Tuesday, August 2, 2016

வெளிநாட்டு சம்பாத்தியமும் சமுதாய முன்னேற்றங்களும் ....

Abdul Gafoor

வடிக்க ரேசனரிசியும்
குடிக்க பழங்கஞ்சியும்
அவித்த கிழங்குகளும்
குடும்ப நீரோட்டங்களில்
அங்கமாகி சங்கமித்து ...

மாவுகள் கலந்துருவாகிய
உணவுகளை பெரும்பாலோரின்
நாவுகள் மென்றிடாத
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ...


கல்வியேடுகளை படித்தும்
பணிகளாற்ற மடித்தும்
உலவியோரின் குடும்பங்களில்
கஷ்டமெனும் காற்று
புயலாய் சுழலுகையில் ...

அரேபியா என்றொலித்த
நான்கெழுத்து வார்த்தை
துவண்டிருந்த மனிதர்களை
தென்றலாய் தழுவியது ...

திண்ணைப் பேச்சுகளிலும்
டீக்கடை பெஞ்சுகளிலும்
சைக்கிள் கடைகளிலும்
தலைப்புச் செய்திகளானது ...


பரீட்சைகளில் தேறாத
படிப்பேறாத மாணவர்களின்
புத்தகக் கட்டுகள்
பரண்களில் உறங்கியது
வெளிநாட்டு அனுமதியான
கடவுச் சீட்டுகள்
கரங்களில் கிறங்கியது ...

எட்டா ஆயிரமான
எட்டாயிரமும் கூடுதலும்
செலுத்திட பணமில்லாது
குடும்பத்துப் பெண்மணிகள்
அணிந்திருந்த நகைகள்
வங்கி பெட்டகங்களில்
வட்டிக்கும் விற்பனைக்கும்
தங்கி இளைப்பாறியது ...

அரேபியாவுக்கு ஆள்களெடுத்து
ஏஜெண்டுகளாய் நடமாடியோர்
கைகளில் தாள்களெடுத்து
பெயர்களை பதிவாக்கினர் ...

பம்பாய் நகரத்திற்கு
சுமைகளோடு ரயிலேறியதும்
குடும்பங்களின் பிரச்சனைகள்
அம்பாய் குத்தியது ...

இன்னும் விரிகிறது
காத்திருங்கள் நண்பர்களே ...

Abdul Gafoor அப்துல் கபூர்
..

No comments: