Tuesday, September 3, 2013

ஏனோ இந்த Internet கசப்பதே இல்லை


வாயிலின் சின்னஞ்சிறு துவாரங்களையும்
அக்கறையாய் அடைக்க அடைக்க
அத்தனையையும் தாண்டிக்கொண்டு
வந்து வந்து விழும் வற்றா
Spam மடல்கள்

விட்டேனா பாரென்று துரத்தித் துரத்தி
ரகசியத் தகவல்களைச்
அசந்த கணத்தில்
சாதுர்யமாய்க் களவாட
தடாலடியாய் விரட்டும் Phishing தளங்கள்

வெறுப்பிலும் கடுப்பிலும் கிடத்தி
எல்லையிலா எரிச்சலை ஊட்டி
வாட்டி வதைக்க
வகை வகையாய் புறப்பட்டு
தினந்தினம்
புரியாப் பனிமூட்டமாய்ச் சூழ்ந்து
கண்கட்டி உள்நுழையும் Virus மடல்கள்


நிம்மதியில் அசரவிடாமல்
அக்கறையாய்க் காத்து வைத்திருக்கும்
ஆவனங்களைச் சூரையாட
சித்துமுத்து வேலைகாட்டி உள்நுழைய
வெறிகொண்டலையும் Hackers

இன்னும் இவைபோல் எத்தனையோ
ஏராளம் ஏராளம் என்று பிலுபிலுத்துக் கிடந்தும்
ஏனொ இந்த Internet கசப்பதே இல்லை
source : http://anbudanbuhari.blogspot.in

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஏராளம் ஏராளம்... ஆனாலும் கசப்பதே இல்லை...