அல்லாவை அல்லாமல் இறையோனில்லை
அம்மாவைப் போலிங்கு சொந்தம் இல்லை
சொந்த பந்தம் வாழ்வில் உண்டு - பெற்ற
பெற்ற தாய் போல சொந்தம் ஏது?
அல்லாஹ்வைப்...
உயிர் ஒன்று உயிர் செய்ய இறை செய்யும் ஒரு மாயம்
உடல் கொண்டு தாய் செய்ய வைத்தானம்மா
தாய்யுண்ணும் உணவோடு உணர்வெல்லாம் குழந்தைக்கும்
தரமாகப் சேர வைத்தானம்மா!
தாயாரின் காலுக்குக் கீழ் சொர்க்கம் உண்டென்று
தாஹா நபி சொன்ன மொழி தானம்மா!
தாய் தந்த அன்புக்கும் தாலாட்டுப் பாட்டுக்கும்
யார் என்ன செய்தாலும் நிகராகுமா?
எப்போதும் மெய்தானே !
அல்லாஹ்வைப்...
அல்லாவை அல்லாமல் இறையோனில்லை !
அம்மாவைப் போலிங்கு சொந்தம் இல்லை
சொந்த பந்தம் வாழ்வில் உண்டு - பெற்ற
பெற்ற தாய் போல சொந்தம் ஏது?
அல்லாஹ்வைப்...
நூல் போல இளைத்தாலும் ஆல் போல பெருத்தாலும்
சூல் கொண்ட நிலையாலே சகித்தாளம்மா!
இமை மூடி தூங்காமல் இடைவேளை இல்லாமல்
இடையூறை எதிர் கொண்டு ஜெயித்தாளம்மா!
கொடி போன்ற இடை கூடி நடை போட இயலாமல்
அடிமீது அடி வைத்து நடந்தாளம்மா!
எந்நாளும் மறவேனே !
அல்லாஹ்வைப்...
அல்லாவை அல்லாமல் இறையோனில்லை !
அம்மாவைப் போலிங்கு சொந்தம் இல்லை
சொந்த பந்தம் வாழ்வில் உண்டு - பெற்ற
பெற்ற தாய் போல சொந்தம் ஏது?
அல்லாஹ்வைப்...
குனிந்தாலும் நிமிர்ந்தாலும் தன் பிள்ளை அசைகின்ற
அசைவெல்லாம் தாயுள்ளம் அறிவாளம்மா!
வரும் பிள்ளை தன் தொல்லை தீர்க்கின்ற கனவோடு
பெறும் நாளை எதிர் நோக்கி நடந்த்தாளம்மா!
தாய் தன்னை தலைமீது சுமையேற்றி கஹ்பாவை
வலம் வந்து நின்றாலும் நிகராகுமா ?
ஒரு நாளில் ஒரு வேளை தான் நின்ற இடம் மாறி
நகர்ந்தாளே அதற்கேதும் ஈடாகுமா ?
என் வாழ்வே ... என் தாயே ...
அல்லாஹ்வைப்...
இனிப்பெல்லாம் கசப்பாக புளிப்பெல்லாம் இனிப்பாக
சுவைத்தாலும் நமக்காக சகித்தாளம்மா !
தவிப்பெல்லாம் இனிப்பாக அலுப்பெல்லாம் உவப்பாக
விழிப்போடும் களிப்போடும் கழித்தாளம்மா !
விழுந்தாலும் எழுந்தாலும் விதி தாங்கும் நிலம் போல
அழுந்தாலும் உடல் தாங்கி வளர்ந்தாளம்மா!
அகழ்ந்தாலும் நமை தாங்கும் தரை போல பொருத்தாளே
புகழ்ந்தாலும் வார்த்தைக்கு அளவேதம்மா ?
என் தாயே... மறவேனே ...
அல்லாஹ்வைப்...
வெளியேறும் தன்பிள்ளை பெறும் நேரம் அவள் துன்பம்
மொழியாவும் மொழிந்தாலும் முடியாதம்மா !
உள்ளு(luu)றும் சிரமங்கள் ஒரு நூறு இருந்தாலும்
முன்னூறு நாள் கண்டு வென்றாளம்மா !
பட்டாடை நான் போர்த்தி பாராட்டத் திறனில்லை
பாட்டாடை இதை நெய்தேன் அம்மா ...அம்மா !
அன்போடு இதை ஏற்று அம்மாவின் பெருமைக்கு
அணியாக அணிவாயே அல்லாஹ் .. அல்லாஹ் ..
அல்லாஹ்வைப்...
அல்லாவை அல்லாமல் இறையோனில்லை !
அம்மாவைப் போலிங்கு சொந்தம் இல்லை
சொந்த பந்தம் வாழ்வில் உண்டு - பெற்ற
பெற்ற தாய் போல சொந்தம் ஏது?
அல்லாஹ்வைப்...
பாடல் -கூத்தாநல்லூர் சன்மார்கத் தொண்டன் ஹாஜா மொய்னுதீன்
பாடல் -கூத்தாநல்லூர் சன்மார்கத் தொண்டன் ஹாஜா மொய்னுதீன்
பாடல் பாடியவர் -தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள்.
வீடியோ - S.E.A. முஹம்மது அலி ஜின்னா, நீடூர்.
தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
1 comment:
அருமை அய்யா..தொடருங்கள்
Post a Comment