Wednesday, August 29, 2012

துன்பம் துவள இறைவனை அணுகும்போது இறைவனோடு ஒன்றுபடுதல் முழுமையாக இருக்கும்

விரும்பாததின் மேல் விருப்பப்படு!
துயரமும் நன்மையைத் தரும் ஆற்றல் உள்ளது .அது உன்னை இறைவன் பக்கம் இழுக்கும்.  துன்பம்  துவள  இறைவனை  அணுகும்போது இறைவனோடு ஒன்றுபடுதல் முழுமையாக இருக்கும்  நீ விரும்பாத மனைவி உனக்கு கிடைத்து விட்டால் அவளை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை .அதற்க்கு மாறாக அன்பை கொடுத்து அவளை உன் மனதோடு ஒன்ற வழியை நாடு! . நம் குழ்ந்தை தவறு செய்தால் நாம் அவனை ஒடுக்குவோமா! அல்லது ஒதுக்கிவிடுவோமா! அவனிடத்து உள்ள பாசம் போய் விடுமா ?  நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதால் இறைவனை குறை சொல்வதுபோல் உள்ளது, எந்த காரியமும் ஒரு நன்மைக்காகவே  இருக்கும் என்பதனை நம்பாதவனுக்கு காலம் முழுதும் கவலைதான்
நினைத்ததெல்லாம் கிடைத்துவிட்டால் மகிழ்வில்லை .வாடைக்குப்பின் தென்றல்  வரும் .தென்றல் முடிய கோடை வரும் . தென்றல் மட்டும் இருந்தால் கோடைகாலத்தில் கிடைக்கும் பலன் கிடைக்காமல் போய்விடும் . நல்ல கொடையில்தான் நிலங்கள் பாலமாக வெடித்து பயிர் வளர வழி வகுக்கும் . பின்பு மழை வந்தால் செடிகள் தழைக்கும் .
காலமே மாறி, மாறி வரும் நிலையினை நாம் விரும்பும் போது மனதில் மட்டும் மகிழ்வு மட்டும் குடி இருக்க வேண்டும்
என்ற பேராசை ஏன்? நிழலின்  அருமையை  வெயிலுக்குப் பின் அறியமுடிகின்றது . வாழ்வின் நிலையும் அதுதான் .துன்பம் வந்து மறையும்  போதுதான் மகிழ்வினை  முழுமையாக அறிய முடியும் இருளுக்குப் பின் ஒளி உண்டு.
  110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.


துன்பம் வருவதை ஒருவரும் விரும்புவதில்லை.
துன்பம் வருவது வாழ்வின் அடிப்படை உண்மையை உனக்கு  உணர்த்தும்.
மற்றவர் படும் துன்பத்தினை அறிய உன் மனம் கசியும்.
அனைத்துக்கும்  மேலாக இறைவனோடு ஒன்றி அவனை தொழும் சிறப்பு வந்தடையும் . அப்பொழுது மற்றவர் புகழவோ அல்லது வெறும் கடமைக்காகவோ இறைவனை தொழ மாட்டோம் . மனம் ஒன்றி தொழுவதுதான் முக்கியம் . அதனை அவசரப்பட்டோ அல்லது ஓடி வந்து  தொழுதோ  நாம் தொழுது விட்டோம் என்ற நிலை வராமல் நம் தொழுகைக்கு பின்பு நாம் இறைவனிடத்து கேட்கும் வேண்டுதலை இறைவன் ஏற்றுக்கொளுபடி நம் தொழுகை அமைய வேண்டும்.

சிலர் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கும் போது கோவிலைப் பார்த்து வண்டியை நிறுத்தாமல் ஒரு கும்மிடு போட்டுச் செல்வதனை நாம் பார்திருகின்றோம்!!! இந்த நிலை நமக்கு வேண்டாம் .

சில பள்ளிவாசல்களில் பத்து பேர்தான் தொழுவார்கள் .ஆனால் அந்த தொழுகைக்கு மைக்கை வைத்து இமாம் சப்தத்தை பெருக்கி தொழ வைப்பார் . இது எந்த வகையில் மார்க்கம் அனுமதிக்கின்றது?
குர்ஆன் ஓதக் கேட்கும் பொழுது  அதற்க்கு  மரியாதை   கொடுப்பது  அவசியம். அதன் ஒலி கடைத் தெருவுக்கு கேட்கும் அளவுக்கு  ஒலி பெருக்கி வழியாக் கேட்கச் செய்கின்றனர். அந்த குரான் ஓதும் குரலுக்கு மதிப்பில்லாமல் போய் விடும் நிலையை இவர்கள் உருவாக்குவது சிறந்த செயலாக ஒரு காலமும் இருக்க முடியாது .தொழுகையில் பின் தொடர்ந்து தொழுபவர்களுக்கு மட்டும் கேட்கும் அளவுக்குத்தான் இமாம் குரலை உயர்த்தி ஓதவேண்டும் .

சில நேரங்களில் பள்ளி
வருமானத்திற்க்காகவோ ஒரு நல்ல காரியத்திற்க்காகவோ பணம் சேகரிக்க உண்டியல் கொடுத்து பணம் சேக்கும் நேரம் வரை யாசின் ஓதுகின்றனர் . அது பணம் சேர்பதற்காக சேகரிப்பதற்காக  மட்டும் ஒதப்படுவதாக அமைந்து விடுகின்றது.
குர்ஆன் ஓதுவதும் ,தொழுவதும் இறைவனுக்காக மட்டும் இருக்க வேண்டும்

 

No comments: