Wednesday, August 29, 2012

இறைவன் தடுக்காதவற்றைத் தடுக்கப்பட்டதாய்க் கூறலாமா?

இறைவன் தடுக்காதவற்றைத் தடுக்கப்பட்டதாய்க் கூறலாமா?
ஹதீசுகள் பற்றி ஓர் உரையாடல் எழுந்தது.

இறைவன் ஹதீசுகளைப் பற்றி ஏதும் குர்-ஆனில் சொல்லவில்லை என்ற கருத்தை முன்வைத்தேன். அதற்கு மறுமொழ்யாக நண்பர் ஒருவர் இப்படி கூறினார்.

*

எனக்குத் தெரிந்தவரையில் இது உண்மை இல்லை, சுன்னா ஹதீசுகள் என்ற வடிவில் இருக்கின்றது. அது இஸ்லாமின் முக்கியமான ஓர் அங்கம். பல வசனங்களில் இறைவன் சுன்னாவைப் பின்பற்றச் சொல்கிறான். கீழே உள்ள இறைவசனம் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
========




Sahih International
[We sent them] with clear proofs and written ordinances. And We revealed to you the message that you may make clear to the people what was sent down to them and that they might give thought.
Tamil
தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்
Source :http://quran.com/16/44
 ==========
“We have revealed unto you the Remembrance that you may explain to mankind that which has been revealed for them” (16: 44).

உதாரணமாக, குர்-ஆனில் தொழவேண்டும் என்று மட்டும்தான் இருக்கிறது. எப்படித் தொழுவது என்பதை இறைத்தூதர்தான் சொல்லித்தந்தார்.

*

இதற்கான என் பதில்:

மேலே உள்ள இறைவனின் வசனம் தெளிவாக இருக்கிறது.

அறியாதவர்களுக்கு குர்-ஆன் வரிகளுக்கான விளக்கத்தைக் கூறுங்கள் என்றே இறைவன் தன் தூதரிடம் கூறுகிறான்.

குர்-ஆனுக்கு மாற்றமான விசயங்களை போதிக்கச் சொல்லவே இல்லை.

இறைதூதர், தான் வாழுகின்ற காலத்தில் உள்ள மனிதர்களுக்கு விளக்கம் கூறினார்கள். அவை மட்டுமே ஹதீசுகள்.

அவை தவிர குர்-ஆனை விட்டு விலகிய எதுவும் ஹதீசாக முடியாது. மற்றவையெல்லாம் இறைவனின் கருத்துக்கள் ஆக முடியாது. இதை நாம் புரிந்துகோள்ள வேண்டும்.

இறைவன் கூறிய கருத்துக்களை விட்டுவிட்டு மற்றவர்களின் கருத்துக்களை நாம் எடுத்துக்கொண்டால் அதுதான் உண்மையிலேயே இணைவைப்பதாகும்.

இறைவன் தொழச் சொன்னான். தொழுகையை இறைத்தூதர் விளக்கினார்.  நிச்சயமாக அது சுன்னாதான், ஹதீசுதான்.

இறைத்தூதர் சொன்ன ஹதீசுகளும் செய்த விளக்கங்களும் அப்படியே மாற்றுக்குறையாமல் நமக்குக் கிடைக்க வேண்டும்.

அதுவன்றி வந்தவர் போனவரெல்லாம் சொல்லும் கருத்துக்கள், அதுவும் குர்-ஆனில் குறிப்பிடப்படாத விசயங்களை எவர் பேசினாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாது.

உதாரணமாக இசை கூடாது என்று குர்-ஆனில் கூறப்படவில்லை. அதை ஹதீசு கூறுகிறது என்று சொன்னால், அங்கே பெரிய சந்தேகம் எழுந்துவிடுகிறது.

அந்த ஹதூசுகள் எதன் அடிப்படையில் உருவாகின என்ற கேள்வி வந்துவிடுகிறது. அது இறைவனுக்குப் புறம்பானது என்று ஆகிறது.

நான் தடுக்காதவற்றைத் தடுக்கப்பட்டதாய்க் கூறுவது கூடாது என்று இறைவனே கூறுகிறான்.

10:59. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”

இறைதூதர் இறைவனின் வசனத்திற்கு மாற்றாக எந்த ஒன்றையும் கூறியிருக்கவே மாட்டார். அந்தத் தவறை ஒருக்காலும் இறைத் தூதர் செய்யமாட்டார்.

அப்படிச் செய்தவர்களெல்லாம் இஸ்லாமை அழிக்க நினைத்தவர்களும், தங்களின் சொந்தக் கருத்துக்களை இறைவன் கருத்தென்றும் இறைத் தூதர் கருத்தென்றும் சொல்லும் பொய்யர்களே என்று நம்புவோமாக!

இதோ நீங்கள் இட்ட இறைவசனத்தின் தமிழ் வடிவம்:

16:44. தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.

மேலும் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் கீழே வருகின்றன:


Sahih International
[We  sent  them]  with  clear  proofs  and  written  ordinances.  And  We  revealed  to  you  the message  that  you  may  make  clear  to  the  people  what  was  sent  down  to  them  and  that they  might  give  thought.

Muhsin Khan
With clear signs and Books (We sent the Messengers). And We have also sent down unto you (O Muhammad SAW) the reminder and the advice (the Quran), that you may explain clearly to men what is sent down to them, and that they may give thought.

Pickthall
With clear proofs and writings; and We have revealed unto thee  the Remembrance that thou mayst explain to mankind that which hath been revealed for them, and that haply they may reflect.

Yusuf Ali
(We sent them) with Clear Signs and Books of dark prophecies;  and We have sent down unto thee (also) the Message; that thou mayest explain clearly to men what is sent for them, and that they may give thought.

Shakir
With clear arguments and scriptures; and We have revealed to you the Reminder that you may make clear to men what has been revealed to them, and that haply they may reflect.

Dr. Ghali
With clear evidences and the Scriptures, (i.e., the Zubur, pl, of Zabur, usually understood to be the psalms) and We have sent down to you (i.e. the prophet) the Remembrance that you may make evident to mankind what has been sent down (ever since) and that possibly they would meditate.

Source : http://anbudanislam

No comments: