Monday, September 30, 2013

க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள்

"க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்"
ஆனாலும்.....

மனிதர்கள் பெரும்பாலும்
சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்
ஆனாலும் அவர்களை மன்னியுங்கள்

நீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்
உண்மையான எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள்
ஆனாலும் வெற்றிக்காகப் போராடுங்கள்

நீங்கள் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருந்தால்,
மனிதர்கள் உங்களை ஏமாற்றலாம்
ஆனாலும் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருங்கள்

நீங்கள் பல வருடங்கள்
சிரமப்பட்டுக் கட்டியதை,
ஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்
ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்

நீங்கள் மகிழ்ச்சியுடனும்
நிம்மதியுடனும் இருந்தால்,
மனிதர்கள் உங்கள்மீது பொறாமை கொள்ளலாம்
ஆனாலும் மகிழ்ச்சியாய் இருங்கள்

Friday, September 27, 2013

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவு


தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

இடம்:
டேக் (TAG) அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.
வழி:

    மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும்.
    பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தும் (15 நிமிடங்கள்) பேருந்து மூலமாகவும் வரலாம்.

நேரம்:

    காலை 09.00 மணி முதல் 12:30 மணி வரை விக்கிப்பீடியா பயிற்சிகள்
    மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.

Monday, September 23, 2013

கட்சிகளின் ஊடே மூன்றாவது அணி வேண்டுமாம்

கட்சிகளின் ஊடே மூன்றாவது அணி வேண்டுமாம்
கட்சிகளின் கூட்டாட்சியே இந்த மூன்றாவது அணி உயர்த்தி நிறுத்துமாம்
கட்சிகளின் மூன்றாவது அணியில் முப்பது கட்சியாவது சேர்ந்து நிற்குமாம்
கட்சிகளின் மூன்றாவது அணியில் முரண்பாடு இருந்தாலும் தேர்தல்வரை தோழமை இருக்குமாம்.

மூன்றாவது அணியில் தன் தலைமையில் தான் மற்றவை தொடரும் என்பதில் உள்ளுக்குள் ஒரு முரண்பாடு.
முரண்பாடு.மறைவாக அடக்கப் பட ஆயுதமாக பணம் கருவியாக மாறுமாம்
முரண்பாடுகள் தேர்தல் முடியும் வரை முடக்கப் பட்டு வெற்றி பெற்ற பின் திரும்பவும் முறைபாடுகள் கிளைக்குமாம்
மூளையே உடல் உறுப்புகளை இயங்க வைக்கும்
இதயம் கெட்டதால் உயிர் போகும் நிலை முரண்பாடுகளால் வந்த நிலை

Friday, September 20, 2013

அட... அங்கேயும் இப்படி தானா ?

 முன்பெல்லாம் கிராமங்களில் “மணமகளே மருமகளே வா… உன் வலது காலை எடுத்து வைத்து வா…” எனும் பாடல் ஒலிக்கும். அப்போது மணப்பெண் புகுந்த வீட்டுக்குள் “வலது காலை” எடுத்து வைத்து நுழைவார். இதற்காகவே சுற்றிலும் பாட்டிமார் நிற்பார்கள். “முதல்ல.. உன் வலது காலை எடுத்து உள்ளே வைம்மா” என்று அட்வைஸ்கள் விழும். வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைவது வீட்டுக்கு வளத்தைக் கொண்டு வரும் என்பது நமது செண்டிமெண்ட். ரோமர்களுக்கும் இந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. வீட்டுக்குள் நுழையும் போது வலது காலை வைத்து தான் நுழைவார்கள். அப்படி நுழைவது தான் ரொம்ப நல்லது என்பது அவர்களுடைய எண்ணம். இங்கிலாந்தில் இந்த செண்டிமெண்ட் இன்னும் ஒரு படி மேலே. அவர்கள் செருப்பு போடும் போது கூட வலது காலைத் தான் முதலில் போடுவார்கள். அப்படிப் போட்டால் ஆயுள் நீளும் என்பது அவர்களுடைய செண்டிமெண்ட்.

ஆஹா.. பல்லியே கத்திடுச்சு. நல்ல சகுனம் தான் என வீட்டிலிருக்கும் பல்லியின் தலையில் பாரத்தைப் போடும் செண்டிமெண்ட் நமது ! சும்மாவாச்சும் பல்லிக்கு இரண்டு அடி கொடுத்தாவது உச்சுக் கொட்ட வைப்பார்கள். இந்தோனேஷியாவிலும் இதே நம்பிக்கை இருக்கிறது. கெய்கோ எனும் சிறு பல்லி போன்ற ஒன்று சத்தம் போட்டால் குஷியாகி விடுகிறார்கள். அதுவும் குழந்தைகள் பிறக்கும் போது அது சத்தம் போட்டால் செண்டிமெண்டலாக எல்லாம் சுபம் !

வீட்டுக்குள்ளே செருப்புப் போட்டு நடப்பதில்லை நாம். “வீட்டுக்குள்ள செருப்பு போட்டு நடந்தா புனிதம் கெட்டுடும் ?” என்பது பெரிசுகளின் வாதம். செருப்பு போட்டுக் கொண்டு வீட்டுக்குள் நுழைவது ஒருவகையில் மரியாதைக் குறைவு. தாய்லாந்திலும் இதே செண்டிமெண்ட் உண்டு. செருப்பு போட்டுக் கொண்டு வீட்டுக்குள் வந்தால் அது பயங்கர இன்சல்ட் ஆக நினைக்கிறார்கள். தெருக்களைச் சுற்றி அழுக்கைச் சேகரித்து வரும் செருப்பு வெளியே கிடப்பது தான் நல்லதும் கூட.

வலது கையால் எதையும் கொடுக்க வேண்டும் என்பது நமது செண்டிமெண்ட். இனம், மதம், ஜாதி எல்லாவற்றையும் தாண்டி இந்த செண்டிமெண்ட் உலவுகிறது. இந்த செண்டிமெண்ட் அப்படியே இருக்கிறது தாய்லாந்தில். வலது உள்ளங்கையில் பொருளை வைத்து நீட்ட வேண்டும். இடது கை வலது கை மணிக்கட்டைப் பிடித்திருக்க வேண்டும். இப்படிக் கொடுத்தால் தான் கொடுப்பவருக்கும் நல்லது, வாங்குபவருக்கும் பயன் தரும். இது அவர்களுடைய செண்டிமெண்ட்.

உள்ளங்கை அரிக்குது. இன்னிக்கு நல்ல காசு வரும்போல இருக்கு. என நாம் சொல்வதைப் போலவே துருக்கியில் உள்ளவர்களும் சொல்கிறார்கள். அவர்களுடைய செண்டிமெண்ட் படி, இடது கையில் அரித்தால் பணம் வரும். கொஞ்சம் இடம் மாறி வலது கையில் அரித்தால் அவ்வளவு தான். உள்ளதும் போய்விடுமாம் !

“பெரியவங்க இருக்கும்போ கால்மேல கால் போடாதே” என முந்தைய தலைமுறையினர் சொல்வார்கள். அது எதிரே இருப்பவர்களுக்குச் செய்யும் அவமரியாதை என்பது அவர்களுடைய எண்ணம். இதே செண்டிமெண்ட் தாய்லாந்திலும் உண்டு. கால் மேல் கால் போட்டால் காலால் அடுத்தவரைச் காலால் சுட்டிக் காட்டுவது போல இருக்குமாம். அது அடுத்தவருக்குப் பெருத்த அவமானமாகிவிடும். எனவே கால் மேல கால் போடக் கூடாது என்பது அவர்களுடைய விளக்கம்.

Wednesday, September 18, 2013

அம்மாவின் நடிகைத் தோழி

அம்மா சொல்வாள்
அந் நடிகையின் நடிப்பைப்
பார்க்க நேரும் போதெல்லாம்

'பள்ளிக்கூடக் காலத்தில்
உயிர்த் தோழிகள் நாம்
அமர்ந்திருந்தோம் ஒரே வகுப்பில்
ஒரே பலகை வாங்கில்
அந் நாட்களிலென்றால் அவள்
இந்தளவு அழகில்லை'

பிறகு அம்மா
பார்ப்பது தனது கைகளை
உடைந்த நகங்களை
காய்கறிகள் நறுக்குகையில்
வெட்டுப்பட்ட பெருவிரலை

அத்தோடு அவள் எங்களைப் பார்ப்பாள்
எனது முகத்தை, தம்பியின் முகத்தை
கண்களைச் சிறிதாக்கிப் புன்னகைப்பாள்
அவளது வதனத்தின் சுருக்கங்களையும் சிறிதாக்கி

மூலம் - இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
source : http://rishantranslations.blogspot.in/

வேடிக்கை வெறியர்கள்

நேற்று மாலை ஆறரை மணியளவில் நண்பர் ஒருவரை அண்ணாசாலையில் சந்திக்க திட்டம். ஆனால் சுமார் ஐந்து மணிக்கு வானம் இருட்டி, அடைமழை கொட்டி ‘உதார்’ காட்டிக் கொண்டிருந்தது. அரை மணி நேரம் மட்டுமே மழையின் ஆதிக்கம். வானம் மெல்ல வெளுக்க நண்பரை சந்திக்க கிளம்பினேன்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவன் அரண்டு விட்டேன். ஈக்காடுதாங்கல் பாலம் முழுக்க மனிதத்தலைகள். மெட்ரோ ரயில் புண்ணியத்தில் சாதாரண நாட்களிலேயே வாகனங்களால் பிதுங்கும் பாலம், திடீர் கூட்டத்தால் திக்குமுக்காடி போயிருந்தது. சில கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனவரிசை நீண்டிருந்த்து. தரைப்பாலமும் வாகனங்கள் நிரம்பி, சில இன்ச்சுகள் முன்னேறுவதற்குள்ளாகவே தாவூ தீர்ந்து டவுசர் கயண்டது. நடப்பதற்கு கூட வழியில்லாமல் டிராஃபிக் ஜாம் ஆகும் ஒரே நகரம் சென்னையாகதான் இருக்க முடியும். ஒன்றாவது கீரிலேயே கிளட்சை பிடித்துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஸிலேட்டர் கொடுத்து, பிரேக் பிடித்து கையெல்லாம் மரத்துப்போனது.
எல்லோருமே ஆற்றுக்கு நடுவில் மெட்ரோ ரயிலுக்கு அமைக்கப்பட்ட தூண்களுக்கு அருகில் அமைந்திருந்த அடிப்பகுதியை மையமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். வாகன ஓட்டிகள் பலரும் நடுரோட்டில் வண்டியை ‘பார்க்’ செய்து, ஒரு பயலும் முன்னேற முடியாதபடி வன்முறையில் ஈடுபட்டார்கள்.
அடையாறு ஆற்றில் ஏதோ கலவரம் என்று புரிந்துகொண்டேன். சில வருடங்களுக்கு முன்பாக நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் ஒரு கதிர்வீச்சு கருவி வீசப்பட்டு, சென்னைவாசிகள் உயிரைப் பிடித்துக்கொண்டு சில நாட்கள் வாழ்ந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அப்படி இல்லையாயின் யாரோ ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்க வேண்டும். அடையாறு மேம்பாலத்தில் மாதத்துக்கு ஒருவராவது குதித்து உயிர் மாய்த்துக்கொள்வது சமீபகாலமாக சென்னையில் புதியதாக ஏற்பட்டிருக்கும் மரபாகி விட்டது. யாரோ ‘ஸ்பாட்’ மாறி உயிர்நீத்திருக்கிறார்களோ என்றும் யூகித்தேன்.

Tuesday, September 17, 2013

வேண்டும் வேண்டும் மனித நேயம். வாழ்த்துகள் to ஜோசப் சேவியர் Joseph Xavier Dasaian

Prof. Dr. John Lee அவர்கள் தயாரித்த "UNITY in INDIA" ஆல்பத்துக்காக Joseph Xavier Dasaian ஜோசப் சேவியர்
 எழுதிய பாடல்..

வேண்டும் வேண்டும்
மனித நேயம்


ஜோசப் சேவியர் Joseph Xavier Dasaian   கவிஞர்,எழுத்தாளர் , மக்கள் நலம் பேணுபவர் .மனித நேயம் கொண்டவர்
அவரது வலைத்தளம் அலசல்
http://sirippu.wordpress.com/

Joseph Xavier Dasaian  Married to Stella Joseph
   
ஆன்மீகம் அழகானது

அரசியல் செய்யாத மனிதன் இல்லை, மனிதன் செய்யாத அரசியலும் இல்லை

வாழ்த்துகள் to ஜோசப் சேவியர் Joseph Xavier Dasaian

 

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Sunday, September 15, 2013

சந்தேகம் ஒரு பக்கம் வீசும் காற்றா!

அன்பே! என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்

ஒன்றுமில்லை ஆறுயிரே !

உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் எனைவிடுத்து நான் வரும்போதெல்லாம் லாப்டாப்பில்தானே உலா வருகிறாய்

'ஓ' நீங்கள் வேறு ஏதோ மனதில் கொண்டு பேசுவதென்ன!

நான் என்ன அவ்வளவு அறியாதவனா ! உன்னை பல நாட்களாக பார்க்கிறேன் . உன் செயல்பாடை, உன்னை சிறு வயதிலிருந்து நான் அறிவேன் . நீ லாப்டாப்பில்தானே எந்த நேரமும் மூழ்கிக் கிடக்கிறாய்!

நான் பார்க்கும் தொழில் சம்பந்தமாக சிலவற்றை தேடியே இந்த வேலையில் ஈடுபட்டுள்ளேன் என்று நான் உங்களிடம் பல முறை சொல்லியுள்ளேன்

இல்லை! நான் நீ செய்வதை பார்க்க வேண்டும்.

நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? இத்தனை காலங்கள் நீங்கள் காட்டிய காதலும் ,பாசமும் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் எவ்வாறு மறைந்து போனது

அன்பே!எனது பிரியமானவளே! உன் மீது நான் கொண்ட காதலும் ,பாசமும் உயர்வானது . வருத்தம் கொள்ளாதே. நான் வரும்போது உன் நினைவோடிருக்க நீ மற்றொன்றில் கவனம் செலுத்துவது என் மனம் தாங்கிக் கொள்ள முடியாமல் துடிக்கிறது

Saturday, September 14, 2013

கற்பனை ஆக்கத்திற்கு வழி வகுக்கும்


குறிக்கோளை அடைய கனவு காண்
பறிக்கப்பட்ட கனவு பறந்து போகும்

கற்பனை ஆக்கத்திற்கு வழி வகுக்கும்
கற்பனை நினைப்பதோடு நின்று விடுதல் விரயம்

கல்வி வழியைக் காட்டும்
கற்ற கல்வியை நாடி நடப்பது நம் நினைவில் நிறுத்து

உறுதியான நம்பிக்கை உரிய இடத்தில் சேர்க்கும்
உயர்ந்த நம்பிக்கை உயர்வான இடத்தில் சேர்க்கும்

தேடல் திருப்புமுனையாக அமைவது உறுதி
தேடல் திசைமாறி செலவது நன்மை பயக்காது

தேடலுக்கு உறுதுணையாக இறைவனைது நம்பிக்கை தேவை
தேடும் அறிவை நம்மிடம் தந்து அதன் பலனை அடைய இறைவனது உதவி தேவை

மதிப்பினை இழந்தது மனித நாணயம்

மதிப்பினை இழந்தது மனித நாணயம்

விதிப்பயன் என்பது வீணர்க் கூவலே

துதிப்பவர் கூட்டமும் துய்த்தல் வேடமே    

கொதிப்பினக் காட்டினால் நிற்கும் நாடகம்!


சிந்திய உழைப்பினைச் சிறிதும் போற்றிடாச்

சந்தையில் இந்தியா சரிவைக் காண்பதால்  

இந்திய மதிப்பினை இழந்த நாணயம்

நொந்துதான் அழுவதா நினைப்பாய் தோழனே!    


இருபுறம் உள்ளதால் இந்த நாணயம்

தருவதும் மனிதனின் தரத்தைக் கூறிட

வருவதும் அழகிய வழக்குச் சொல்லிலே

பொருளினை மதிப்பவர் புரிந்துகொள்ளுவர்!  

Friday, September 13, 2013

தாழ்மையான எண்ணத்தில் தனித்து விடப்பட்டேனோ!

ஏன் நான் கூட்டதில் தனிமைப் படுத்தப்பட்டதாக நினைக்கிறேன்

ஏன் நான் சிரித்துக் கொள்கிறேன் ஆனால் அதனை அனுபவிக்காமல்

ஏன் நான் உறங்குகிறேன் சோர்வு உடலில் இல்லாமல்

ஏன் நான் காரணமில்லாமல் நேர்மையற்றவனாக  இருப்பதாக நினைக்கிறேன்

ஏன் நான் மற்றவருக்கு பெரும்பாலும் நிழல் போல் இருப்பதாக நினைக்கிறேன்

ஏன் நான் என் வாழ்க்கை என்னுடைய வாழ்க்கையாக நினைப்பதில்லை

ஏன் நான் என் கால் தடங்கள் மணலில் இருப்பதாக உணர்கிறேன்

ஏன் நான் எனக்கு தேவையானதை போதுமானதாக கிடைக்கவில்லை என்ற நினைப்பில் இருக்கிறேன்

ஏன் நான் காலம் என்ற அலைகள் அதனை நிறைவு செய்யும் என்று காத்திருக்கிறேன்

ஏன் நான் என் பார்வையில் என்னையே இழந்ததாக கருதுகிறேன்

ஆனால் நான் அறிகிறேன் நான் நீண்ட தூரம் கடக்க வேண்டும் எனது நிறைவான புன்னகையை பரப்புவதற்கு

Monday, September 9, 2013

விளம்பர உலகம்

ஒரு கோடியில் தயாரிக்கப் படும் படம் நல்ல கருத்துடன் அருமையாக எடுக்கப் பட்டிருந்தால் 'ஓகோ ' என்று ஓடுகிறது. ஆனால் அதற்கும் நான்கு கோடி விளம்பரம் செய்ய வேண்டி யுள்ளது . தொலக்காட்சிகள் ,மீடியாக்கள் ஒத்துழைப்பு தேவை. அவர்கள் நல்லதையும் கெட்டதாக்கி விடுவார்கள், கெட்டதையும் நல்லதாக்கி விடுவார்கள் .

சாதாரன கவிஞனின் சாதாரண பாட்டு நல்ல இசையால் மக்கள் மத்தியில் பிரபலமாகின்றது .
பல இஸ்லாமிய கவிஞர்கள் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாடை வைத்துக் கொண்டு தங்களின் பாடல்களை படத்தில் வராமல் செய்து தேவையில்லாமல் மக்களுக்கு அறிவை சேர்க்க விடாமல் தடுத்து விடுகின்றனர் .
பல சிறந்த கவிஞர்களில் சிறந்த கவிஞராக ஹசன் புகாரி (அன்புடன் புகாரி )என்பவரும் ஒருவர். மறோருவர் எம்.ரிஷான் ஷெரீப் (இவர் இலங்கையில் உள்ளவர்). இவர்களுக்கு பல அறிமுகம் இருப்பினும் அன்புடன் புகாரி கனடாவில் வசிப்பதால் அவரது கவிதைகளை படங்களில் அதிகம் வராமல் இருப்பது வேதனையாகும் .குறிக்கோள் உயர்வு .
ஆனால் கொண்டு சேர்க்க முடியவில்லை படக்காட்சிகளின் பாடல்களுக்கு .
இவர்கள் மிகவும் மார்க்க அறிவு உள்ளவர்கள் . தேவையானதை அவர்களும் முயற்சி செய்ய வேண்டும் என்பது எனது தாளாத ஆசை .

கவிதைகளோடு அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.in/
http://mrishanshareef.blogspot.in/

எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

மூடநம்பிக்கை என்றால் என்ன !

'மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு கருணாநிதி வலியுறுத்தல்' - செய்தி .

ஒரு சட்டம் இயற்ற பல விதிகள் உண்டு .
மூடநம்பிக்கை என்றால் என்ன !
எது! எது ? மூடநம்பிக்கையில் வரும்

ஒரு செயல் நடைபெற ஒரு காரியம் உண்டு
ஒரு காரியம் நடைபெற காரணகர்த்தா யார்
ஒரு வினைக்கு எதிர் வினை உண்டு
வினையை உருவாக்கியவன் யார் !
இயற்கையாக நிகழ்ந்தது என்றால் அந்த இயற்கையை உருவாக்கியவன் யார்
இயற்கை இயற்கையாக நிகழ்ந்ததா !
இயற்கையின் விளக்கம் என்ன?
கருவில்லாமல் உருவில்லை
இருக்கும் கருவை உருவாக்கியவர் யார்

Thursday, September 5, 2013

Nafilah நஃபிளா


There are many Mustahab prayers which are generally called Nafilah, but more stress has been laid on the daily Mustahab prayers.

தமிழ் தகவல் களஞ்சியம்


It is a Tamil Library at a single Link Great Effort.
 
Please keep this link as a Book Mark.
Anything in Tamil you want  in Tamil you Get It.
 
Great effort by few persons - Thanks to all who were involved - It is a  Service to Tamil Community as a whole HATS OFF to People Involved.
This would be great Help to all Tamil Friends Abroad.
Please forward this to as many as Tamils possible.
Thanks to the forwarders


 http://www.infitt.org/pmadurai/pmworks.html



Tamil Treasure Trove - Unbelievable collection - ENJOY


warm regards,
K.Parthasarathi
The winds of change are always blowing;
it is for us to raise our sails.

Wednesday, September 4, 2013

தாய்லாந்தில் தமிழ் முஸ்லிம் மக்கள்

தாய்லாந்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் பலதரப்பட்ட தொழில் செய்கிறார்கள். அந்த தொழிலில் உயர்ரக மாணிக்க ,வைர கற்களும் அடங்கும் .
தொழிலோடு அல்லாமல் அவர்கள் மக்களுக்கு செய்யும் சேவைகளும் அதிகம். தமிழ் வளர அவர்களது சேவையும் குறிப்பிடத் தக்கது .
தங்களுக்குள் ஒரு சங்கம் (பேங்காக்கில்) அமைத்து ஒன்று கூடி ஒற்றுமையாக செயல் படுகிறார்கள் .
அவர்களுக்கு நமது அன்பான வாழ்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம் .
அன்புடன்
முகம்மது அலி ஜின்னா

பிரமாண்டமான கல்யாண நிகழ்வு

இலங்கையில் கடந்த வாரம் ஒரு பிரமாண்டமான கல்யாண நிகழ்வு, இலங்கை காவல்துறையால் (Police) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை போன்ற அதி தூய தேசத்தில் எந்தவொரு குற்றச் செயல்களோ, வன்முறைகளோ, விபத்துக்களோ, கொள்ளையோ, கொலையோ எதுவுமே நடைபெறாமல் இருப்பது இலங்கைக் காவல்துறைக்கு அலுப்பூட்டக் கூடியதாக அமைந்திருக்கக் கூடும். எனவே அவர்கள் நேரத்தைக் கடத்துவதற்காக அல்லது தமது பொழுதைப் போக்குவதற்காக, கூட இருக்கும் நாய்களையெல்லாம் பிடித்து, மிக ஆடம்பரமாகவும், வெகுவிமரிசையாகவும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.

Tuesday, September 3, 2013

ஏனோ இந்த Internet கசப்பதே இல்லை


வாயிலின் சின்னஞ்சிறு துவாரங்களையும்
அக்கறையாய் அடைக்க அடைக்க
அத்தனையையும் தாண்டிக்கொண்டு
வந்து வந்து விழும் வற்றா
Spam மடல்கள்

விட்டேனா பாரென்று துரத்தித் துரத்தி
ரகசியத் தகவல்களைச்
அசந்த கணத்தில்
சாதுர்யமாய்க் களவாட
தடாலடியாய் விரட்டும் Phishing தளங்கள்

வெறுப்பிலும் கடுப்பிலும் கிடத்தி
எல்லையிலா எரிச்சலை ஊட்டி
வாட்டி வதைக்க
வகை வகையாய் புறப்பட்டு
தினந்தினம்
புரியாப் பனிமூட்டமாய்ச் சூழ்ந்து
கண்கட்டி உள்நுழையும் Virus மடல்கள்

எங்கள் வீட்டில் ஒரு செடி /புதிய கலவை




படத்தினை நன்றாக கவணியுங்கள்

அடி செடி ஒன்று அதில் மற்றொரு செடி (நன்தோட்டம் செடி)
மேற்புறம் புதிய நன்தோட்டம் செடி இலைகள் ஆனால் அடி செடி பூக்கள்
நன்தோட்டம் செடி .பெரியதாக உள்ள பூ கண்களில் வைத்துக் கொண்டால் குளிர்ச்சியாக இருக்கும் .
இரண்டு செடியின் பெயர்களை நீங்கள் சொல்லுங்கள். சரியான பெயர் தெரியவில்லை

வித்தியாசமானவர்கள்

பல வருடங்களுக்கு முன் என்னுடன் வேலை பார்த்துவந்த ஒருவர் பேட்டரி வாங்கி டேப்ரிக்கார்டருக்கு போடுமுன் அதில் அன்றைய தேதியை மார்க்கர் பேனாவில் குறித்துவிடுவார். இத்தனைக்கும் இந்த ஊரில் கரண்ட் போவது கிடையாது என சொல்லலாம். அப்படி அந்த பேட்டரி இவர்நினைத்த தவணைக்குமுன் 'பல்பிஸ்' ஆகிவிட்டால் யூனியன் கார்பாய்டு நிறுவனத்தின் மீது ஒரு கேஸ் போடலாம் [ எப்படியும் 30 வருடத்துக்குள் பதில் கிடைக்கும் ] , அவரின் மற்ற திருவிளையாடல்களில் ஒன்று கோல்கேட் பேஸ்ட் வாங்கினால் அதன் பேக்கிங்கை வீசி விடாமல் கடைசி 'பிதுக்கள்' வரை வைத்திருப்பார். [ உபயோகிக்க ஆரம்பித்த தேதி நிச்சயம் உண்டு ]
அவர் வாங்கிய அந்த டேப்ரிக்கார்டர் ஏ.சி ரூமில் இருந்தாலும் குரங்குக்கு சட்டை போட்டமாதிரி ஒரு துணியில் கவர் செய்து போட்டிருப்பார், கேட்டால் 'பொருள்களை என்னை மாதிரி பாதுகாக்க யாரும் கிடையாது' என சொந்த புராணம் வேறு.
ஒருவர் வெள்ளிக்கிழமையில் காசு [பிச்சை] கேட்டு வருவார், 10 காசுக்கு மேல் ஒரு காசு கொடுத்தாலும் நமது பூர்வீகம், மற்றும் மொகளாயர் காலத்தில் உள்ள நம் முன்னோர் முதற்கொண்டு ---------------போட்டு எழுதும் அளவுக்கு திட்டுவார்.

Sunday, September 1, 2013

தேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை மலேசியாவில் [ 3 ]

தேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை மலேசியாவில் [ 3 ] தேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை மலேசியாவில் [ 2 ] தேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை மலேசியாவில்(பகுதி 1). தீனிசைத் தென்றல்,தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா நீடூர்.
 Jazakkallahu Hairan நன்றி