Tuesday, January 28, 2014

'முடியலைனா பேசாமலாச்சும் இருங்க..அவங்க கூடி போராடினது உங்களுக்கும் சேர்த்துதான்...'

கூட்டம் கூடினார்கள்
வேண்டியதை கேட்டார்கள்
வேண்டாதது நடக்கவில்லை
போராடியது அனுமதியோடு
போராடியது பிரச்சனையாகவில்லை

ஒதுங்கி நிற்கவில்லை
ஒதுக்கி கொடுத்தால்
ஒடுங்கிப் போனவர்கள்
உயர்ந்துப் போகலாம்
உயர்வது அடுத்தவர்களை தாழ்த்தியல்ல

கேட்பது உனக்காகவும் இருக்கலாம்
கேட்பது உன்னை பாதிக்காது
கொடுப்பவர்கள் கொடுப்பார்கள்
கொடுக்கவில்லையென்றாலும்
கொடுப்பவர்களை தடுத்தல் தகுமோ!

இடாதவன் இடுபவனை கெடுத்தல் முறையோ !
இயலாதவன் இயல்பவனை தடுக்க மாட்டான்
இயன்றவன் இயலாதவனுக்கும் உதவுவான்
இயல்பாக உலகமெங்கும் நடக்கும் நியதி

முறையாக
கேட்பதும்
கொடுப்பதும்
தனியுரிமை
முறைகேடாக
தடுப்பதில்
உரிமையில்லை

உரிமையை உயர்த்திப் பேசும்
பெருமை பெற்ற பணக்கார நாட்டிலும்
அமெரிக்காவிலும் அதனை தருகிறார்கள்

'முடியலைனா பேசாமலாச்சும் இருங்க..அவங்க கூடி போராடினது உங்களுக்கும்  சேர்த்துதான்...'

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

/// இடாதவன் இடுபவனை கெடுத்தல் முறையோ !
இயலாதவன் இயல்பவனை தடுக்க மாட்டான்
இயன்றவன் இயலாதவனுக்கும் உதவுவான்
இயல்பாக உலகமெங்கும் நடக்கும் நியதி ///

அருமை + உண்மை ஐயா...

வாழ்த்துக்கள்...

LinkWithin

Related Posts with Thumbnails