Saturday, August 20, 2016

உரத்த சிந்தனை / பெண்கள் இயற்கையோடு இயைந்த இயல்புகள்

பூமிப் பெண்ணின் பெண் மகவுகள்தான் உலகின் எல்லா பெண்ணினமும், அவள் தலை தாயாயிருந்து விருட்சங்களையும் உலகு வேண்டும் தாவரங்களையும் தன்னில் பிரசவிக்கிறாள் என்றால், உயிர்களை பிரசவிக்கும் செயலை ஏனைய எல்லா பெண்ணினமும் செய்து கொண்டிருக்கின்றன.
இது காலத்தை கட்டமைத்தவனின் உலகியல் நோக்கு. மாற்றவோ மறுக்கவோ முடியாத நிபந்தனைகளாக இருப்பதால், அவ்வழியேதான் மண்ணின் மனிதர் வழி என்றிருக்கையில், கரு சுமக்க பெண்ணும், வாழ்வு சுமக்க ஆணும், குலம் தழைக்க குழந்தைகளும் என்றிருக்கும் நிலையே இயற்கை நிலை.
இந்நிலையில்; சுமந்தேனே, பெற்றேனே, வளர்த்தேனே என்பதெலாம்; பெண்ணிணம் அவர்களாக ஏற்றுக் கொண்ட நிலையல்ல, மாறாக, படைப்பில் சரிவிகித தன்மைகளுடன் வரையறை செய்யப்பட்டவை.
இன்றைக்கு; அதிலிருந்து விலக்கு வேண்டுவது போல், அறிவு வீக்கம் கொண்ட சில அம்மணிகள் விம்மி அழுவதும், வீராப்பு காட்டுவதும், வீண் கோஷம் எழுப்புவதும், என்ன வேண்டுமாய்? அங்கவிடங்கள் அங்கிங்கு நினப்பது போல் மாறி விடுமா, இல்லை பிரசவ வலி ஆண்களுக்கு மட்டுமே என்றாகி விடுமா. இயற்கையின் நிலையை, இறைவனின் திறத்தை, போராட்ட நிறங்களால் மாற்றி விடத்தான் முடியுமா.

பெண்கள் இயற்கையோடு இயைந்த இயல்புகள், அதன் ஊடாகத்தான் அடியெடுத்து வைக்க வேண்டுமேயொழிய எதிராய் பயணிக்க முயல்வது, நளினங்களை பாழ்படுத்தி விடும், பெண்களின் வன்மையான நிலைப்பாடுகள், உலகின் மென்மையான இன்னொரு பகுதியை கண்ணுக்கு காட்டாமல் மறைத்து விடவும் கூடும்

No comments: