Thursday, January 30, 2014

துளிகளாய்த் தோன்றும் கடல்கள்! `நீயாகக் கொடு!

துளிகளாய்த் தோன்றும் கடல்கள்!

`நீயாகக் கொடு!

ஒரு நண்பரின் வீட்டில் நாம் எல்லோரும் கூடிப் பேசிக்கொண்டிருந்தோம்!
நண்பரின் மனைவி ஒரு தட்டில்,,வேர்க்கடலையை
கொண்டு வந்து கொடுத்தார்!
நண்பர் அத்தட்டை,,எல்லோருடைய முன்னிலையிலும்,,நீட்டினார்!
ஆளுக்குக் கொஞ்சம் அள்ளிக் கொண்டனர்!
அதில் ஒரு நண்பர் மட்டும்,அவ்வாறு அள்ளுவதர்க்குப் பதிலாக,நண்பரின் முனனால்,கையை நீட்டினார்!
,"நீயே எடுத்துக்கொள்"
என்று நண்பர் வற்ப்புறுத்த அதற்க்கு,அள்ள,மறுத்த,நண்பர்,நகைச்சுவையாகக்,கூறினார்,"நீயாகவேக்கொடு,நீயாகக் கொடுத்தால் கொஞ்சம் அதிகமாகவே கொடுப்பாய்.நானாக எடுத்தால் குறைவாக எடுக்க நேரிடும்!"
எல்லோரும் நகைத்தனர்..ஆனால்,எனக்கு மட்டும் சிரிப்பு வரவில்லை.
அந்த நண்பர் சொல்வது எவ்வளவு பெரிய உண்மை?
இறைவா! நீயாகக்கொடு நீயாகக் கொடுத்தால் தான் அது,,அளவற்றதாக,,இருக்கும்!நீயாகக் கொடுத்தால்தான் அது நிறைவாக இருக்கும்!
நீயாகக் கொடுத்தால்தான்,அது முழுமையாக இருக்கும்!

நீயாக கொடுத்தால்,என் தேவைக்கும் மிக அதிகமாகவே கொடுப்பாய்,,.,
நீயாகக்கொடுதால்,, , என்,தேவைகளை,அறிந்து,கொடுப்பாய்.
நீயாகக் கொடுத்தால்,எந்த நேரத்தில்,,எப்படி கொடுக்கவேண்டுமோ,,அப்படிக் கொடுப்பாய்!
என்னைக் கேட்க்கவிடாதே!
நான் கேட்டால் ஏடாகூடமாக ஏதாவது கேட்டு வைப்பேன்!
தேவை,என்ன,என்பதை,அறியாமலேயே,கேட்ப்பேன்!
பயந்து,,பயந்து,கேட்ப்பேன்!
இல்லையென்றால்,பேராசைபிடித்து ,முழுப் பொக்கிஷத்தையே கேட்ப்பேன்!
கேட்டது,கிடைத்து,விட்டதும்,இன்னும்,கேட்டிருக்கலாமோ,என்ற,ஏக்கத்தில்,கேட்ப்பேன்!
கேட்க்கக்கூடாததை,கேட்ப்பேன்!
என்னை அழிவுக்கு,இட்டுக்செல்லும்,பொருட்க்களை,கேட்ப்பேன்!
வழிதவற,வைக்கும்,விஷயங்களை,கேட்ப்பேன்!
தயவுசெய்து,என்னை,கேட்க்க,விடாதே!
கொடுப்பதை,நீயாகவே,கொடு!
என்னைப்பற்றி,என்தேவைகளைப்பற்றி,,என்னை விட,உனக்கு,நன்றாகத்,தெரியும்!
ஆகவே,என்,வேண்டுகோள்களை,நிராகரித்து,விடு!
கொடுக்க,வேண்டியதை,நீயாகவே,கொடு!
எனக்கு,கேட்க்கும்,திறனும்,கிடையாது!
பெறுகின்ற,வழிமுறைகளும்,தெரியாது!
கடலுக்கு,கிண்ணத்தை,,எடுத்து செல்பவன்,நான்.
அரசனிடம் அப்பளத்தை,கேட்ப்பவன்,நான்!
மலையிலே,,மணலைத்,தேடுபவன்,நான்...!  

Abu Haashima Vaver

Shafiyath Qadiriyah

No comments: