Thursday, January 2, 2014

தவுச்சவாய்க்கு தண்ணி


ஆத்துல கொளத்துல கெணத்துல ஒருவாய்
அள்ளிக் குடிச்ச காலம்போச்சு.

வெய்யக் காலத்துல பாதையோரத்துல
நீர்மோரும் பானைத்தண்ணியும்
ஈரத்துணிபோத்தி இருந்த காலமும் போச்சு

பாட்டல் தண்ணி வந்ததும் வந்துச்சு
பைத்யாரப் பயலுவோ சொமந்துட்டு திரியரானுவோ

தாயப் பழிச்சாலும் தண்ணியப் பழிக்காதேன்னு
சொலவம் சொன்னது அந்தக்காலம்,
நீ குடிக்கற தண்ணில கிருமி இருக்குன்னு
காசுபாக்கறது இந்தக்காலம்

தண்ணிக்கும் வெளம்பரம் தவுட்டுக்கும் வெளம்பரம்
தட்டுவானிப் பயலுவோ தாளிக்கறான் காசுக்கு

செண்பகாதேவி அருவில நடந்த களப்புல
குடிக்கத் தண்ணிகேட்டா பாட்டல் தண்ணியத்தான்
தூக்கிக் கொடுக்கறான்,
போடா மசுராண்டின்னு அருவித்தண்ணிய
அள்ளிக் குடிச்சேன் வயிறுகுளுர

தண்ணியயும் தனியாருகிட்ட
தாரவாக்கப் போறானாம் சர்க்காரு.
மூச்சுக்காத்தயும் விப்பான் நாளைக்கு
மூச்சுவிடப் போவான் நம்மாளு,
பெரும பீத்திட்டு...!!


- நிஷா மன்சூர்Nisha Mansur

No comments: