Saturday, August 20, 2016

பேருந்து பயணம்


என்றும் கவியுடன் முஹம்மது முஸம்மில்

அவள் ஓரு தேவைதைதான்
வானிறங்கி வந்த வெண்ணிலவுதான்
எனக்கு மட்டும் அவள்
எனக்காக ஆனவளும் அவள்தான்
முதன்முதலாய் பார்த்தேன்
முழு மனதையும் இழந்தேன்
முழுவதுமாய் என்னை
அபகரித்தவள் அவள்
சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன கெஞ்சல்கள்
செல்ல சிணுங்கல்கள்
எல்லாம் அவளுடன்

விதவிதமாய் ஆடையில்லை
செயற்கையான அரிதாரமில்லை
இயற்கையே அவளிடம்
அழகை கொஞ்சம் கடன் கேட்கும்
எதனால் அவள்மீது காதல் கொண்டேன்
எதனால் அவளிடம் என்மனதை
கொடுத்தேன்
ஆராய்ந்துப்போகையில் நான்
தோற்றுதான் போவேன்
இன்றும் அவளைக்காண
அவள்
இருப்பிடம் நோக்கி
சுகமான பேருந்தில்
சுகமான பயணம்
அவள் நினைவோடு நான்....
என்றும் கவியுடன்
முஹம்மது முஸம்மில்.
நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை இதுவே...


என்றும் கவியுடன் முஹம்மது முஸம்மில்

No comments: