Monday, August 22, 2016

உண்மையிலேயே நம்பமுடியவில்லை....


Rafeeq Sulaiman

நேற்று தேசிய பேரணி 2016 இல் பேசிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார் சிங்கப்பூர் பிரதமர். அப்போது அந்த நேரலை தடைபட்டது. (அதுதொடர்பாக நேற்று எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்)
மருத்துவக் கண்காணிப்பில் பிரதமர் இருக்கிறார் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆம் சர்வதேச ஊடகங்கள் மட்டுமே செய்தி தந்திருந்தது. சிங்கையிலிருந்து வெளியாகும் தமிழ்முரசு கூட தனது வலைப்பக்கத்தில் கூட இதுபற்றி, நம்மூர் ஸ்டைலில் 'சற்றுமுன்' என்று செய்தி தந்து ஆரவாரப்படுத்தவில்லை.
அதேபோல அரங்கில் குழுமியிருந்தோர்கள் கூட எந்தவொரு கூச்சல் குழப்பமின்றி அமைதிகாத்தனர்.

சற்றுமுன் (பிரதமர் எப்படி இருக்கிறார் என்று பார்க்கலாமென) பார்த்தால், அந்த ஆச்சரியம் காத்திருந்தது.
ஆம், உண்மையிலேயே நம்பமுடியவில்லை...
மருத்துவ முதலுதவி மற்றும் சற்று நேர (ஓரிரு மணி நேரம் இருக்கும்) ஓய்வுக்குப் பிறகு பிரதமர் அதே மேடையில் தோன்றியிருக்கிறார். அவரின் வருகைக்காக காத்திருந்த மக்களுக்காக நன்றி தெரிவித்து தனது பேச்சைத் தொடர்கிறார்... அதே மாறாத புன்னகை.. தெளிவு..
நீங்களெல்லாம் காத்திருப்பீர்கள் அதனால் எனது பேச்சினைத் தொடர வந்துள்ளேன். இந்த நிகழ்வுக்குப் பிறகு எனது மருத்துவரிடம் செல்வேன்.. முழு உடல்பரிசோதனை செய்துகொள்வேன்" என்று தொடர்கிறது அவர் பேச்சு......

இதுபோலொரு தலைவன் என் தேசத்திற்கு இல்லையே என ஒவ்வொரு இந்தியனும் பொறாமை(!) கொள்ளுமளவிற்கு இருந்தது அவரது பேச்சு....
சிங்கப்பூர் மக்கள் கொடுத்துவைத்தவர்கள்...
வாழ்த்துகள்..


Rafeeq Sulaiman

Prime Minister Lee Hsien Loong speaking at National Day Rally 2016. The Rally was held on 21 August 2016 at ITE HQ & College Central in Singapore.

No comments: