Showing posts with label பாட்டல் தண்ணி. Show all posts
Showing posts with label பாட்டல் தண்ணி. Show all posts
Thursday, January 2, 2014
தவுச்சவாய்க்கு தண்ணி
ஆத்துல கொளத்துல கெணத்துல ஒருவாய்
அள்ளிக் குடிச்ச காலம்போச்சு.
வெய்யக் காலத்துல பாதையோரத்துல
நீர்மோரும் பானைத்தண்ணியும்
ஈரத்துணிபோத்தி இருந்த காலமும் போச்சு
பாட்டல் தண்ணி வந்ததும் வந்துச்சு
பைத்யாரப் பயலுவோ சொமந்துட்டு திரியரானுவோ
தாயப் பழிச்சாலும் தண்ணியப் பழிக்காதேன்னு
சொலவம் சொன்னது அந்தக்காலம்,
நீ குடிக்கற தண்ணில கிருமி இருக்குன்னு
காசுபாக்கறது இந்தக்காலம்
Subscribe to:
Posts (Atom)
