடும்பத்திற்குள் எந்த பிரச்சினையும் கிளம்புவதில்லை..
ஒருவேளை சம்பளம் குறையும் போதோ,வாங்கும் பணம் செலவுக்கு போதாமல் ஆகும் போதோ,வருமானம் இல்லாமல் இருக்கும் போதோ குடும்பத்தை நடத்துவது பெரும் திண்டாட்டமாகப் போய்விடுகிறது..
கைநிறைய பொருளீட்டும் போது மகிழ்ச்சி தவழ்ந்த வீட்டில் பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்குகிறது...
இது போன்ற வருமானம் இல்லா நிலைகளில் ஆண்கள் படும் வேதனை சொல்லி மாளாது..
மனைவியின் எரிச்சல்களும், குழந்தைகளின் ஏக்கங்களும்,உறவுகளின் பாராமுகமும் பல வழிகளில் வேதனையை தந்த வண்ணம் இருக்கும்..
சில இடங்களில் கணவன் மனைவி ஒற்றுமையாக இருந்தாலும் அவர்களின் அம்மாக்கள் அவர்களை ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்க விடுவதில்லை...சில நேரங்களில் மனமுறிவு வரை போய் விடுவதுண்டு...
இது போன்ற நேரங்களில் மனைவி என்பவள் ஒரு ஆறுதலாக,ஒரு அரவணைப்பாக நிற்கும் போது அது அந்த தலைவனுக்கு கணவனுக்கு ஒரு பக்க பலமாக அமையும்..
அது மட்டுமல்லாமல் மனைவியும் மற்றவர்களோடு சேர்ந்து கணவனை மன வேதனை படுத்தும் போது அவன் துவண்டு விடுகிறான்..வாழ்க்கையை வெறுத்து வாழ்க்கையின் உச்சத்திற்கே சென்று விடுகிறான்..
பணம் மட்டுமே சந்தோஷத்தை எப்போதும் தந்து விடாது..பணமும் சந்தோஷத்தை தரும்..என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்...
நாம் நாமாக வாழ்வதற்கு
பணம் தேவையில்லை..
அடுத்தவர்களை போல் வாழ்வதற்கு தான் அதிக
பணம் தேவை...
இந்த சிந்தனைகளை மனதில் கொண்டால் குடும்பத்தில் பண குழப்பமும்,மன குழப்பமும் நிகழ வாய்ப்பில்லை..
எதற்கெடுத்தடுத்தாலும் கணவர்களை குறை சொல்லும் செயலையும்,கணவர்கள் மனைவிகளை குறைச் சொல்லும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பணம் இருக்கும் போதும் இல்லாத போதும் ஒரே நிலை வேண்டும்..அன்பால் இல்லறத்தை இணைக்க வேண்டும்..இல்லாதவன் பொல்லாதவன் என்ற பழமொழி நீக்கப் பட வேண்டும்...
கோழி மிதித்து குஞ்சு சாகுமா என்று பழமொழி கூறுவார்கள்..பெற்றவர்கள் பேசினால் பிள்ளைகளால் தாங்க முடியாது.நல்லதற்கு தானே பெத்தவங்க சொல்கிறார்கள் என்றால் பிரச்சினை வருவதற்கு வாய்பில்லை...
அது போல நம் மனைவி தானே திட்டுகிறாள்..நம் கணவர் தானே ஏசுகிறார்..பேசட்டுமே என்று பொறுமை காத்தால் குடும்பங்கள் பிரிவதற்கு வாய்பேயில்லை...
வருமானம் வருகின்ற போது அதை ஆடம்பர செலவுகளில் பயன்படுத்தி சீரழிக்காமல் சேமிப்பாக பயன் படுத்தும் போது பிற்காலத்தில் அது நமக்கு உபயோகப்படும்..
மேலும் வருமானத்திற்கேற்றார் போல் செலவுகளை குறைத்துக் கொள்ள பழக வேண்டும்...
இதில் பணக்காரர்களும் அடங்குவார்கள்..இதே கதைகளை அவர்களும் சொல்வார்கள்.. இது அவரவர் தகுதிக்கேற்றார் போல் அமையும்..
அதனால் தான் சில இடங்களில் சம்பளம் போதாமல் வேலையில் டார்ச்சர் இருந்தாலும் அதையும் தாங்கிக் கொண்டு மனைவியின் டார்ச்சரிலிருந்து தப்பிப்பவர்களும் உண்டு..
நேர் மாற்றமாக, இதனாலேயே வேலையை விட்டு துரத்தினாலும் போகாமல் மனைவியின் மேல் உள்ள கோபத்தை எல்லாம் தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களிடம் தீர்த்துக் கொண்டு வெறியோடு வாழ்பவர்களும் இருக்கிறார்கள்...
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை போல் தம்பதிகள் தங்களுக்குள் ஆயிரம் இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து புரிந்து கொண்டு வாழ்ந்தால் அந்த வாழ்க்கையில் இன்பம் நிரந்தரமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை....

Saif Saif

No comments: