Wednesday, August 31, 2016

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (2)

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை"  (2) 

1942 ஆம் வருடம் ஒரு நாள் மதியம் கடையில் நான் கைக்குட்டையில் எம்பிராய்டரி செய்து கொண்டிருந்தேன். நான் எம்பிராய்டரி செய்த கைக்குட்டைகள், பின்னிய உல்லன் தொப்பி போன்றவற்றை விற்றால் கிடைக்கும் பணம் எனக்குறியது. கடைக்கு வரும் ஏழை மாணவியர்களுக்கு அந்தப் பணத்தில் புத்தகம் அல்லது நோட்டு வாங்கிக் கொடுத்து விடுவேன்.

அப்போது ஒரு இந்திய வாலிபர் கடைக்கு வந்து ஒரு நோட்டும், ஒரு பேனாவும் வாங்கினார். நான் விற்பனை செய்து விட்டு மீண்டும் எம்பிராய்டரி வேலையில் மூழ்கினேன். பக்கத்துக் கடை பெண்மணி என்னிடம் வந்து சிரித்துக் கொண்டே, "நீ விரைவில் ஒரு இந்தியரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்" எனக் கூறினார். நான் கோபத்துடன் "என்ன உளறுகிறீர்கள்?" என்றேன்.

"நான் சொல்வது உண்மை தான். அந்த இளைஞர் உன் கடையில் நோட்டு வாங்கும்பொழுது கடைக்கு சற்று தள்ளி நான்கு இந்தியர்கள் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர். அந்த இளைஞர் வந்ததும் ஐவரும் இப்ராஹீம் (என்பவரின்) கடைக்குச் சென்று விட்டார்கள். அதனால் தான் சொல்கிறேன், அவர்கள் உன்னை பெண் கேட்கத்தான் வந்திருந்தார்கள் என நினைக்கின்றேன்" என்று அந்த பக்கத்து கடைப் பெண்மணி கூறிவிட்டு சென்றார்.

மார்க்கம் / இஸ்லாம் மற்றும் சில விளக்கங்கள்

 குடும்பப் பெயர் என்று ஏதேனும் வைத்துக்கொள்ளலாம். அது ராவுத்தரோ மரைக்காயரோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
நீ உயர்வு நான் உயர்வு என்றாலோ இடையில் மண உறவுகள் இல்லை என்றாலோ அந்த நிமிடம் அவர்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாமியர்கள் இல்லை.

 *
மார்க்கம் என்றால் அது சாதிகளை எல்லாம் ஒன்றாக ஆக்க வேண்டும்
இறைவன் என்றால் அவன் மார்க்கங்களை எல்லாம் ஒன்றாக ஆக்க வேண்டும்

 *
இந்த ஜமாத்தார்கள் என்று கூறிக்கொண்டு அடித்துக்கொண்டு ஆளாளுக்குப் பிரிகிறார்கள் என்றால் அவர்கள் எவருமே இஸ்லாமியர்கள் இல்லை!
ஆனால் ஜமாத்தார்கள் என்று ஊருக்கும் மார்க்கத்துக்கும் தொண்டு செய்கிறார்கள் என்றால் அவர்கள் உண்மையான இஸ்லாமியர்கள்!


 லெபைக்கும்என்னவித்தியாசம்.
>>>>>>>>>>>
இந்து முறைப்படி பிரிக்கப்பட்டார்கள். செய்யும் தொழிலைக்கொண்டு பிரிக்கப்பட்டார்கள்
ராவுத்தர் - அரசாங்கப் பணி செய்பவர்கள், வீரர்கள்
மரைக்காயர் - கப்பல் வணிகம் செய்பவர்கள்
லெப்பை - சமூகச் சேவை செய்பவர்கள், மதச் சேவை செய்பவர்கள்
இதை அள்ளிக் குப்பையில் போட்டுவிட்டு இஸ்லாமியர்கள் என்று சொன்னால் மட்டுமே அவர்கள் இஸ்லாமியர்கள்.

Sunday, August 28, 2016

காங்கோ பயணக்குறிப்பு ....! / ராஜா வாவுபிள்ளை


குள்ளமனிதர்கள் (PYGMIES).
ருவன்சூரி மலையடிவாரத்தின் அடர்ந்த காட்டின் நடுவேதான் பெனி நகரம் அமைந்திருக்கிறது. இந்த அடர்ந்த காடுகளில்தான் உலகில் அருகிவரும் மனிதக்குரங்குகள் (Gorilla) அதிகமாக உயிர்வாழ்கின்றன.
இங்கு சுகந்திரத்திற்கு முன்னாலேயே ஐரோப்பியர்கள் பால்ம்பனைத் தோட்டங்களை பயிர்செய்து இருந்தார்கள். எப்போதும் சாரல்போல் தூற்றிக்கொண்டிருக்கும் தூவானம் போன்ற காலச்சூழல் பால்ம்பனை விவசாயத்திற்கு ஏதுவானதாகும். அரசியல் பாதக சூழ்நிலையாலும் பாதுக்காப்பு இல்லாமையாலும் அவர்கள் பணப்பயிராக வளர்த்த பால்ம்பனைத் தோட்டங்களை அப்படியே போட்டுவிட்டு போய்விட்டார்கள். இப்போது அவைகள் பராமரிப்பு இல்லாமல் வனப்பயிராகி காணும் இடங்களிலெல்லாம் மண்டிக்கிடந்தன. அவற்றில் ஓரளவு பராமரிக்கப்பட்டு வந்த ஒரு பால்ம்பனைத் தோட்டத்தைப் பார்வை இடுவதற்காகவே நான் அங்கு சென்றிருந்தேன்.

தாய் மகள் உறவு

Abu Haashima
தாய்க்கு இறைவன் கொடுக்கும்
மிக அற்புதமான வரம்
பொம்பளை பிள்ளை.
தன் மனசில் அடக்கி வைத்திருக்கும்
ஆயிரம் ஆதங்கங்களை
சந்தோஷங்களை
குறைகளை
குமுறல்களை
மகளிடம் மட்டுமே
கொட்டி வைக்கக் கூடியவள்
தாய் !

Wednesday, August 24, 2016

ஒட்டகமும் ஊடகமும் பின்னே ஞானும் ....!

ஒட்டகமும் ஊடகமும் பின்னே ஞானும் ....!ராஜா வாவுபிள்ளை
பாலைவன கப்பல் என்று சிறுவயதில் படித்ததுண்டு. எப்போதாவது எங்கவூர் நாகர்கோவிலில் கூடாரம் அமைத்து சர்க்கஸ் காட்டும் இடங்களில் பார்த்ததுண்டு, அவைகளோடு வந்து சர்க்கஸ் விளம்பர துண்டு பிரச்சார விநியோத்தின்போது அதன் பின்னாலே நடந்து நேரம்போகாமல் பார்த்ததும் மறக்க முடியாத நிகழ்வுகள்.
வளர்ந்ததும் வேலைநிமித்தம் ஆப்ரிக்காவிற்கு வந்ததும் பல வனவிலங்குகளை அதனதன் இருப்பிடத்திலேயே கண்டு வியந்ததுண்டு.
மேலும், ஆப்ரிக்காவின் முக்கிய நகரங்களில் 'கார்னிவல்' என்று அறியப்படுகின்ற ஆடம்பர உணவுவிடுதிகளில் ஆசைக்காக சென்று அதிக விலைகொடுத்து சமைத்த சில வனமாமிச (Game Meat) வகைகளை ஒருகை பார்த்ததும் ஒரு அரிய அனுபவம்தான்.

Tuesday, August 23, 2016

மாய் என்று அன்பாய் அழைக்கப்படும் ஹாஜியா ஹசினா பீவி அவர்கள் வபாத்தானார்



நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம்
நீடூர் நெய்வாசல் ஜின்னாத்தெரு மர்ஹூம்
அப்துல் வஹ்ஹாப் அவர்களின் துனைவியாரும்
 M.A. முஹம்மது அலி nidur.info இணையதளம் நடத்துபவர்
சலாஹூதீன் இவர்களின் தாயாரும்
அனைவராலும் மாய் என்று அழைக்கப்படும்
(மாய் என்ற வியட்நாம் சொல்லுக்கு பாட்டி என்று தமிழில் பொருள்படும்) 
ஹாஜியா ஹசினா பீவி அவர்கள் (வயது 91 )23/08/2016
இரவு 9 மணியளவில் வபாத்தானார்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ,..
அன்னாரின் மறுமை வெற்றிக்கு துஆ செய்யுங்கள்
அன்னாரின் ஜனஷா நல்லடக்கம் இன்று பகல்24/08/2016 லுகருக்கு முன்  நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்திற்காக அல்லாஹ் விடம் துஆ செய்வோமாக
ரப்பே ! இந்த அம்மையாரை  சுவர்க்கத்துக்கு சொந்தக்காரராக  ஆக்கிவிடு !



வியாபாரம் ஒரு கலை.

 Abu Haashima
என்ன வியாபாரம் செய்தாலும் அதை வாங்குவதற்கென்று பல வாடிக்கையாளர்கள் கடையைத் தேடி வருவார்கள்.
அவர்கள் யாராக இருந்தாலும் உரிய மரியாதை கொடுத்து இணக்கமாகப் பேசி பொருட்களை விற்பது வியாபாரியின் சாமர்த்தியம்.

அடிக்கடி பழங்கள் வாங்கும் ஒரு கடையில் இன்று குட்டி ஆப்பிள்களை பார்த்தேன்.
அதில் எனக்கு கொஞ்சம் விருப்பமுண்டு.
தம்பி என்ன விலை என்றேன்.
விலையைச் சொன்னான்.
சரி நல்ல பழமாகப் பார்த்துப் போடு என்றேன்.

Monday, August 22, 2016

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழுவில் தமிழக இளைஞர்

ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்யும் குழுவில் தமிழகத்தை சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் காயல்பட்டணம் அகமது சுலைமான் இடம் பெற்றிருந்தார்.
துபாயில் பணிபுரிந்து வந்த இவர் துபாயில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் முழுமையான தூரத்தை ( 42.195 கிலோ மீட்டர் ) நிறைவு செய்தார். அதன் பின்னர் துபாயில் நடைபெறும் மாரத்தான் போட்டிகளில் தன்னார்வ தொண்டராக குழுவினருடன் பங்கேற்றார்.

படி படி யென;


Yasar Arafat

படி படி யென;
படுக்கும்வரை படுத்தியெடுக்கிறீர்கள்;
வீட்டுப்பாடம் முடிச்சாச்சா
யென முறுக்கி நிற்கிறீர்கள்;
மார்க் குறைந்தாலோ..
படிப்பவருடன் ஓப்பிட்டு ஒப்பாரி வைக்கிறீர்கள்;
ஒழுக்கமென்ற பெயரில்
ஓயாது வறுத்தெடுக்கிறீர்கள்;
மூட்டைகளை கொடுக்குறீர்கள்;
உறவினர்கள் வந்தால்
ஒப்பித்து காண்பிக்க சொல்கிறீர்கள்;

உண்மையிலேயே நம்பமுடியவில்லை....


Rafeeq Sulaiman

நேற்று தேசிய பேரணி 2016 இல் பேசிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார் சிங்கப்பூர் பிரதமர். அப்போது அந்த நேரலை தடைபட்டது. (அதுதொடர்பாக நேற்று எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்)
மருத்துவக் கண்காணிப்பில் பிரதமர் இருக்கிறார் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆம் சர்வதேச ஊடகங்கள் மட்டுமே செய்தி தந்திருந்தது. சிங்கையிலிருந்து வெளியாகும் தமிழ்முரசு கூட தனது வலைப்பக்கத்தில் கூட இதுபற்றி, நம்மூர் ஸ்டைலில் 'சற்றுமுன்' என்று செய்தி தந்து ஆரவாரப்படுத்தவில்லை.
அதேபோல அரங்கில் குழுமியிருந்தோர்கள் கூட எந்தவொரு கூச்சல் குழப்பமின்றி அமைதிகாத்தனர்.

Sunday, August 21, 2016

ஊனம் என்பது நமக்கு உடலில் மட்டும்தான்…

*ஊனம் என்பது
நமக்கு
உடலில் மட்டும்தான்…
உள்ளத்திலோ
நாம்
ஒலிம்பிக் வீரர்கள்!

*கவலை
கொள்ளாதே…
தேய்பிறையிலும்
நிலா அழகுதான்!

*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்*❗

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.
உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் "என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன். மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்" என்றார்.
சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்.
*அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா? என்று கேட்டார்.*
இல்லை என பதில் சொன்னார்.
*அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.*
இல்லை என பதில் சொன்னார்.
*அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா? என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.*
இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.
*யாருக்கும் பயனில்லாத, நல்ல விஷயமுமில்லாத நேரடியாக நீங்கள் பார்க்காத, என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.*

'பிழைகளற்றவன் .... அவனென'

// 'பிழைகளற்றவன் .... அவனென'
யார் யாரைச் சொன்னாலும்...
வானலாவ சிரிப்பவன் நான்!
*
// பிழைகளற்ற மனிதனை
தேடியலையாதீர்கள்...
அவன் இன்னும்
பிறக்கவே இல்லை...!
*

Saturday, August 20, 2016

பாதச்சுவடுகள்..!! #நிஷாமன்சூர்

காம்பவுண்ட் கேட்டுக்கு வெளியே
கிட்டத்தட்ட தெருவோரத்தில் விடப்பட்டிருக்கிறது
பணியாளர்களின் நலிந்த காலணி
கேட்டுக்கு உள்ளே ஓரத்தில் விடப்பட்டிருக்கிறது
தூரத்து அல்லது எளிய உறவினர்களுடைய தேய்ந்த காலணி
தலைவாசற்படிகளுக்குக் கீழாக
ஆனால் ஓரமாகவும் நேர்த்தியாகவும் விடப்பட்டிருக்கிறது
கொஞ்சம் நெருங்கிய ஆனால் டிஸ்டன்ஸ் மெயிண்டைன் செய்கிற
உறவுக்காரர்களின் நளினமான காலணி

உரத்த சிந்தனை / பெண்கள் இயற்கையோடு இயைந்த இயல்புகள்

பூமிப் பெண்ணின் பெண் மகவுகள்தான் உலகின் எல்லா பெண்ணினமும், அவள் தலை தாயாயிருந்து விருட்சங்களையும் உலகு வேண்டும் தாவரங்களையும் தன்னில் பிரசவிக்கிறாள் என்றால், உயிர்களை பிரசவிக்கும் செயலை ஏனைய எல்லா பெண்ணினமும் செய்து கொண்டிருக்கின்றன.
இது காலத்தை கட்டமைத்தவனின் உலகியல் நோக்கு. மாற்றவோ மறுக்கவோ முடியாத நிபந்தனைகளாக இருப்பதால், அவ்வழியேதான் மண்ணின் மனிதர் வழி என்றிருக்கையில், கரு சுமக்க பெண்ணும், வாழ்வு சுமக்க ஆணும், குலம் தழைக்க குழந்தைகளும் என்றிருக்கும் நிலையே இயற்கை நிலை.
இந்நிலையில்; சுமந்தேனே, பெற்றேனே, வளர்த்தேனே என்பதெலாம்; பெண்ணிணம் அவர்களாக ஏற்றுக் கொண்ட நிலையல்ல, மாறாக, படைப்பில் சரிவிகித தன்மைகளுடன் வரையறை செய்யப்பட்டவை.
இன்றைக்கு; அதிலிருந்து விலக்கு வேண்டுவது போல், அறிவு வீக்கம் கொண்ட சில அம்மணிகள் விம்மி அழுவதும், வீராப்பு காட்டுவதும், வீண் கோஷம் எழுப்புவதும், என்ன வேண்டுமாய்? அங்கவிடங்கள் அங்கிங்கு நினப்பது போல் மாறி விடுமா, இல்லை பிரசவ வலி ஆண்களுக்கு மட்டுமே என்றாகி விடுமா. இயற்கையின் நிலையை, இறைவனின் திறத்தை, போராட்ட நிறங்களால் மாற்றி விடத்தான் முடியுமா.

பெண்கள் இயற்கையோடு இயைந்த இயல்புகள், அதன் ஊடாகத்தான் அடியெடுத்து வைக்க வேண்டுமேயொழிய எதிராய் பயணிக்க முயல்வது, நளினங்களை பாழ்படுத்தி விடும், பெண்களின் வன்மையான நிலைப்பாடுகள், உலகின் மென்மையான இன்னொரு பகுதியை கண்ணுக்கு காட்டாமல் மறைத்து விடவும் கூடும்

அந்த 43 ஆண்டுகள்


Vavar F Habibullah
எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த கால கட்டம்...
இளம் வயது, திருமணம் பற்றி எண்ணாத வயது. பெற்றோரின் மூத்த மகன் என்பதாலும், நான் தவிர்த்து, மீதமுள்ள
குடும்ப வாரிசுகள் ஐந்து பேருமே ஆண் மக்கள் என்பதாலும், ஒரு மகள் இல்லையே என்ற குறையை நிவர்த்தி செய்யவும், என் பெற்றோர் நான் படிக்கும் கால கட்டத்திலேயே எனக்கு திருமணம் பேசி, அதை மிகவும் விமரிசையாக நடத்தி மகிழ்ந்தனர்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றால் - என்னைப் பொருத்த வரையில் அதை 'இறைவன் அருள்' என்றே சொல்ல வேண்டும்.
என் இல்லத்தரசியாக இருந்து - அன்பான, அறிவான, பண்பான, பாசமான குழந்தை செல்வங்களை எனக்கு வாரிசாக பெற்றுத் தந்த என் குழந்தைகளின் பாசத்திற்குரிய தாயை, நான் வாழ்க்கைத் துணையாக அடைந்து இன்றுடன் நாற்பத்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

மரிச்சாலும் அழமாட்டாயா? - அபு ஹாஷிமா

நூறு வயசுக்கு மேலிருக்கும் உம்மாவுக்கு...
ஆனாலும் ..
உம்மா ஆரோக்கியமாத்தான் இருக்கா!
உம்மாவுக்கு ஒருபாடு பிள்ளைகள் இருந்தது
இப்போதும் இருக்கிறது!
ஒவ்வொருநாளும் புதுசு புதுசா
புதுப் பிள்ளைகள் பூவாகப் பிறக்கும்
அடுத்த நாளு பிள்ளையா வளரும்!
உம்மாவே ஒரு பூப்பந்தல்போல அழகா இருப்பா
உச்சந்தலையிலே பூமுடிந்து
சுமங்கலியா மகராசியா இருப்பா
பார்க்கப் பார்க்க சந்தோசமா இருக்கும்
கொஞ்சம் சங்கடமாவும் இருக்கும்...!
காரணம்...

பேருந்து பயணம்


என்றும் கவியுடன் முஹம்மது முஸம்மில்

அவள் ஓரு தேவைதைதான்
வானிறங்கி வந்த வெண்ணிலவுதான்
எனக்கு மட்டும் அவள்
எனக்காக ஆனவளும் அவள்தான்
முதன்முதலாய் பார்த்தேன்
முழு மனதையும் இழந்தேன்
முழுவதுமாய் என்னை
அபகரித்தவள் அவள்
சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன கெஞ்சல்கள்
செல்ல சிணுங்கல்கள்
எல்லாம் அவளுடன்

நெருக்கடி ....! (STRESS)

சமூகதிலுள்ள எல்லா நிலைகளில் உள்ளவர்களையும் ஓரவஞ்சனை இல்லாமல் தாக்கும் தற்கால வியாதி மனநெருக்கடி.
எதிபாராத ஏமாற்றம், எதிபார்த்த ஏமாற்றம் அல்லது நடக்குமென எதிபார்த்து செயல்பட்டு நடக்காமல் போகும்போது மனம் நருக்கடிக்கு உள்ளாகிறது.
இது தற்கால எதிர்பார்ப்புகள் நிறைந்த சமூகத்தில் அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு.மனிதனின் தேவைகள் விரிவடைய நெருக்கடியும் கூடுகிரது.
நெருக்கடிகளை நிமிர்ந்து நின்று நேர்கொள்ளும் பொழுது அதன் தாக்கம் குறைந்து விடுகிறது.
வெற்றிக்கான வழிகள் திறந்து கொடுக்கின்றன.

Friday, August 19, 2016

நானும் என் எண்ணங்களும்....!


இரவும் பகலும் அல்ல
மாறி மாறி வருவதற்கு....!
இருளும் ஒளியும் அல்ல
ஒளிர்ந்து மறைந்து போவதற்கு....!

உயர்வும் தாழ்வும் இல்லை
ஏறி இறங்கி வருவதற்கு....!
உழைப்பும் வியர்வையும் அல்ல
ஊதியம்பெற்று உலர்ந்து போவதற்கு....!

உணவும் நீரும் அல்ல
உண்டவுடன் ஜீரணித்து போவதற்கு....!
கனவும் நினைவும் அல்ல
கண்டு மறந்து போவதற்கு.....!

Wednesday, August 17, 2016

THE MAGIC MOMENT

Kathir Vel                 

 
இந்த போட்டோ எடுத்த கேமரான் ஸ்பென்சர் ஆஸ்திரேலியா காரர். கெட்டி இமேஜஸ்ல ஒர்க் பண்றார். உசேன் போல்ட் உண்மையில் மனிதன்தானா அல்லது வேற்று கிரக வாசியா என்ற கேள்விக்கு வித்திட்ட அதிசய காட்சியை கேமராவில் பிடித்தடக்கிய அனுபவம் பற்றி ஸ்பென்சர் சொல்கிறார்:

ரொம்ப வருசமா போல்ட்ட ஷூட் பண்ணிட்டு இருக்கேன். 3 ஒலிம்பிக்ஸ், 2 வேல்ட் சேம்பியன்ஷிப்ஸ்ல போல்ட எடுத்திருக்கேன். உலகத்துலயே வேகமா ஓட்ற மனுசன போட்டோல புடிக்கிறது கஷ்டமான வேலைதான். ஆனா அதுல ஒரு கிக் இருக்கு.

Monday, August 15, 2016

ரஹ்மத் பதிப்பகம்: நிறைவேறிய கனவு


இஸ்லாம் தொடர்பான தரமான தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டுவருவதில் முக்கியமானது ரஹ்மத் பதிப்பகம். இந்தப் பதிப்பகத்தின் மேலாளர் இ.எம். உஸ்மானுடன் பேசினோம்:

“சென்னை ரஹ்மத் அறக்கட்டளையால் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பதிப்பகம்தான் ரஹ்மத் பதிப்பகம். இதன் நிறுவனர் எம்.ஏ. முஸ்தஃபா அவர்கள். மயிலாப்பூரிலும் சிங்கப்பூரிலும் எங்களுக்குக் கிளைகள் இருக்கின்றன. அரபி மூல நூல்களான புகாரி, முஸ்லீம், திர்மிதி, அபூதாவூத். தப்சீர் இப்னு கஸீர், நபி மொழிகள் முதலான பல்வேறு முக்கியமான புத்தகங்களை அழகான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறோம். அரபி மொழியும் தமிழும் அறிந்த பெரும் அறிஞர் குழுவின் 20 ஆண்டுகள் உழைப்பில் ரஹ்மத் பதிப்பகம் கொண்டுவந்த மொழிபெயர்ப்புகள் நிறைய. இந்தப் புத்தகங்கள் வந்த பிறகு மக்களுக்குப் பெரிய விழிப்புணர்வே கிடைத்ததுபோல் இருக்கிறது. அதற்கு முன்பு அரபி மொழியறிந்தவர்கள் சொல்வதிலிருந்து மக்கள் பல விஷயங்களை ஒவ்வொரு விதமாகப் புரிந்துவைத்திருந்தார்கள். நாங்கள் கொண்டுவந்த அதிகாரபூர்வமான புத்தகங்களைப் பார்த்துவிட்டு அரபி மூலத்தில் சொல்லப்பட்டதைத் தெளிவாகத் தமிழிலும் மக்கள் உள்வாங்கிக் கொண்டனர்.

மாயக் காடும் முத்துக்குமார் எனும் வேட்டைக்காரனும்!

மாயக் காடும் முத்துக்குமார் எனும் வேட்டைக்காரனும்!: ‘இறந்துபோனதை அறிந்த பிறகுதான் இறக்க வேண்டும் நான்’என்று எழுதியவன், எதுவும் அறியாமலே இறந்துபோனான். மாயக் கோடு அவனை எடுத்துக்கொண்டது!


--

தமிழ்த் திரைப் பாடல்களில் நவீன வாழ்க்கையை, நவீன கவிதை ஆக்க முறையைப் பயன்படுத்தியவன் முத்துக்குமார். புதுப் புது உத்திகளை முன்வைத்தவன். ஹாஸ்யத்தையும் கொச்சைப்படுத்தாமல் செய்தவன். அவன் தமிழ்த் திரைப்படப் பாடல்களை அதுவரை இருந்த இடத்திலிருந்து மாற்றி வேறு ஒரு செறிவான தளத்துக்கு நகர்த்தியவன்.

அவன் தன் அரசியலைச் சொல்லவும் இல்லை. மறைக் கவும் இல்லை. தான் யாருக்காக எழுதுகிறோம், ஏன் இக்காரியத்தைச் செய்கிறோம் என்று தெரிந்தே அவன் செய்தான். எந்த இயக்கத்துக்குப் பாட்டு எழுதினான் என்பதை அவனும் சொல்லவில்லை, இயக்கமும் சொல்ல வில்லை. அவன் எழுதிய பாட்டு என்று தெரியாத அந்தச் சில பாடல்கள் இன்னும் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அம்மா இல்லாமல் வாழ்வைத் தொடங்கிய அவனுக்கு, உறவுகள் மீது தீராக் காதல். மகனாக, அண்ணனாக, தம்பியாக, பேரனாக, அப்பாவாக, கணவனாக அவன் அனைவருக்கும் தன்னால் இயன்றவரை தன் சக்திக்கு உட்பட்டு, பிரியத்தையும் ஆதரவையும் முழுமையாகக் கொடுத்தவன். வீடும் வீடு குறித்த எண்ணமுமே அவனுடைய வாழ்க்கை. வீடே அவன் சொர்க்கம்.

நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவனுக்கு எழுதிய கடிதம்

மரணத்தருவாயில் நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவனுக்கு  எழுதிய கடிதம்

“அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப்படித்துப்புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப்பழகிக்கொண்டு இருக்கிறாய்….

வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீர்வாதிப்பார்கள். பெண் உடல் புதிராகும். என் தகப்பன் என்னிடமிருந்து ஒளித்து வைத்த ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைபோல நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்கு த் தெரியாதது இல்லை. பார்த்து நடந்து கொள்.

Saturday, August 13, 2016

அவமானத்தை வென்ற தன்மானம்

Vavar F Habibullah
ஒரு முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபரகாம் லிங்கனை சிறுமை படுத்தும் நோக்கில் அவையில் இருந்த ஒரு மேல் மட்ட பிரபு இருக்கையில் அமர்ந்த படியே ஒரு முரட்டு கேள்வியை மிகவும் ஏளனத்துடன் லிங்கனை நோக்கி கேட்டார்.
தன் காலில் கிடந்த ஷூவை கழற்றி எடுத்து கைகளில் ஏந்தியபடி அவர் கேட்ட கேள்வி சற்று காட்டமானது தான்.
"மிஸ்டர் லிங்கன்!
நீங்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கலாம்.....ஆனால் நான் அணிந்திருக்கும் ஷூவை விட தரம் குறைந்த ஷூக்களை கைகளால் தைக்கும் ஒரு ஷூ மேக்கரின் மகன் தான் நீங்கள் என்பதை இந்த அவைக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்."
அமைதியாக அந்த விமர்சனத்தை புன் சிரிப்புடன் ஆமோதித்த லிங்கன் எழுந்து நின்று தன் கருத்தை முன் வைத்தார்.
"அன்புக்குரிய லார்ட் அவர்களே....!
நான் ஒரு சாதாரண ஷூ மேக்கரின் மகன் என்பது என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தெரியும்.

மாய் எங்கள் அன்பு மாய் ...

by J Banu Haroon

                                              மாய் எங்கள் அன்பு மாய் ...

 (மாய் என்ற வியட்நாம் சொல்லுக்கு பாட்டி என்று தமிழில் பொருள்படும்)
                                       =======================

கடந்த பதின் மூன்று வருடங்களில் மாய் அவர்களின் செறிவூட்டப்பட்ட அன்பிற்கு நாங்கள் பாத்திரமானோம் .....

அவர்களின் பிள்ளைகளில் ஒருவராக மாறிப்போனோம் ...இந்த அன்பிற்கும் ,அரவணைப்பிற்கும் எங்களால் விலை மதிப்பீடு செய்ய இயலவில்லை ....

இப்போதெல்லாம் அடிக்கடி பார்க்க முடியாமல் போனாலும் ,போனில் அழைப்பார் ....''ஏன் என்னை பார்க்க வரவில்லை ...எப்போ வருவீங்க ?...வரும்போது பானுவையும் அழைத்து வந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் ''.....என்பார் .சற்றும் தாமதிக்காமல் என் கணவர் என்னையும் உடனே கிளம்பச்சொல்லுவார் ....மாய் -ஐ பார்க்கும் போதெல்லாம் அத்தனை ஒரு விவரிக்க முடியாத அன்பில் கட்டுண்டு போவோம் ....

மாய் எங்கள் அன்பு மாய் ...

by J Banu Haroon

                                              மாய் எங்கள் அன்பு மாய் ...

 (மாய் என்ற வியட்நாம் சொல்லுக்கு பாட்டி என்று தமிழில் பொருள்படும்)
                                       =======================

கடந்த பதின் மூன்று வருடங்களில் மாய் அவர்களின் செறிவூட்டப்பட்ட அன்பிற்கு நாங்கள் பாத்திரமானோம் .....

அவர்களின் பிள்ளைகளில் ஒருவராக மாறிப்போனோம் ...இந்த அன்பிற்கும் ,அரவணைப்பிற்கும் எங்களால் விலை மதிப்பீடு செய்ய இயலவில்லை ....

இப்போதெல்லாம் அடிக்கடி பார்க்க முடியாமல் போனாலும் ,போனில் அழைப்பார் ....''ஏன் என்னை பார்க்க வரவில்லை ...எப்போ வருவீங்க ?...வரும்போது பானுவையும் அழைத்து வந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் ''.....என்பார் .சற்றும் தாமதிக்காமல் என் கணவர் என்னையும் உடனே கிளம்பச்சொல்லுவார் ....மாய் -ஐ பார்க்கும் போதெல்லாம் அத்தனை ஒரு விவரிக்க முடியாத அன்பில் கட்டுண்டு போவோம் ....

Friday, August 12, 2016

ஜெய் ஹிந்த்

by Vavar F Habibullah

ஜெய் ஹிந்த்
வாழ்க இந்திய தேசம்...ஒவ்வொரு இந்தியனையும் தலை நிமிர வைக்கும் இந்த வீரம் செறிந்த சொல்லை கேட்டு வெகுண்டது
அன்று, இந்தியனை கட்டியாண்ட பிரட்டிஷ் அரசு.
"ஜெய் ஹிந்த்"
என்ற இந்திய தேசத்தின் வெற்றிக்குரலை உலகுக்கு அறிமுகம் செய்தவர், மேஜர் ஆபித் ஹசன்.ஹைதராபாத்தை சார்ந்த இவர்,நேதாஜி சுபாஸ் சந்திர போசின் நெருங்கிய நண்பர்.
ஹசன் - ஒரு சிறந்த பொறியியல் வல்லுநர்.
மேற்படிப்பிற்காக ஜெர்மனி வந்த இவரை நேதாஜியின் சுதந்திர தாகம் ஈர்த்தது.படிப்பை உதறிவிட்டு நேதாஜியை பின் தொடர்ந்த ஹசன் பின்னாளில் நேதாஜியின் அந்தரங்க செயலராக தன் பணியை தொடர்ந்தார்.
ஜெர்மன் மொழியில் நிபுணரான ஹசன் உதவியுடன், ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரை சந்தித்த நேதாஜி இந்தியாவிலிருந்து ஆங்கிலேயரை விரட்டியடிக்க ஹிட்லரின் உதவியை நாடினார்.

பகுத்தறிவு - மனிதன் - மார்க்கம் - இறைவன்

பகுத்தறிவு - மனிதன் - மார்க்கம் - இறைவன்

எனக்கு இந்த உலகம் மிகவும் இன்புற்றிருக்க வேண்டும். குற்றங்கள் இல்லாத பூமியாய் இது மலரவேண்டும். எங்கும் அமைதியும் அன்புமே பொங்கவேண்டும். காதலில், பாசத்தில், சகோதரத்தில், நட்பில் மகிழ்ந்து குலாவித் திரியவேண்டும். வன்முறையே இல்லாத நாட்களே மண்ணில் வேண்டும். காண்போரையெல்லாம் நெருக்கமான உறவுகளாய் ஆக்கிக் கட்டித் தழுவ வேண்டும்.

நண்பர் ஒருவர் என்னிடம் தன் வலைத்தள முகப்பில் இடுவதற்கு சில வரிகள் கேட்டிருந்தார். ஒரு பாடலைச் சுட்டிக்காட்டி அதுபோல் இருந்தால் நலம் என்றார். அவருக்காக நான் எழுதிய வரிகள் இதோ:

புத்தம் புதிதாகப் பிறக்க வேண்டும்
நித்தம் விடிவானில் பறக்க வேண்டும்
செத்த விலங்கோடும் அன்பு வேண்டும்
சித்தம் கலையாத பண்பு வேண்டும்
புத்தம் மறவாத புனிதம் வேண்டும்
ரத்தம் பழகாத மனிதம் வேண்டும்
சத்தம் வெல்லாத அமைதி வேண்டும்
யுத்தம் இல்லாத பூமி வேண்டும்

இப்படியே ஆசைப்பட்டால் மட்டும் இது சாத்தியமாகிவிடுமா? இதை எப்படி அடைவது?

Monday, August 8, 2016

வாசிப்பு - ஒரு கலை !



           'வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும்' என ஒரு பழமொழி இருக்கிறது. உண்மைதான். மனிதனின் உடல் வளர்ச்சிக்கு உணவும் மருந்தும் எவ்வளவு உதவி செய்கின்றனவோ, அது போலவே மனிதனின் மன வளர்ச்சிக்கும், ஆளுமை விருத்திக்கும் புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் வாசிக்கும்போது சில படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்பது உங்களில் பலருக்குத் தெரியாமலிருக்கும். அது 'வாசிக்கும் கலை' எனப்படுகிறது.

            வாசிக்கும் கலை குறித்து வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் 1972 இல் தோமஸ் மற்றும் ரொபின்சன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட SQ3R (எஸ்.க்யூ.த்ரீ.ஆர்) முறை பிரபலமான ஒரு முறை. இங்கு SQ3R முறையின் கீழ் புத்தகமொன்றை வெற்றிகரமாக வாசித்து முடிப்பதற்கு ஐந்து படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

S - Survey ( தேடிப் பார்த்தல்)
Q - Question ( கேள்வி எழுப்புதல்)
R - Read (வாசித்தல்)
R - Retrive ( மீளவும் பார்த்தல்)
R - Review (விமர்சித்தல்)

            இங்கு முதல் படிமுறை S - Survey ( தேடிப் பார்த்தல்) ஆகும். தேடிப்பார்ப்பதில் நூலின் பெயர், நூலாசிரியர், பிரசுரிக்கப்பட்டுள்ள ஆண்டு, முன்னுரை மற்றும் அறிமுகம், பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து பார்ப்பது முக்கியமாகும். நூல் குறித்த கேள்விகளை எழுப்புவது இரண்டாவது படிமுறையாகும்.

Thursday, August 4, 2016

தினமொருசொல் கற்க வாருங்கள்

தினமொருசொல்
ஒருவரின் மொழியாளுமைக்கு, அது தாய்மொழியாகினும் அல்லது அந்நிய மொழியாகினும் அவர் கற்கும் மொழியின் இலக்கணத்தைவிட அம்மொழியின் சொற்களை அறிந்துகொள்வது இன்றியமையாதாகிறது.

“அதிகமான சொற்களை அறிந்து வைத்திருப்பவர்களால், இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தி சரளமாக அடுத்தவரிடத்தில் உரையாடல் மூலமாகவோ / எழுத்தின் மூலமாகவோ எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.” என்கிறது ஒரு ஆராய்ச்சி.

Wednesday, August 3, 2016

ஜிஎஸ்டி

Shahjahan R
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது. இதைப்பற்றி எல்லாரும் ஆஹா ஓஹோ என்று போற்றுகிறார்களே... இதனால் நமக்கு என்ன பயன் என்று புரிகிற வகையில் எழுதுங்களேன் என்று இன்பாக்சில் கேட்கிறார்கள்.
இது கொஞ்சம் குழப்படியான விஷயம். இந்தியாவில் இதுவரை வழக்கில் இருக்கும் வரிகள் குறித்துத் தெரிந்து கொள்ளாமல் ஜிஎஸ்டி குறித்து புரிந்து கொள்ள முடியாது. எனவே, வரிகள் குறித்து சுருக்கமாகத் தருகிறேன்.
வரிகளில் பல உண்டு. ஆனால் அவை குறிப்பாக இரண்டு பிரிவுகளின் கீழ் வரும் : டைரக்ட் டேக்ஸ் (நேரடி வரி), இன்டைரடக்ட் டேக்ஸ் (மறைமுக வரி).
• நேரடி வரிகள் - வருமான வரி, சொத்து வரி, பரிசுகள் மீதான வரி, செலவு வரி, வட்டி வருமான வரி, கார்ப்பரேட் வரி, போன்றவை.
• மறைமுக வரிகள் - விற்பனை வரி, சேவை வரி, மதிப்புக்கூட்டு வரி (வாட்), கஸ்டம்ஸ் டியூடி, ஆக்டிராய், எக்சைஸ் வரி போன்றவை.
இவற்றில் சில வரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. சில வரிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை.
எந்தவொரு நாட்டிலும் நேரடி வரிகளின் விகிதம் அதிகமாகவும் மறைமுக வரிகளின் விகிதம் குறைவாகவும் இருப்பதே நல்லது. இந்தியாவில் 2011 கணக்கெடுப்பின்படி 76 கோடிப்பேர் வயதுவந்தவர்கள். ஆனால் 2012-13 கணக்கின்படி, வருமான வரி செலுத்துவோர் வெறும் 2.9 கோடிப் பேர்தான். அதிலும், 18,358 பேர்தான் ஒரு கோடிக்கும் அதிகமான வருமானத்தைக் காட்டினார்கள். அதாவது, ஏராளமானோர் வரி ஏய்ப்புச் செய்கிறார்கள். இதேபோல இதர வரிகளுக்கும் புள்ளிவிவரங்களைத் தோண்டி அடுக்கலாம். அது இருக்கட்டும்.

Tuesday, August 2, 2016

பெண் :கண்கள் படபட துடிக்குது துடிக்குது

பல்லவி :
பெண் :கண்கள் படபட துடிக்குது துடிக்குது
நெஞ்சம் ஒருபுறம் கனக்குது கனக்குது
தேகம் ரெக்கையின்றி வானில் பறக்குது
பறக்குது... பறக்குது... பறக்குது

ஆண் :கால்கள் தரையில் படவும் மறுக்குது
கைகள் உன்னை தழுவிட துடிக்குது
எல்லாம் நீயென உள்மனம் சொல்லுது
சொல்லுது... சொல்லுது... சொல்லுது...

கேட்டவருக்கு விளக்கம் ..

 >>>நபி சாதியை ஒழித்தாருன்னு சொல்லிட்டு சாதிஒழிய வேண்டியதில்லைன்னு சொல்றிங்க நன்பர் புகாரி<<

நான் சாதி ஒழிய வேண்டியதில்லை என்று சொல்லவில்லை.
சாதி ஒழிந்ததாய் நான் அறியவில்லை என்றுதான் சொல்கிறேன்.
சாதியை ஒழிப்பது இயலுமா இயலாதா என்பது இருக்கட்டும், ஆனால் சாதிகளுக்கு இடையில் இருக்கும் பாகுபாடுகள் தூள் தூளாக வேண்டும். அதைத்தான் நான் சொல்கிறேன்.
பாகுபாடுகள் தீர்ந்துவிட்டால், யார் என்ன சாதியானால் யாருக்கு என்ன?
அப்படியே இனம் அழியத் தேவையில்லை. ஆனால் இனப்பாகுபாடு அழிந்தே தீரவேண்டும்
மொழி அழியக் கூடாது ஆனால் மொழிப்பாகுபாடு அழிய வேண்டும்.
இப்படியே மனிதர்களுக்கு இடையில் உள்ள பாகுபாடுகள் எல்லாம் தீய்ந்து கருக வேண்டும்.
அதற்கு முதலில் கோவிலில் ஆண்டான் அடிமை ஒன்றாய் நின்று வணங்குதல் வேண்டும், மேலோன் கீழோன் ஒரே கல்விநிலையத்தில் பயிலல் வேண்டும், இப்படி ஒரே ஒரே என்ற உயர்வு வேண்டும்

*

வெளிநாட்டு சம்பாத்தியமும் சமுதாய முன்னேற்றங்களும் ....

Abdul Gafoor

வடிக்க ரேசனரிசியும்
குடிக்க பழங்கஞ்சியும்
அவித்த கிழங்குகளும்
குடும்ப நீரோட்டங்களில்
அங்கமாகி சங்கமித்து ...

மாவுகள் கலந்துருவாகிய
உணவுகளை பெரும்பாலோரின்
நாவுகள் மென்றிடாத
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ...


கல்வியேடுகளை படித்தும்
பணிகளாற்ற மடித்தும்
உலவியோரின் குடும்பங்களில்
கஷ்டமெனும் காற்று
புயலாய் சுழலுகையில் ...

அரேபியா என்றொலித்த
நான்கெழுத்து வார்த்தை
துவண்டிருந்த மனிதர்களை
தென்றலாய் தழுவியது ...

திண்ணைப் பேச்சுகளிலும்
டீக்கடை பெஞ்சுகளிலும்
சைக்கிள் கடைகளிலும்
தலைப்புச் செய்திகளானது ...

பதவியும் பகட்டும்

Vavar F Habibullah
 பதவி - சாதாரண போலீஸ்காரரைக் கூட மனிதர்களை மிகவும் இளக்காரமாக பார்க்கத் தூண்டுகிறது.அதிகாரம் தரும் போதை இது.
அரசு அலுவலர்களும், அரசியல்வாதிகளுமே நம் நாட்டில் அதிகாரம் மிக்கவராக திகழ்கிறார்கள்.பணம் படைத்தவர்களையும், புகழ்பெற்றவர்களையும் - அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளுமே ஆட்டி படைக்கிறார்கள்.

இதனாலேயே படித்தவர்கள் அதிகாரியாக விரும்புகிறார்கள்.படிக்காதவர்கள் அரசியல் வாதிகள் ஆக துடிக்கறார்கள்.ஆட்சியாளர்களே இந்நாட்களில் மாண்புகளாக, மாட்சிமை பொருந்திய மேன் மக்களாக மக்கள் முன் பவனி வருகிறார்கள்.